வாரத்தில் 4 நாட்கள் மாத்திரமே வேலை : பின்லாந்து பிரதமரின் புதிய திட்டம்

Published By: Digital Desk 3

07 Jan, 2020 | 04:05 PM
image

பின்லாந்து நாட்டில் ஒரு வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே வேலை பார்த்தால் போதும் என்ற புதிய திட்டத்தை அந்நாட்டுப் பிரதமர் சன்னா மரின் அறிவித்துள்ளார்.

வாராந்த வேலை நாட்களைக் குறைப்பதன் மூலம் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட வாய்ப்பு ஏற்படும் என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சன்னா மரின் கடந்த டிசம்பர் மாதம் பின்லாந்து பிரதமராகப் பொறுப்பேற்றார். அந்நாட்டில் உள்ள பல கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் பிரதமராகியுள்ள இவர், தற்போது உலகின் மிக இளம் வயது பெண் தலைவர்களில் முதன்மையானவராகக் கருதப்படுகிறார்.

இது பற்றி அவர் கூறும்போது,

"மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். குடும்பங்களை நேசிப்பதற்கு நேரம் ஒதுக்குவது மற்றும் பொழுதுபோக்கு, கலாச்சாரம் போன்ற வாழ்க்கையின் பிற அம்சங்களுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்." என சன்னா மரின் தெரிவித்துள்ளார்.

மேலும், பணி வாழ்க்கையின் அடுத்த கட்டமாக இது அமையும் எனவும் அவர் கூறியுள்ளார். வேலை நாட்களிலும் ஒரு நாளின் வேலை நேரத்தை 8 மணிநேரத்திலிருந்து 6 மணிநேரமாகக் குறைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பின்லாந்தில் நடைபெற்றுவந்த தொழிலாளர் போராட்டத்தைத் தொடர்ந்து வேலை நாட்களைக் குறைக்கும் திட்டத்தை பிரதமர் மரின் அறிவித்திருக்கிறார். சம்பள உயர்வு, மேம்பட்ட பணிச்சூழல் முதலியவற்றுக்கு உத்தரவாதம் அளித்ததால் பல மாதங்களாக நடந்த போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

20 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்த தொழிலாளர் இயக்குத்துக்குப் பின், தொழிலாளர்களுக்கு ஏற்படும் அழுத்தங்களைக் கருத்தில்கொண்டு படிப்படியாக வாரத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறையும் நாளுக்கு 8 மணிநேர வேலையும் பரவலானது. காலப்போக்கில் ஒரு வாரத்தில் நாளுக்கு 8 மணிநேரம் வீதம் ஐந்து நாட்கள் வேலை என்பதே பொதுவான நடைமுறையாகிவிட்டது.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரான்ஸ் பிரதமர் லியோனல் ஜோஸ்பின் வாரத்துக்கு 35 மணிநேரம் வேலை செய்யும் முறையை அறிமுகம் செய்தார். ஆனால் இதற்கு ஒரளவுக்குத்தான் வெற்றி கிடைத்தது.

வேலை நேரத்தைக் குறைத்து சம்பளத்தைக் குறைக்காமல் வழங்குவதால் நிறுவனங்களுக்கு செலவு என்று ஒரு தரப்பினர் விமர்சிக்கின்றனர். ஆனால், இதனை மறுப்பவர்கள், தொழிலாளர்களுக்கு போதிய விடுமுறை கிடைப்பதால் வேலையில் சிறப்பாக செயல்பட்டு உற்பத்தி அதிகமாகி, சம்பளச் செலவை ஈடுசெய்யும் என்கின்றார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47