ஜனா­தி­ப­தியின் சிம்­மா­சன உரையில் இன­வாத கருத்­துக்கள் மறைந்­தி­ருந்­தன: சரத் பொன்­சேகா

Published By: J.G.Stephan

08 Jan, 2020 | 11:25 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

ஜனா­தி­ப­தியின் சிம்­மா­சன உரையில் இன­வாத கருத்­துக்கள் மறைந்­தி­ருந்­தன. இன­வா­தத்தை தூண்­டிக்­கொண்டு நாட்டை முன்­னுக்கு கொண்­டு­செல்ல முடி­யாது. அத்­துடன் புதிய அரச தலை­வ­ருக்கு வழங்­கப்­படும் அணி­வ­குப்பு மரி­யாதை ஜனா­தி­ப­திக்கு மாத்­திரம் உரி­ய­தல்ல. அதனை பாது­காப்­பது அனை­வ­ரதும் கடமை என ஐக்­கிய தேசிய கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை எதிர்க்­கட்­சி­யினால் கொண்­டு­வந்த ஜனா­தி­ப­தியின் கொள்கை பிர­க­டன உரை மீதான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கை யில்,

மேற்­கத்­திய கலா­சா­ரத்தை பின்­பற்­று­ப­வர்கள் என எம்மை விமர்­சிக்­கின்­ற­வர்கள், 77 வரு­டங்­க­ளுக்கு பின்னர் மேற்­கத்­திய கலா­சார ஆடையில் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ  பாரா­ளு­மன்ற சிம்­மா­சன உரையை நிகழ்­தி­யது தொடர்பில் விமர்­சிக்­க­வில்லை. அவர் அரை கை சட்­டை­யுடன் பாரா­ளு­மன்­றத்­துக்கு வரு­வாரோ என்ற அச்சம் எமக்­கி­ருந்­தது. என்­றாலும் மேற்­கத்­திய கலா­சார ஆடையில் வந்­தமை அவ­தா­னிக்­கத்­தக்­கது.

 பாரா­ளு­மன்ற கெள­ர­வத்தை பாது­காத்­துக்­கொண்டு முன்  செல்ல நட­வ­டிக்கை எடுப்­ப­தாக ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருந்தார். அதனை நாங்கள் வர­வேற்­கின்றோம். ஆனால் தற்­போது அர­சாங்க தரப்பில் இருப்­ப­வர்­கள்தான் அன்று பாரா­ளு­மன்­றத்தை அகெ­ள­ர­வப்­ப­டுத்­தும் ­வ­கையில் நடந்­து­கொண்­டனர் என்­பதை ஜனா­தி­பதி தெரிந்­து­கொள்­ள­வேண்டும். 

அர­சாங்­கத்தின் பிர­தம கொற­டாவே அன்று சபா­நா­ய­கரின் மேசையில் இருந்த புனித வேதாகமத்தை வீசி எறிந்து தாக்­கு­தலை மேற்­கொண்டார். அதனால் பாரா­ளு­மன்ற கெள­ர­வத்தை பாது­காக்க ஆரம்­ப­மாக அர­சாங்க தரப்­பி­னரே எதிர்க்­கட்­சிக்கு முன்­மா­தி­ரி­யாக இருக்­க­வேண்டும். அதே­போன்று வறு­மையை ஒழிக்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக ஜனா­தி­பதி இங்கு தெரி­வித்தார். ஆனால் நாங்கள் வறுமை நிலையில் இருக்கும் 6இலட்­சம் ­பே­ருக்கு சமுர்தி நிவாரணம் வழங்­கி­யி­ருந்தோம். அந்த சமுர்த்தி பய­னா­ளி­களின் நிவா­ர­ணத்தை அர­சாங்கம் இல்­லா­ம­லாக்கி இருக்­கின்­றது.

 ஜனா­தி­பதி எளி­மை­யான போக்கை கடைப்­பி­டிப்­ப­தாக தெரி­வித்து சில நடை­மு­றை­களை பின்­பற்­று­கின்றார். ஆனால் அதில் குறிப்­பிட்ட வரை­யறை இருக்­க­வேண்டும். புதிய ஜனா­தி­பதி ஒருவர் பாரா­ளு­மன்­றத்­துக்கு வந்து அவ­ரது சிம்­மா­சன உரையை நிகழ்த்த வரும்­போது அதற்­காக மேற்­கொள்­ள­வேண்­டிய பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்கள் இருக்­கின்­றன. ஜனா­தி­ப­திக்­கான கெள­ரவ அணி­வ­குப்பு மரி­யாதை என்­பது ஜனா­தி­ப­திக்கு மாத்­திரம் உரி­ய­தல்ல. அது பாரா­ளு­மன்­றத்­துக்­கு­ரிய கெள­ரவம். அணி­வ­குப்பு மரி­யா­தையில் ஈடு­படும் இராணு­வத்­துக்கு வழங்கும் கெள­ரவம். அதே­போன்று அதனை கண்­டு­க­ளிக்கும் பொது மக்­க­ளுக்­கான வரப்­பி­ர­சா­த­மாகும். அதனை நாங்கள் பாது­காக்­க­வேண்டும். அர­சாங்­கத்தின் செலவை குறைப்­ப­தாக தெரி­வித்து வரு­டாந்தம் இடம்­பெறும் தலதா மாளிகை பெர­ஹ­ராவை நிறுத்த முடி­யாது. பெர­ஹ­ராவை நிறுத்­தினால் பாரி­ய­ளவில் செலவை குறைக்­கலாம். ஆனால் அது செய்ய முடி­யாத காரி­ய­மாகும். அந்த சம்­பி­ர­தா­யங்கள் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். ஜனா­தி­ப­தியின் எண்ணம் நல்­ல­தாக இருந்­தாலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத விட­ய­மாகும்.

  ஜனா­தி­ப­தியின் சிம்­மா­சன உரையில் இன­வாத கருத்­துக்கள் மறைந்­தி­ருந்­தன. தேர்தல் மேடை­களில் சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் இல்­லாமல் வெற்­றி­பெ­ற­வேண்டும் என்றே அந்த தரப்பில் இருந்து தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் நாங்கள் தமிழ், முஸ்லிம் கட்­சி­களை இணைத்­துக்­கொண்டே செயற்­பட்டோம். ஆனால் ஜனா­தி­பதி பத­வி­யேற்று நடத்திய உரையின்போது சிறுபான்மை மக்கள் தன்னுடன் இணைந்து செல்ல முன்வரவேண்டும் என அழைப்பு விடுக்கின்றார். அத்துடன் அவரது சிம்மாசன உரையிலும் சிங்கள பெளத்தத்துக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குவது என்ற கருத்திலே உரையாற்றியிருந்தார்.

நாட்டில் இனவாதம் மதவாதத்தை பரப்பிக்கொண்டு நீண்டதூரம் பயணிக்க முடியாது. அதனால் சகல இனங்களையும் அரவணைத்துக்காெண்டு செல்ல ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும். .என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46