கொச்சியில் DIMO Agri ஏற்பாட்டில் இலங்கையிலுள்ள Mahindra டிராக்டர் முகவர்களுக்கான மாநாடு

Published By: Priyatharshan

07 Jun, 2016 | 01:55 PM
image

Diesel & Motor Engineering PLC (DIMO) நிறுவனத்தின் விவசாய இயந்திரங்கள் விற்பனைப் பிரிவானது அண்மையில் இந்தியாவின் கேரளாவிலுள்ள கொச்சியில் தனது Mahindra டிராக்டர் முகவர்கள் மாநாட்டை நடத்தியிருந்தது. 

இலங்கையிலிருந்து 75 இற்கும் மேற்பட்ட Mahindra டிராக்டர் முகவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

கொச்சியிலுள்ள 5 நட்சத்திர ஆடம்பர ஹோட்டலான மரியட் ஹோட்டலில் இடம்பெற்ற இம்மாநாட்டின் மூலமாக DIMO நிறுவனம் இலங்கைக்கு வெளியில் முதன்முறையாக ஏற்பாடு செய்த நிகழ்வாக அந்நிறுவனத்தின் விவசாய இயந்திரங்கள் விற்பனைப் பிரிவு சாதனை படைத்துள்ளது. 

மேலும் உள்நாட்டிலுள்ள விவசாய துறை சார்ந்த முகவர்களுக்காக இலங்கைக்கு வெளியில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வாகவும் நிச்சயமாக இது அமையும்.

முகவர்களும்,  DIMO நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளும் விமானம் மூலமாக கொச்சியை சென்றடைந்து, அழகிய கொச்சி மரியட் ஹோட்டலில் 2 இரவுகளும் 3 பகல் பொழுதுகளும் தங்கியிருந்தனர். 

மாபெரும் நிகழ்வானது வெள்ளிக்கிழமை இரவு ஹோட்டலின் பிரதான நிகழ்வு மண்டபத்தில் இடம்பெற்றது. 

இலங்கையிலுள்ள Mahindra டிராக்டர் முகவர்கள் DIMO Agri பிரிவின் பணியாளர்கள்,  DIMO சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் இந்தியாவின் Mahindra Tractors நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கேரளாவின் பண்டைய கொண்டாட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் “மாமாங்கம்” என்ற தொனிப்பொருளில் முகவர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒட்டுமொத்த நிகழ்வும் சிங்கள மொழியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் மூன்று பாகங்களைக் கொண்டிருந்தது. பெறுபேற்றுத்திறன் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடையப் பெற்றதன் அடிப்படையில் முகவர்களுக்கான இனங்காணல் அங்கீகாரம், புதிய Arjun Novo மற்றும் Yuvo வரிசை டிராக்டர்களின் அறிமுகம் மற்றும் Mahindra டிராக்டர் அமுலாக்க வரிசையின் அறிமுகம் என மூன்று பாகங்கள் நிகழ்வில் அடங்கியிருந்தன. புதிய Arjun Novo ஆனது பல்வேறு வகைப்பட்ட விவசாயத் தேவைகளின் பயன்பாட்டிற்கு வெற்றிகரமாக உதவுவதுடன், புதிய, உயர்-நடுத்தர- குறைந்த இயந்திர பரிமாற்ற முறைமையையும் மேலதிகமான 7 தனித்துவமான வேகங்களைத் தருகின்ற 15F+3R கியர்களையும் கொண்டுள்ளது. Mahindra Yuvo டிராக்டர்கள் 30-45 குதிரைவலு (HP) வரிசையில் கிடைப்பதுடன், உயர் தொழில்நுட்ப கட்டுப்பாட்டுடன் கூடிய வால்வு வடிவமைப்பு மற்றும் 1500 கிலோ பாரமுயர்த்தும் ஆற்றலையும் கொண்டுள்ளது.

DIMO மற்றும் Mahindra Tractor நிறுவனத்தின் சார்பில் பல பிரதிநிதிகள் உரையாற்றியிருந்ததுடன் கேரள நடன குழுக்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன. 

திரு. ரஞ்சித் பண்டிதகே (பணிப்பாளர் சபைத் தலைவர் - DIMO), திரு. கஹநாத் பண்டிதகே (பிரதம நிறைவேற்று அதிகாரி - DIMO), திரு. சஞ்சய் யாதவ் (தெற்காசியாவிற்கான தலைமை அதிகாரி - Mahindra Tractors, இந்தியா),  திரு. சுபோத் அரோரா (உற்பத்திகள் மற்றும் சந்தைப்படுத்தலுக்கான தலைமை அதிகாரி - Mahindra Tractors,  இந்தியா) மற்றும் திரு கிஹான் பொனாண்டோ (DIMO Agri பிரிவின் தலைமை அதிகாரி) ஆகியோர் நிகழ்வில் உரையாற்றியிருந்தனர்.

திரு. ரஞ்சித் பண்டிதகே குறிப்பிடுகையில்,

“DIMO Agri பிரிவானது 2015/16 ஆண்டில் மிகச் சிறப்பாக தொழிற்பட்டுள்ளதுடன், அனைத்து சாதனை இலக்குகளையும் கடந்துள்ளது. பெறுமதிமிக்க எமது முகவர்களின் பங்களிப்பும் இந்த வெற்றிகளுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. ஆகவே அவர்களைப் போற்றி, இனங்காணல் அங்கீகாரத்தை வழங்கவேண்டும் என விரும்பினோம். இதன் அடிப்படையில்ரூபவ் இந்த விமரிசையான நிகழ்வை கொச்சியில் ஏற்பாடு செய்துள்ளோம்.”

திரு. சஜி வர்கீஸ் (இலங்கைக்கான உள்நாட்டு முகாமையாளர் - Mahindra Tractors இந்தியா), திரு அமல் திலகரட்ண (வியாபாரப் பிரிவு முகாமையாளர் - DIMO Agri) மற்றும் திரு யொஹான் திலகரட்ண (பிரதிப் பொது முகாமையாளர் - வர்த்தகத் தொடர்பாடல்கள் DIMO) ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்தியாவிலுள்ள மிகர் பாரிய ஷொப்பிங் வளாகம் எனக் கருதப்படுகின்ற 17 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட லுலு ஷொப்பிங் வளாகத்தில் ஷொப்பிங் செய்து, மகிழ்ச்சியாகப் பொழுதைக் களிப்பதற்கான வாய்ப்பு முகவர்களுக்கு வழங்கப்பட்டது. சனிக்கிழமை இரவுப் பொழுதில் கொச்சி மரியட் ஹோட்டலின் நீச்சல் தடாகத்தை அண்டைய பகுதியில் முகவர்களுக்கு கொக்டெயில்ஸ் விருந்து ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.

DIMO Agri எனப்படுகின்ற விவசாயப் பிரிவானது இலங்கையில் அனைத்து வகையான Mahindra டிராக்டர்களையும் முகாமைத்துவம் செய்து வருகின்றது. மேலும் DIMO Agri ஆனது ஜேர்மனியின் CLAAS அறுவடை இயந்திரங்களுக்கான ஒரேயொரு விநியோகத்தராகவும் திகழ்ந்து வருகின்றது. 

DIMO Agri இலங்கையில் தனது உற்பத்திகளை மேலும் விஸ்தரிக்கும் முகமாக விவசாயம் தொடர்பாக உலகில் முன்னிலை வகிக்கின்ற தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை இன்னும் அதிகமான அளவில் அறிமுகப்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58