மட்டு–கல்முனை பிரதான வீதிகளில் கட்டாக் காலி மாடுகளின் தொல்லை அதிகரிப்பு - மக்கள் விசனம்

Published By: Digital Desk 4

07 Jan, 2020 | 12:06 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மட்டக்களப்பு –கல்முனை கல்லடி,அரசடி பிரதான வீதிகளில்  கட்டாக் காலி மாடுகளின் தொல்லை தற்போது அதிகரித்து காணப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேற்படி பிரதான, ஏனைய வீதிகளில் கட்டாக் காலி மாடுகள் தற்போது கூட்டாக அழைந்து திரிவதாகவும் இதனால் வீதிப் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்து வருவதுடன் வீதி விபத்து இடம்பெறுவதற்கும் காரணமாக அமைவதாகவும் இவ் விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறித்த வீதியில் பயணம் செய்யும் பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீதிகளில் அலைந்து திரியும் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதுடன், அதிரடி நடவடிக்கையின் போது பிடிக்கப்படும் குறித்த கட்டாக்காலி மாடுகளின் உரிமையார்களிடம் சிறிய மாடு என்றால் 2500 ரூபாவும் பெரிய மாடு என்றால் 5000 ரூபாவும் தண்டப்பணமாக அறவிடப்பட்டு அதன் பின்னர் குறித்த மாடுகள் அவர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22