குருநாகல் போதனா வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தினால் எவ்வித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை யெனவும் வெளிநோயாளர் பிரிவு விடுதிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், வெளிநோயாளர் பிரிவு நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்கு வேறொரு இடத்தை தெரிவு செய்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.