புதிய ஆண்டில் எதிர்பார்க்கப்படும் அறிவியலின் புத்தாக்கங்கள்

Published By: Digital Desk 3

06 Jan, 2020 | 04:35 PM
image

புதிய ஆண்­டான 2020 பிறந்து ஐந்­தா­வது நாட்­பொ­ழுது நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. இப்­பு­திய ஆண்­டிலும் முற்­றிலும் புது­மை­யான அனு­ப­வங்கள் மனித குலத்­திற்கு காத்­தி­ருக்­கின்­றன. அவை மனி­த­ருக்கு உவப்­பான அனு­ப­வங்­க­ளையும் சில­வே­ளை­களில் சவால்­க­ளையும் வழங்­கு­வ­தாக அமை­யக்­கூடும். அவ்­வா­றான சவால்­களை எதிர்­கொள்­வது குறித்து பல்­வேறு தரப்­பி­னரும் தத்­த­மது நிலை­க­ளி­லி­ருந்து சிந்­தித்து வரு­கின்­றனர், சிறு­பான்மை இன மக்கள் தம்­மீது பெரும்­பான்மை இன­வாத அர­சு­க­ளினால் மேற்­கொள்­ளப்­படும் நேரடி மற்றும் நிறு­வ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட அடக்­கு­மு­றை­களை எவ்­விதம் எதிர்­கொள்­ளலாம் எனத் தமது தயார்ப்­ப­டுத்­தல்­களை மேற்­கொள்­கின்­றனர். நவீன கால­னித்­துவ நெருக்­க­டி­களை எதிர்­கொள்ளும் அர­சுகள் அவற்­றினை சமா­ளிப்­பது தொடர்­பான திட்­ட­மி­டல்­களை மேற்­கொள்­கின்­றனர். அறி­வி­ய­லா­ளர்கள் தாம் கண்­டு­பி­டித்த படைப்­புக்­களைக் காலத்தின் கோலத்­திற்கு ஏற்ப மேம்­ப­டுத்­து­வது தொடர்­பிலும், புதிய சவால்­களை அறி­வி­யலால் எதிர்­கொள்­ளவும் தம்மைத் தயார்ப்­ப­டுத்­து­கின்­றனர்.

அறி­வி­யலால் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட பல அறி­வியல் அறு­வ­டைகள் மனித வாழ்­வினை வளப்­ப­டுத்­தி­யுள்­ள­போ­திலும், மனி­தனின் மனோ­வே­கத்­திற்கு ஈடு­கொ­டுக்கும் வகையில் அமை­ய­வில்லை எனலாம். எனவே, அக்­கு­றிப்­பிட்ட மனோ­வே­கத்­தினை மிஞ்சும் விதத்தில் அறி­வியல் படைப்­புக்­களை மேம்­ப­டுத்த ஆய்­வா­ளர்கள் முனை­கின்­றனர். அதே­வேளை, அறி­வி­யலின் பக்­க­வி­ளை­வு­களால் விளைந்த சூழல் மாச­டைதல் போன்ற சவால்­களை அறி­வி­யலால் தீர்ப்­பது தொடர்­பிலும் சிந்­திக்கத் தலைப்­பட்­டுள்­ளனர்.

இவ்­வ­கையில், இப்­பு­திய ஆண்டில் அறி­வியல் உலகம் சில துறை­களில் புதிய பரி­மா­ணத்­தினைத் தொடும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக, தற்­போது அடிக்­கடி கேள்­விப்­படும் ‘குவாண்டம்’ இயற்­பியல், மீள்­பு­துப்­பிக்­கப்­படும் பசுமைச் சக்தி மற்றும் சிறப்பு மின்­க­டத்­திகள் ஆகி­ய­வற்றில் புதிய அறி­வியல் அடை­வுகள் எய்­தப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

ஆரம்­பத்தில் அணு­விற்குள் இலத்­திரன், புரோத்­திரன் மற்றும் நியூ த்திரன் ஆகிய உப அணுத்­து­ணிக்­கைகள் மாத்­தி­ரமே உள்­ளன என்ற கருத்து நிரூ­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும், பின்னர் இந்த உப அணுத்­து­ணிக்­கை­களைப் பார்க்­கிலும் வேறு பல துணிக்­கை­களும் இருக்­கின்­றன என்­பது பல்­வேறு ஆய்­வு­களால் ஐயந்­தி­ரி­பற உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இதற்­கான பாரிய நிலக்­கீ­ழான ஆய்­வகம் பிரான்ஸ் -– சுவிட்­ஸர்­லாந்து எல்­லையில் அமைக்­கப்­பட்டு, ‘ஹிக்ஸ்­போசன்’ (சிலே­டை­யாக அழைக்­கப்­பட்ட கட­வுளின் துணிக்கை) என்ற உப அணுத்­து­ணிக்கை 2012 இல் கண்­ட­றி­யப்­பட்­டி­ருந்­தது. இது­த­விர வேறு­சில ஆய்­வு­களும் இக்­கு­றிப்­பிட்ட ஆய்­வ­கத்தில் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

அணு­விற்குள் பொதிந்­தி­ருக்கும் உப அணுத்­து­ணிக்­கை­களின் நடத்­தைகள், அந்­ந­டத்­தைகள் விளை­விக்கும் தாக்­கங்­களை அவ­தா­னித்து, குவாண்டம் இயற்­பி­யலின் புதிய அறு­வ­டைகள் இந்த ஆண்டில் வெளி­யா­கக்­கூடும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக, கணினித் துறை, தகவல் பரி­மாற்றம் போன்ற அதி­வே­கத்­தினை எதிர்­பார்க்கும் துறை­களில் ‘குவாண்டம்’ பொறி­முறை தடம் பதிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. தற்­போது எமது உத­டுகள் உச்­ச­ரிக்கும் இ-அஞ்சல் (e-–mail) இவ்­வ­ருட இறு­தியில் க்யூ-அஞ்சல் (q-–mail) என அழைப்­ப­தாக மாற்­ற­ம­டைந்­தாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை.

