அண்மைக்காலமாக நடிகர் விஷால் திரைத்துறையைக் கடந்து பல்வேறு பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து, கருத்து தெரிவித்து, மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதை அனைவரும் அறிவோம். 

அவரின் சொந்த விடயங்களைப் பற்றி கேட்டால் மட்டும், உதாரணத்திற்கு நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ளபோகிறீர்கள்? அல்லது யாரையாவது காதலிக்கிறீர்களா? என கேட்டால், அவரிடமிருந்து எனக்கு நிச்சயமாக திருமணம் நடக்கும் பெண் ‘இலட்சுமி’கரமாக இருப்பார். என்று சிரித்துக் கொண்டே பதிலளிப்பார். அப்போதெல்லாம் அந்த இலட்சுமிகரமான பெண் யார்? என்று தேடிக் கொண்டேயிருப்போம். ஆனால் அவர் வரலட்சுமி சரத்குமார் என்பதை அவரே சூசகமாகத் தெரிவித்திருக்கிறார். 

கடந்த ஞாயின்று சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவின் போது பங்குபற்றுவதற்காக வந்த இவ்விருவரும் (விஷால் இதற்காக தன் பணியை ஒதுக்கிவிட்டு வந்திருக்கிறார் என்பது ரகசியம்) அகலமான புன்னகையுடன் வந்தனர். வந்ததும் இதற்கு மேல் நெருக்கமாக அமர்ந்தால் ஒருவர் மடி மீது தான் அமரமுடியும் என்ற எல்லை வரை இருவரும் நெருக்கமாக விழா முடியும் வரை அமர்ந்திருந்தனர். 

இதனைவைத்து பார்க்கும் போது விரைவில் தன்னுடன் மோதிய சரத்குமாருடன் நேசக்கரம் நீட்டி உறவு எல்லையை புதுப்பிப்பார் என்றே அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்லிவருகிறார்கள்.

தகவல் : சென்னை அலுவலகம்