துமிந்த சில்வாவின் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் - ரொஷான் ரணசிங்க  

Published By: R. Kalaichelvan

07 Jan, 2020 | 02:37 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவின் வழக்கினை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சட்டமாதிபர் திணைககளம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீதிமன்றத்தினை அவமதித்த நீதிபதிகளும் முறையான  விசாரணைகளுக்கு உட்படுத்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை  விடுகின்றோம் என மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கும்   குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர்  சானி அபேசேகரவிற்கும் இடையிலான உரையாடலில் மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவை  சிறைக்கு அனுப்புவதே நால்வரது  எதிர்பார்ப்பும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் அதிகாரம் முழுமையாக இவரது  விடயததில்  வைராக்கியத்துடன்  செயற்படுத்தப்பட்டுள்ளன.

பாரத லக்ஷமன் கொலை விவகாரத்தில் பொலிஸ், குற்றப்புலனாய்வு பிரிவினர் சேகரித்த  சாட்சியங்கள் மற்றும் விசாரணைகளை மேற்கொண்ட விதம் தொடர்பில் தற்போது  பாரிய சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளன. 

இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நியாயம் நிலைநாட்டப்ட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43