காணி ஒப்பனை கிடைக்காமையால் அவதியுறும் தோட்ட  மக்கள்

Published By: Digital Desk 4

07 Jan, 2020 | 07:20 PM
image

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு ஜனவசம (J.E.D.B)  எனப்படும் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி  அதிகார சபை நிர்வகித்த காலப்பகுதியில் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி தோட்டங்கள் மூடப்பட்டது.இதன்போது அக்காலகட்டத்தில் தோட்டங்களில் தொழில் புரிந்தவர்களுக்கு நட்ட ஈடாக. அரை ஏக்கர் காணி வழங்கப்பட்டது. 

சுமார் 182 பேருக்குக் காணிகள் வழங்கப்பட்டன. இவர்களில்  ஐம்பது வீதமானவர்களுக்குக்  காணிக்கான ஒப்பனை இதுவரையில் கிடைக்கவில்லை.

காணிக்கு உரித்தான பலர் இறந்துவிட்டனர்.இதனால் இவர்களுடைய பிள்ளைகளுக்குக் காணிக்கான உறுதிப்பத்திரத்தைப் பெறுவதில் சிக்கல் ஏற்ப்பட்டடுள்ளது. காணிக்கான  ஒப்பனை கிடைத்தவர்கள் வங்கிக்கடன்கள் பெற்று வீடுகளை அமைத்தும்,தேயிலை பயிர்செய்கைகளை மேற்கொண்டும் சிறந்த நிலையில் உள்ளனர்.

ஆனால் காணிக்கான உறுதி கிடைக்காதவர்களுக்கு  வங்கிக்கடன் மற்றும் மின்சாரம் பெறமுடியாது பெறும் சிரமத்தில் உள்ளனர்.இவர்களின் அநேகரின் காணிகள் காடாக உள்ளன.இதேவேளை தோட்டத்தில் வேலையில்லாதவர்களுக்குக் காணிகள் வழங்கப்படவில்லை என்றாலும் இருக்கும் வீடுகளுக்கும் விவசாயம் செய்யும் காணிக்கும் உறுதிப்பத்திரம் வழங்கப்படும் எனத் தொழிற் சங்கங்களுக்கும்  உறுதி வழங்கிய போதிலும் இதுவரை கிடைக்காமையால் பெரும் இன்னல்களுக்கு முகம் கொத்து வருவதாகக் குறிப்பிட்டனர். ஆகவே உரிய அரசியல் தலைவர்கள் அல்லது அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு தமது காணிக்கான ஒப்பனையை பெற்றுத்தர கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41