மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, கவரவில பீ பிரிவைச் சேர்ந்த வெள்ளையன் பாக்கியம் என்ற (71) வயோதிப பெண் ஒருவர், மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் சாமிமலை கவரவில ஆற்றில் இருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேச மக்கள் மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

மேற்படி பெண் இன்று காலை 7 மணியளவில் காணாமல் போயிருந்ததாக மேற்படி வயோதிப பெண்ணின் மகன் தெரிவித்தார். எனினும் 8.30 மணியளவில் இவ்வாறு ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

ஹட்டன் நீதவான் மரண விசாரணைகளை மேற்கொண்ட பின் சடலம் நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்.மு.இராமசந்திரன்)