காலத்தின் சுமை !

Published By: Digital Desk 3

06 Jan, 2020 | 01:09 PM
image

மலர்ந்­துள்ள 2020 ஆம் ