சாத்தியமாகும் நிலையில் மலையகப் பல்கலைக்கழகம்...

Published By: J.G.Stephan

06 Jan, 2020 | 01:11 PM
image

மலை­ய­கத்­துக்­கான பல்­க­லைக்­க­ழகம் அமைப்­பது தொடர்பில் பல ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே பேசப்­பட்டு வந்­த­போ­திலும் இன்று அது சாத்­தி­யப்­படும் தரு­வாயில் காணப்­ப­டு­கின்­றது. மலை­யக மக்கள் ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் கன­வா­கிய மலை­யக பல்­க­லைக்­க­ழ­கத்தை எம்மால் உரு­வாக்க முடியும் என்ற எதிர்­பார்ப்பில் இன்று மலை­யகத் தலை­வர்கள் மற்றும் புத்­தி­ஜீ­விகள் ஒரு­மித்து செயற்­பட்டு வரு­கின்­றனர்.

இதற்­கான உத்­தி­யோ­க­பூர்வ அனு­ம­தியைப் பெறு­வ­தற்­காக அமைச்சர் ஆறு­முகன் தொண்­ட­மானின் பரிந்­து­ரைக்­க­மைய முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் பி.பி.தேவராஜ் தலை­மையில் குழு­வொன்றை அமைத்து ஆரா­யப்­பட்­ட­துடன் , அதற்­கான ஆரம்­பக்­கட்ட நிகழ்­வுகள் வெற்­றி­க­ர­மாக நிறை­வுப்­பெற்­றி­ருக்­கின்­றன.

இதன் அடுத்­த­கட்ட வெற்­றிப்­ப­டி­யாக நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் ஒரு தேசிய பல்­க­லைக்­க­ழ­க­மொன்றை உரு­வாக்­கு­வது தொடர்பில் முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் பி.பி.தேவராஜ் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு  கடி­த­மொன்றை கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை சமர்ப்­பித்­துள்ளார்.

இந்­நி­லையில், இந்த கடிதம் தொடர்பில் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ அவ­தானம் செலுத்­தி­யுள்­ள­தா­கவும் , அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கு­மாறு உயர்க்­கல்வி அமைச்சர் பந்­துல குண­வர்­த­ன­வுக்கு  பரிந்­து­ரைத்­துள்­ள­தா­கவும் குறிப்­பிட்டு அவர் பதில் கடி­த­மொன்றை அமைச்சர் ஆறு­முகன் தொண்­ட­மா­னுக்கு அனுப்­பி­யுள்­ள­தாக முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் பி.பி.தேவராஜ் தெரி­வித்­துள்ளார்.

பல்­க­லைக்­க­ழகம் ஒன்றை  அமைப்­பது தொடர்­பான அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ மற்றும் அமைச்சர் பந்­துல குண­வர்­த­ன­வுடன் இணைந்து முன்­னெ­டுக்­கவும் இதற்­கான அனைத்து ஒத்­து­ழைப்­பு­க­ளையும் அவர்­க­ளுக்கு பெற்றுக் கொடுக்க எதிர்­பார்த்­தி­ருப்­ப­தா­கவும் கூறி­யுள்ளார்.

இதே­வேளை மலை­யக பல்­க­லைக்­க­ழகம் தொடர்­பாக ஜனா­தி­ப­தி­யிடம் சமர்ப்­பிக்­கப்­பட்ட கடி­தத்தில் அறி­முகம் மற்றும் கோட்­பாடு என்ற இரு தலைப்பின் கீழ் பல்­க­லைக்­க­ழ­கத்தின் அவ­சியம் தொடர்பில் விளக்­கி­யுள்ள குழு­வினர், பல்­க­லைக்­க­ழ­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­காக ஜனா­தி­ப­தியால்  பூரண ஒத்­து­ழைப்­பு­களை வழங்க முடியும் என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

ஜனா­தி­ப­திக்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட கடி­தத்தில் கூறப்­பட்­டுள்ள விட­யங்கள் இங்கு தரப்­ப­டு­கின்­றன.

அறி­முகம்
ஜனா­தி­பதித் தேர்தல் இடம்­பெற்ற போது இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் 32 அம்­சங்கள் அடங்­கிய கோரிக்­கையை தயா­ரித்து பிர­தம வேட்­பா­ளர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது. 32 அம்சக் கோரிக்கை பட்­டி­யலில் முத­லா­வது அம்சம் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் ஒரு தேசிய பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­பட வேண்டும் என்­ப­தாகும்.

