ரஷ்யாவின் கடைக்கண் பார்வை

06 Jan, 2020 | 04:52 PM
image

விடு­தலைப் புலி­க­ளுக்கு  எதி­ரான போர் முடி­வுக்கு வந்து ஐந்து மாதங்­க­ளுக்குப் பின்னர், ரஷ்ய வெளி­வி­வ­கார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ், இலங்­கைக்குப் பயணம் மேற்­கொண்­டி­ருந்தார்.


2009 ஒக்­டோபர் 26ஆம் திகதி கொழும்பு வந்­தி­ருந்த போது, அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ, அப்­போ­தைய வெளி­வி­வ­கார அமைச்சர் ரோகித போகொல்­லா­கம ஆகி­யோரை சந்­தித்து, இரு­த­ரப்பு உற­வு­களை பலப்­ப­டுத்­து­வது குறித்துப் பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருந்தார் சேர்ஜி லாவ்ரோவ்.
அப்­போது, ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்த ராஜபக் ஷ இப்­போது பிர­த­ம­ராக இருக்­கின்ற நிலை­யிலும், ரஷ்­யாவின் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இன்­னமும் இருக்­கின்ற சேர்ஜி லாவ்ரோவ், எதிர்வரும் 14ஆம் திகதி இலங்­கைக்கு மீண்டும் வரப்­போ­கிறார்.


ஒரே ஒருநாள் பய­ண­மாக இருந்­தாலும், அவ­ரது இந்தப் பயணம் முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒன்­றா­கவே கரு­தப்­ப­டு­கி­றது.


2009ஆம் ஆண்டு போரின் முடி­வுக்குப் பின்­ன­ராக காணப்­பட்ட சூழ­லுக்கும், 2019 ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குப் பின்­ன­ரான சூழ­லுக்கும் இடையில் மிகப் பெரிய வித்­தி­யா­சங்கள் இல்­லாத ஒரு சூழல் காணப்­ப­டு­கி­றது.


விடு­தலைப் புலி­க­ளுக்கு  எதி­ரான போரில் இலங்கை அர­சாங்கம் வெற்றி பெறு­வ­தற்கு ஆயுத தள­பா­டங்­களை வழங்கி ஒத்­து­ழைத்த பல நாடு­களில் ரஷ்­யாவும் ஒன்று.


ரஷ்­யா­விடம் இருந்து வாங்­கப்­பட்ட மிக் போர் விமா­னங்கள், எம்.ஐ-–17, எம்.ஐ---–24 ஹெலி­கொப்­டர்கள், பிரிஆர் துருப்­புக்­கா­விகள், கவச  வாக­னங்கள்,  டேங்கி­கள் என்­பன போரில் முக்­கி­ய­மான பங்கை ஆற்­றி­யி­ருந்­தன.


எனவே, போர் முடி­வுக்கு வந்த பின்­னரும், ரஷ்­யா­வுக்கும் ராஜபக் ஷ அர­சாங்­கத்­துக்கும் இடையில் மிக நெருங்­கிய உற­வுகள் காணப்­பட்­டி­ருந்­தன.


மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்­த­போது மாத்­தி­ர­மன்றி, அவர் பத­வி­யி­ழந்த பின்­னரும் ரஷ்­யா­வுக்குப் பல பய­ணங்­களை மேற்­கொண்­டி­ருந்தார்.


ஆனால், 2015 இல் மைத்­தி­ரி­பால சிறி­சேன – ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூட்டு அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர், சீனாவைப் போலவே, ரஷ்­யா­விடம் இருந்து வில­கியே நின்­றது. அதற்குக் காரணம் அமெ­ரிக்கா தான்.


இந்­தியப் பெருங்­க­டலில் சீனாவின் ஆதிக்கம் பர­வு­வதை மாத்­திரம் அமெ­ரிக்கா எதிர்க்­க­வில்லை. ரஷ்­யாவின் ஆதிக்கம் அதி­க­ரிப்­பது குறித்த அச்­சமும் அமெ­ரிக்­கா­வுக்கு இருக்­கி­றது.
அதனால் தான் ரஷ்­யாவின் பாரம்­ப­ரிய நண்­ப­னாக இருந்து வந்த இந்­தி­யா­வுடன், நெருக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது அமெரிக்கா.


ரஷ்­யா­வி­ட­மி­ருந்து எஸ்-–400 ஏவு­க­ணை­களை இந்­தியா வாங்­கிய போது அதற்கு அமெ­ரிக்கா எதிர்ப்புத் தெரி­வித்­தது. ஆனால் இந்­தியா அத­னையும் மீறி வாங்­கிய போது, அமெ­ரிக்கா எதுவும் செய்­ய­வில்லை.
ஏனென்றால், ரஷ்­யா­வு­ட­னான போட்­டியை விட, இந்­தியப் பெருங்­க­டலில் அமெ­ரிக்­கா­வுக்கு நண்­பர்கள் தேவைப்­ப­டு­கி­றார்கள். சீனா, ரஷ்யா போன்ற சக்­தி­க­ளிடம் அவர்கள் சிக்கி விடக்­கூ­டாது என்று எதிர்­பார்க்­கி­றது அமெ­ரிக்கா.