அறி­வி­யலால் விளைந்த பெற்­றோ­லிய எரி­பொ­ருளை உப­யோ­கிக்கும் இயந்­தி­ரங்கள் அறி­மு­க­மா­கி­யதை அடுத்து வளி­மண்­டலம் மாச­டை­வது அதி­க­மா­கி­யது. இவ்­வா­றான இயந்­தி­ரங்­களை முற்­றாகத் தடை செய்­வது என்­பதும் இய­லாத காரி­ய­மாகும். பல நாடு­களில் மின்­னுற்­பத்­திக்கு டீசல் மற்றும் நிலக்­கரி ஆகி­ய­வற்­றினைப் பயன்­ப­டுத்தும் எரி­த­கனப் பொறி­மு­றையே பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. சூழல் ஆர்­வ­லர்­களின் தொடர்ச்­சி­யான விழிப்பூட்டல் மற்றும் உண­ரத்­தக்­க­தான கால­நிலை மாற்­றங்கள் கார­ண­மாக, பெற்­றோ­லிய எரி­பொ­ருட்­களை தவிர்த்து மீள்­பு­துப்­பிக்­கத்­தக்க பசுமை சக்தி பிறப்­பாக்கம் தொடர்பில் பலரின் கவனம் திரும்­பி­யுள்­ளது. இவ்­வாண்டில் பசுமைச் சக்தி உற்­பத்திப் பொறி­மு­றைகள் பல அறி­மு­க­மாகும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

மூன்­றா­வ­தாக, இலத்­தி­ர­னியல் உலகம் எதிர்­கொள்ளும் சவால் ஒன்று இந்த ஆண்டில் தீர்க்­கப்­ப­டக்­கூடும் என்ற எதிர்­பார்ப்­புக்கள் நில­வு­கின்­றன. இலத்­தி­ர­னியல் சாத­னங்­களின் இயக்கம் மின்­சக்­தியில் தங்­கி­யுள்­ளது. கடத்தி வழியே மின்­னோட்டம் நடை­பெ­று­கையில், அக்­க­டத்­தியில் காணப்­படும் தடை கார­ண­மாக, சக்தி இழப்பு ஏற்­ப­டு­வ­துடன், இழக்­கப்­படும் சக்தி வெப்­ப­சக்­தி­யாக வெளி­யேறி இலத்­தி­ர­னியல் சாத­னங்­களை சூடேற்­று­கின்­றது. கடத்தி வெப்­ப­ம­டை­கையில் அதன் தடைத்­திறன் அதி­க­ரித்தும் செல்­கின்­றது.

சக்தி இழப்பு மற்றும் இலத்­தி­ர­னியல் சாத­னங்கள் வெப்­ப­ம­டைதல் போன்ற பாதக இயல்­பு­களைத் தவிர்க்கும் வகையில் உயர் வெப்­ப­நி­லை­யிலும் சிறந்த கடத்­தி­யாகத் தொழிற்­படும் சடப்­பொ­ரு­ளினை ஆக்கும் முயற்­சிகள் அறி­வியல் உல­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இதன் விளை­வுகள் இப்­பு­திய வரு­டத்தில் வெளி­வ­ரக்­கூடும் என எதிர்­பார்ப்­புக்கள் நில­வு­கின்­றது.

இவை தவிர, இலத்­தி­ர­னியல் சாத­னங்­களில் பயன்­ப­டுத்­தப்­படும் சேமிப்பு மின்­க­லங்­க­ளிலும் புதிய மாற்­றங்கள் ஏற்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யங்கள் காணப்­ப­டு­கின்­றன. இந்த சேமிப்பு மின்­க­லங்கள் அளவில் சிறி­தா­கவும் அதிக மின்சக்தியை சேமிக்கும் தகவுள்ளவையாகவும் மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அதேவேளை, இவற்றினை மின்னேற்றுவதற்கான நேரத்தினை குறைக்கவும் பாதுகாப்பானதாகவும் மாற்றவும் அறிவியலாளர்கள் முயல்கின்றனர். இந்த முயற்சிக்கான அறுவடைகள் இவ்வாண்டில் எட்டப்படவும் கூடும்.

மேற்குறிப்பிட்ட எதிர்பார்ப்புக்கள், தற்போது எதிர்கொள்ளப்படும் சவால்களை முறியடிக்க அறிவியல் மேற்கொள்ளும் தீவிர முயற்சிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட எதிர்வுகூறல்களே. இரவு, பகல் என்று பாராது உழைக்கும் ஆய்வாளர்களின் கடின முயற்சிகள் மேலே கூறப்பட்ட சவால்களுக்கான தீர்வுகளை அறுவடை செய்யும் என நம்பலாம்.

சில்லையூர் றெ.அலெக்ஸ் யாழ்ப்பாணம்   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13