தங்­க­ளோடு (வேட்­பாளர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ) பேச்­சு­வார்த்தை நடத்­திய போது எங்­க­ளு­டைய முத­லா­வது கோரிக்­கை­யான மலை­யக பல்­க­லைக்­க­ழகம் பற்றி கவனம் செலுத்­து­வ­தாக உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். பேச்­சு­வார்த்­தை­களின் போது தற்­போது ஒரு இலட்­சத்து 50 ஆயிரம் மாண­வர்கள் பல்­க­லைக் ­க­ழக பரீட்­சைக்­காக தோன்றி தகுதி பெற்­றி­ருந்­தாலும் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இடப்­பற்­றாக்­கு­றை­யினால் 50 ஆயிரம் மாண­வர்கள் மாத்­தி­ரமே அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றார்கள் என்று தாங்கள் குறிப்­பிட்­டி­ருந்­தீர்கள்.

பல்­க­லைக்­க­ழக கல்­வியை விரி­வு­ப­டுத்த வேண்டும் என்­பதில் எவ்­வித ஐயமும் இருக்க முடி­யாது. அண்­மையில் வவு­னியா பல்­க­லைக்­க­ழகம் ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்­தியா உட்­பட பல்­வேறு நாடு­களில் பல் ­க­லைக்­க­ழக விரி­வாக்கம் வெகு துரி­த­மாக இடம்­பெற்று வரு­கி­றது என்­பது கவ­னிக்­கத்­தக்­க­தாகும்.

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் ஒரு தேசிய பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­பட வேண்டும் என்ற கருத்­துக்கு நீண்ட கால வர­லாறு உண்டு.

 இத்­த­கைய ஒரு பல்­க­லைக்­க­ழகம் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் நிறு­வப்­பட வேண்டும் என்­பதில் கருத்து உடன்­பாடு இருந்­தாலும் பல்­வேறு கார­ணங்­களால் இது ஒத்­திப்­போ­டப்­பட்­டது. நிர்­வாக தாம­தங்­க­ளி­னாலும் ஆக்­க­பூர்­வ­மற்ற விவா­தங்­க­ளி­னாலும் இது நடை­முறை சாத்­தி­ய­மா­க­வில்லை. இந்த கால­தா­ம­தத்­தினால் பிரச்­சினை தீவி­ர­ம­டைந்­துள்­ளது. மேலும் மலை­யக பிர­தே­சங்­களில் இருந்து பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு அனு­மதி பெறு­வோ­ரு­டைய எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. இப்­பொ­ழுது ஒரு அவ­சர தேவையை பூர்த்தி செய்யும் நிலையை இது உரு­வாக்­கி­யுள்­ளது. உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டி நிலை இப்­பொ­ழுது உரு­வா­கி­யுள்­ளது.

சிந்­தனை பூர்­வ­மான விதத்­திலும் ஆற்­ற­லுடனும் கூடிய நிர்­வாக திற­னோடும் தங்­க­ளு­டைய ஆட்­சியில் துரி­த­மாக மலை­யக பல்­க­லைக்­க­ழகம் உரு­வாகும் என்­பதில் எங்­க­ளுக்கு பூரண நம்­பிக்­கை­யுண்டு. பல்­க­லைக்­க­ழகம் உரு­வா­வ­தற்கு மலை­யக சமூகம் தங்­க­ளு­டைய பூரண ஆத­ரவை தெரி­விக்கும் என்­பதில் ஐய­மில்லை. இடங்­களை தேர்ந்­தெ­டுப்­பது முதற்­கொண்டு சகல வகை­க­ளிலும் தங்­க­ளுக்கு உறு­து­ணை­யாக செயற்­ப­டுவோம் என்று நான் உங்­க­ளுக்கு உறுதி கூறு­கின்றேன்.  

கோட்­பாடு
1942 ஆம் ஆண்டு முதற்­கொண்டு இலங்­கையின் பல்­வேறு பகு­தி­க­ளிலும்  15 தேசிய பல்­க­லைக்­க­ழ­கங்கள் நிறு­வப்­பட்­டுள்­ளன. இப்­பொ­ழுது வவு­னி­யா­விலே 16ஆவது பல்­க­லைக்­க­ழகம் நிறு­வப்­ப­ட­வுள்­ளது. கல்வி கொள்­கையின் அடிப்­ப­டையில் பல்­க­லைக்­க­ழக கல்வி நாட்டில் விஸ்­த­ரிக்­கப்­பட வேண்­டி­யது அரச நிர்­வா­கத்­துக்கு  ஒரு அடிப்­படை தேவை­யாக இருந்­தது. அதே நேரத்தில் பிர­தே­ச­வா­சி­களின் கோரிக்­கையும் பிர­தேச அர­சியல் தலை­வர்­களின் அழுத்­தமும் இத்­த­கைய பல்­க­லைக்­க­ழக விஸ்­த­ரிப்­புக்கு கார­ண­மாக அமைந்­துள்­ளன.