இலங்­கை­யுடன், ரஷ்யா பாது­காப்பு ரீதி­யான உற­வு­களை வளர்த்துக் கொள்­வ­தற்கு அமெ­ரிக்கா எதிர்ப்புத் தெரி­வித்து வந்­தது. குறிப்­பாக ரஷ்­யா­வி­ட­மி­ருந்து ஆயுத தள­பா­டங்­களை வாங்­கு­வதை அமெ­ரிக்கா எதிர்த்­தது.


ரஷ்­யாவின் Rosborono export  நிறு­வ­னத்­திடம் இருந்து போர்த்­த­ள­பா­டங்கள் வாங்கக் கூடாது என்று அமெ­ரிக்கா எச்­ச­ரிக்கை செய்­தது. இதனை கடந்த ஆண்டு அப்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பகி­ரங்­க­மா­கவே கூறி­யி­ருந்தார். அமெ­ரிக்­கா­வினால் கறுப்­புப்­பட்­டி­யலில் சேர்க்­கப்­பட்ட ரஷ்ய நிறு­வ­னத்­திடம் ஆயு­தங்­களை வாங்கக் கூடாது என்று அமெ­ரிக்கா அழுத்­தங்­களைக் கொடுத்­ததால் அப்­போ­தைய அர­சாங்கம் வில­கி­யி­ருக்க வேண்­டி­யி­ருந்­தது.


இதனால் ரஷ்­யா­விடம் இருந்து ஜிபார்ட்– -5 ரக போர்க்­கப்பல் மற்றும் எம்.ஐ.17 ஹெலி­கொப்­டர்கள், பிரிஆர் துருப்­புக்­காவி கவ­ச­வா­க­னங்கள், ஏ-கே.47 ரக துப்­பாக்­கிகள் போன்­ற­வற்றின் கொள்­வ­னவு நட­வ­டிக்­கை­களை மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்கம் கைவிட நேரிட்­டது.
மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் ரஷ்யா வழங்­கி­யி­ருந்த கடன் திட்டம் காலா­வ­தி­யா­கி­யி­ருந்த நிலை­யிலும், மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்­கத்­துக்கு அதனை நீடித்து, 300 மில்­லியன் டொலர் கடன் திட்­டத்தில், ஜிபார்ட் – -5 போர்க்­கப்­பலை வழங்க ரஷ்யா இணங்­கி­யி­ருந்­தது.


ஆனால், அமெ­ரிக்­காவின் எதிர்ப்­பினால், ரஷ்ய நிறு­வ­னத்­துடன், ஆயுத தள­பாடக் கொள்­வ­னவு உடன்­பா­டு­களில் கையெ­ழுத்­திட முடி­யாத நிலை முன்­னைய அர­சாங்­கத்­துக்கு ஏற்­பட்­டி­ருந்­தது. ஏனென்றால், ரஷ்­யாவை விட அமெ­ரிக்­காவின் தேவை கொழும்­புக்கு அதி­க­மாக இருந்­தது. ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன ரஷ்­யாவின் பக்கம் சாயும் எண்­ணத்தில் இருந்­தாலும், ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கத்தை மீறி அவரால் – வரை­ய­றுக்­கப்­பட்ட அள­வி­லேயே  செயற்­பட முடிந்­தது.


ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் அமெ­ரிக்க சார்­பு­டை­ய­தாக இருந்­தமை மாத்­திரம் அதற்குக் கார­ண­மல்ல.


சர்­வ­தேச அரங்கில் இலங்கை அர­சாங்கம் அழுத்­தங்­களில் இருந்து தப்பிக் கொள்­வ­தற்கும், அமெ­ரிக்­காவின் தயவு தேவைப்­பட்­டது. குறிப்­பாக, ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில், அமெ­ரிக்­காவை உள்­ள­டக்­கிய மேற்­கு­ல­கத்தின் அழுத்­தங்­களில் இருந்து தப்­பிக்க வேண்­டி ­யி­ருந்­தது.
அதனால், அமெ­ரிக்­காவை பகைத்துக் கொண்டு ரஷ்யா பக்கம் சாய முடி­யாத நிலையில் மைத்­தி­ரி­பால சிறி­சேன இருந்தார்.


எனினும் அவர் தனது பத­விக்­கா­லத்தின் இறு­திக்­கட்­டத்தில், குறிப்­பாக, 2018 நடுப்­ப­கு­திக்குப் பின்னர், ரஷ்­யா­வு­ட­னான நெருக்­கத்தை அதி­கப்­ப­டுத்திக் கொள்­வதில் கவனம் செலுத்­தினார்.


ரஷ்­யா­வுக்­கான தூது­வ­ராக கலா­நிதி தயான் ஜய­தி­லக நிய­மிக்­கப்­பட்­டது அதில் முக்­கி­ய­மான ஒரு அம்­ச­மாகும். அதற்குப் பின்னர், ரஷ்­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடையில் பாது­காப்பு உறவைப் பலப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கான அடுக்­க­டுக்­கான பல முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.


