சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம் 

Published By: Digital Desk 4

06 Jan, 2020 | 03:14 PM
image

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கோணாவில் கிழக்கு பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

கோணாவில் கிழக்கு பொது நோக்கு மண்டபத்தில் ஆரம்பமான கவன ஈர்ப்பு பேரணி ஊற்றுபுலம் சந்திவரை முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டனர். 

அப்பகுதியில் தொடர்ச்சியாகக் காணப்படும் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் வியாபாரம் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் சமூகத்தில் எழுந்துள்ளதாகவும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான மு.சந்திரகுமார் கலந்து கொண்டிருந்தார். இதன் போது பிரதேச மக்களால் மகஜர் ஒன்றும் அவரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02