கிழக்கு மாகாண தேசிய பல்­க­லைக்­க­ழ­கமும் தென்­கி­ழக்கு தேசிய பல்­க­லைக் ­க­ழ­கமும் முன்னாள் அமைச்­சர்­க­ளான கே.டபிள்யூ. தேவ­நா­யகம் மற்றும் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆகி­யோரின் வேண்­டு ­கோ­ளுக்கி­ணங்க உரு­வாக்­கப்­பட்­டன. இந்த பல்­க­லைக்­க­ழ­கங்கள் அபி­வி­ருத்­தியில் பங்­கேற்று சிறந்த சேவை­யாற்றி வரு­கின்­றன. இந்த பல்­க­லைக்­க­ழ­கங்கள் பிர­தேச கலா­சார விழு­மி­யங்­களை முன்­னெ­டுத்து செல்­வதில் சிறந்த பங்கு வகிக்­கின்­றன. இதேபோல் பல்­வேறு பிர­தே­சங்­களில் அமைந்­துள்ள பல்­க­லைக்­க­ழ­கங்கள் அவ்வப் பிர­தேச கலா­சார விழு­மி­யங்­களை முன்­னெ­டுத்து செல்­வதில் சிறந்த பங்­காற்­று­கின்­றன. இத்­த­கைய செயற்­பா­டு­களின் மூலம் நாட்டின் அபி­வி­ருத்­தியும் கலா­சா­ரமும் செழுமை பெறு­கி­றது.    

மலை­யக பிர­தே­சத்தில் தற்­போது 3 தேசிய பல்­க­லைக்­க­ழ­கங்கள் இயங்­கு­கின்­றன. அவை­யா­வன பேரா­தெ­னிய,  சப்­ர­க­முவ மற்றும் ஊவா வெல்­லஸ்ஸ என்­ப­ன­வாகும். மலை­ய­கத்தில் பிர­தான சமூ­க­மாக வாழ்­கின்ற இந்­திய வம்­சா­வளி தமி­ழர்­களின் கலா­சார விழு­மி­யங்­களும் அவர்­க­ளுக்கே உரிய சில அபி­வி­ருத்தி பிரச்­சி­னை­களும் கவ­ன­யீர்ப்பு பெறு­வ­தில்லை என்­பது இப்­பொ­ழுது ஓர் குறை­பா­டா­க­வுள்­ளது. இதை நிவர்த்தி செய்­வ­தற்கு நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் நிறு­வப்­ப­ட­வி­ருக்கும் தேசிய பல்­க­லைக்­க­ழகம் பாரிய விதத்தில் உதவும் என்­பதில் ஐய­மில்லை.

முழு நாடும் அறிந்­துள்­ளது போல் இன்று பெருந்­தோட்ட பொரு­ளா­தாரம் பாரிய சோத­னை­க­ளுக்கு ஆளா­கி­யுள்­ளது. பல தோட்­டங்கள் காடாகி வரு­கின்­றன. சில தேயிலை மலைகள் கைவி­டப்­ப­டு­கின்­றன. தோட்டத் தொழி­லாள இளை­ஞர்­களும் யுவதிகளும் தங்களது நாளாந்த வாழ்க்கைக்கான ஊதியத்தை பெற நகர்ப்புறங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த தோட்ட பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகி இக்கட்டான நிலையை அடைந்துள்ளது. இதை மாற்றியமைக்க புதிய விவசாய முறைகளும் பயிர்களும் அறிமுகமாக வேண்டும். நிறைய முதலீடுகள் வேண்டும். ஆனால் இதற்கு நவீன விஞ்ஞான விவசாயத்திலும் இதர துறைகளிலும் பயிற்சிபெற்றுள்ள தொழிலாளர்களும் அவசியமாகும். இதர நாடுகளிலே இத்தகைய முன்னேற்றங்கள் காணப்படுகின்றன.

நுவரெலியா மாவட்டத்தில் அமையவிருக்கும் தேசிய பல்கலைக்கழகம் இதற்கொரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே இது சம்பந்தமாக துரித நடவடிக்கை மேற்கொள்ளும்படி உயர் கல்வி அமைச்சுக்கு பணிப்புரை வழங்குமாறு தங்களிடம் கேட்டுகொள்கின்றோம். சகல வழிகளிலும் பூரண ஒத்தாசை நல்க நாங்கள் காத்திருக்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- செ.தேன்மொழி - 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13