உயிர்த்த ஞாயிறு தக்குதல்கள்: 17 ஆம் திகதி முதல் மீளவும் ஆணைக்குழு விசாரணைகள்

Published By: Vishnu

06 Jan, 2020 | 08:18 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தககுதல்கள்  தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் முன்னெடுக்கப்ப்டவுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில்  விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை, கடந்த 2019 டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்துஷவிடம் கையளிக்கப்பட்ட நிலையிலேயே அடுத்த கட்ட விசாரணைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் மீள இடம்பெறவுள்ளன.

தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 305 பேரிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளதாகவும் மேலும் பலரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் புவனேக ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, பேராசிரியர் ரொஹான் குணரத்ன மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகள் பலர்  ஆணைக்குழுவில் வாக்குமூலமளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்