3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சரண குணவர்தனவுக்கு பிணை 

Published By: Vishnu

07 Jan, 2020 | 09:20 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு 3 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு பிரதான நீதிவான்  லங்கா ஜயரத்ன உத்தரவிட்டிருந்தார்.

முறையற்ற கொடுக்கல் வாங்கலூடாக அரசிற்கு நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக் குழு தாக்கல் செய்த வழக்கில், குற்றவாளியாக காணப்பட்டே அவருக்கு இந்த சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன் அதற்கு மேலதிகமாக குற்றவாளி  சரண குணவர்தனவிற்கு 3 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அபராதத் தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும் எனவும் இதன்போது நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந் நிலையில் கொழும்பு பிரதான நீதிவானின் தீர்ப்புக்கு எதிராக குற்றவாளியாக காணப்பட்ட சரண குணவர்தன, மேல் நீதிமன்ரில் உடனடியாக மேன் முறையீடு செய்துள்ளார். 

இந் நிலையில் அந்த மேன் முறையீட்டை கணக்கில் கொண்டு, சரண குனவர்தனவை 3 இலட்சம் ரூபா பெறுமதியான  சரீரப் பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதிவான் லங்க ஜயரத்ன  பின்னர் அனுமதி வழங்கினார்.

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக சரண குணவர்தன செயற்பட்ட 2007 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 3 வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.  

இதற்கு 9,60,000 ரூபா வீதம் முறையற்ற விதத்தில் வரி செலுத்தியமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் பிரதி அமைச்சர்  சரண குணவர்தனவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22