கடந்த ஆண்டு பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக இருந்த அட்­மிரல் ரவீந்­திர விஜே­கு­ண­ரத்ன, இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்த ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்க, தற்­போ­தைய கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் பியால் டி சில்வா ஆகியோர் தனித்­த­னி­யாக வெவ்­வேறு சந்­தர்ப்­பங்­களில் ரஷ்­யா­வுக்குப் பய­ணங்­களை மேற்­கொண்­டி­ருந்­தனர்.


இந்தப் பய­ணங்­களின் போது மூன்று விட­யங்­களில் முக்­கிய கவனம் செலுத்­தப்­பட்­டது. முத­லா­வது ரஷ்ய பாது­காப்பு தள­பா­டங்­களை இலங்கை படை­க­ளுக்கு கொள்­வ­னவு செய்­வது. பொருத்­த­மான ஆயுத தள­பா­டங்கள் குறித்து இதன்­போது ஆரா­யப்­பட்­டது.


இரண்­டா­வது, இலங்கைப் படை­யி­ன­ருக்கு ரஷ்­யாவில் பயிற்­சி­களை அளிப்­பது. குறிப்­பாக ஆட்­டி­லறி சூட்டுப் பயிற்­சிகள் மற்றும் தீவி­ர­வாத முறி­ய­டிப்புப் பயிற்­சி­களை அளிப்­பது, ரஷ்­யாவில் இலங்கைப் படை­யி்­ன­ருக்­கான பயிற்சி இடங்­களை அதி­க­ரிப்­பது குறித்து கவனம் செலுத்­தப்­பட்­டது.


மூன்­றா­வ­தாக இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான பாது­காப்பு உற­வு­களை வலுப்­ப­டுத்திக் கொள்­வது. இதற்­க­மைய, ரஷ்­யா­வுடன் பாது­காப்பு ஒத்­து­ழைப்பு உடன்­பாடு ஒன்றும் கூட கைச்­சாத்­தி­டப்­பட்­டது.
ரஷ்­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான பாது­காப்பு ஒத்­து­ழைப்பு, உற­வு­களை வலுப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு 2019ஆம் ஆண்டில் வேக­மான நகர்­வுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.


கடந்த நவம்பர் மாதம் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டதை அடுத்து, இலங்­கைக்கு (அம்­பாந்­தோட்டை துறை­முகம்) வந்த முத­லா­வது  வெளி­நாட்டுப் போர்க்­கப்பல் கூட, ரஷ்­யா­வி­னு­டை­ய­தாகத் தான் இருந்­தது.


இலங்­கைக்கும் ரஷ்­யா­வுக்கும் இடையில் பாது­காப்பு உற­வு­களை வலுப்­ப­டுத்­து­வதில் மொஸ்­கோவில் தூது­வ­ராக உள்ள கலா­நிதி தயான் ஜய­தி­ல­கவின் பங்கு முக்­கி­ய­மா­னது.
மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆட்­சிக்குக் கொண்டு வரு­வ­தற்­காக பாடு­பட்­டவர் தயான் ஜய­தி­லக,. பின்னர் அவர் மஹிந்த ராஜபக் ஷவின் பக்கம் போய், ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கத்தை கவிழ்ப்­ப­தற்­காகப் பாடு­பட்டார்.


அவ்­வா­றான ஒரு­வ­ருக்குத் தான் மைத்­தி­ரி­பால சிறி­சேன கடு­மை­யான போராட்­டத்­துக்கு மத்­தியில், ரஷ்­யா­வுக்­கான தூதுவர் நிய­ம­னத்தை பெற்றுக் கொடுத்­தி­ருந்தார்.


இப்­போது ராஜபக் ஷ அர­சாங்கம் மீண்டும் பத­விக்கு வந்­துள்ள நிலையில், ரஷ்­யாவும் இலங்­கையின் மீதான ஈர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. ரஷ்ய வெளி­வி­வ­கார அமைச்சர். சேர்ஜி லாவ்ரோவ், இலங்­கைக்கு மேற்­கொள்­ள­வுள்ள பய­ணமும் அதன் ஒரு வெளிப்­பாடு தான் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ வரும் 14ஆம் திகதி சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ்  அன்றைய தினமே கொழும்பு வரவுள்ளார்.


இந்த இரண்டு பயணங்களுமே அமெரிக்காவுக்கு சவாலானவை. இலங்கையில் மாத்திரமன்றி இலங்கைக்கு வெளியிலும் இது மேற்குலகத்துக்குச் சவாலானது தான்.
இலங்கையில் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஆதிக்கம் செலுத்துவதை மாத்திரம் மேற்குலகம் எதிர்க்கவில்லை.


இலங்கைக்கு வெளியில், குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும், இந்த இரண்டு நாடுகளும் இணைந்து இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டு வந்தவை.


வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் குறித்த விவாதம் நடக்கப்போகின்ற நிலையில், ரஷ்யா, சீனாவுடன் இணைந்து கொழும்பு வகுக்கப் போகின்ற வியூகம் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்துக்கு மிகமிக சவாலாகவே இருக்கும்.
அந்தச் சவாலை அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன ?


- ஹரிகரன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04