சீனாவை தாக்கும் மர்ம வைரஸ் ஏனைய ஆசிய நாடுகளையும் பாதிக்கும் அபாயம்

Published By: Digital Desk 3

07 Jan, 2020 | 12:21 PM
image

சீனாவில் மர்மமான வைரஸ் காய்ச்சல் ஒன்று பரவி வருவதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சீனாவின் வுஹான் நகரில் மர்ம வைரஸ் நிமோனியாவினால் மொத்தம் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏழு நோயாளிகள் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் வுஹான் நகராட்சி சுகாதார ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அனைத்து நோயாளிகளும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

இந்நிலையில் காய்ச்சல் பரவுவதற்கு மத்தியில் சீனாவில் வைத்தியசாலைகளில் வுஹான் சுகாதார அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ஏனைய ஆசியா நாடுகளிலும் பரவக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, நிமோனியாவின் அறிகுறிகள் முக்கியமாக காய்ச்சல், பல நோயாளிகளுக்கு சுவாசிப்பதில் சிரமம் மற்றும் நுரையீரல் பாதிப்பு என்பனவாகும்.

குறித்த நோய் டிசம்பர் பிற்பகுதியில் பரவ தொடங்கியுள்ளது. இன்னும் கண்டறியப்படாத மர்ம காய்ச்சல், 2003ல் நூற்றுக் கணக்கானவர்களைக் கொன்ற கடுமையான ‘சார்ஸ்’ நோயாக இருக்கலாம் என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளது.

இது ஒரு கடுமையான வைரஸ் சுவாச நோயாகும், இது 2002 ஆம் ஆண்டில் நாட்டில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது, இது ஆசியா முழுவதும் பரவி  ஒரு தொற்றுநோயை ஏற்படுத்தியது.

சார்ஸ் நோய் உலகளவில் 37 நாடுகளுக்கு பரவியது, 8,000 க்கும் மேற்பட்டவர்களை பாதித்தது மற்றும் நவம்பர் 2002 ஆம் ஆண்டு நவம்பர் முதல்  2003 ஜூலை வரை 774 பேர் உயிரிழந்தனர்.

கடல் உணவு சந்தையிலிருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில்,குறித்த தளத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நோய் வைரஸ் நிமோனியாவின் பாதிப்பு என்று ஆய்வக சோதனைகள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52