கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழாமார்ச் 7 இல்

Published By: Daya

07 Jan, 2020 | 04:19 PM
image

இலங்கையையும் இந்திய மக்களை ஒன்றிணைக்கும் பிரசித்தி பெற்ற யாத்திரை ஸ்தலமான கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா மார்ச் மாதம் 7 ஆம்திகதி நடைபெறவுள்ளது இம்முறையும் சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பங்குகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் யாத்திரைஸ்தல பெருவிழாவிற்கான முன்னாயத்தயக்கூட்டம் மாவட்ட செயலகத்தில் நேற்றுக்காலை நடைபெற்றபோது இத்தகவலைத் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் போன்று இம்முறையும் பெருவிழா நடைபெறுவதற்கு அனைவரின் ஒத்துழைப்புக்களும் தேவை குறிப்பாகக் கடற்படையினரின் ஒத்துழைப்பு கட்டாயமானது குறித்த கோவிலானது கடலில் உள்ளமையினால் போக்குவரத்து உட்பட அனைத்துப் பாதுகாப்பிற்கும் பொறுப்பாகக் கடற்படையினர் செயற்படவேண்டும்.

கடந்த வருடம் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் இம்முறையும் அவ்வாறான ஒரு தொகையினரே கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. நேற்று நடைபெற்ற இக் கூட்டத்திலே திருவிழா ஆரம்பமாகும் 6 ஆம் திகதி மற்றும்7 ஆம் திகதிகளில் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பது தொடர்பில் துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

குறிப்பாக பஸ்போக்குவரத்து மற்றும் கடற்போக்குவரத்து இலங்கை இந்தியாவிலிருந்து வருகை தருகின்ற பக்தர்களின் பாதுகாப்பு தற்காலிகத் தங்குமிட வசதிகள் உணவு குடிநீர் வசதிகள் மின்சார வசதிகள் போன்றவை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

விசேடமாக பொலித்தீன் பாவனையை முற்றாகத் தடைசெய்வதற்கு பிரதேச சபை கூடிய கவனம் எடுக்கவேண்டும் என்றும் உணவு பரிமாறுபவர்கள் மற்றும் விற்பனை தொடர்பில் சுகாதாரத் திணைக்களம் மற்றும் பொதுப் பரிசோதகர்கள் கூடிய கவனம் எடுக்கவேண்டும் எனவும் கச்சத்தீவுக்குச் செல்கின்ற அரச அதிகாரிகள் விபரங்களையும் தந்துதவுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் கடற்போக்குவரத்தில் ஈடுபடும்படகுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும் எனக் குறித்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் நெடுந்தீவுப் பங்குத்தந்தை நெடுந்தீவுப் பிரதேச செயலாளர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர்கள் தீவகத்தைச் சேர்ந்த பிரதேச செயலாளர்கள் கடற்படையினர் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் துறைசார்ந்த திணைக்களத் தலைவர் கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56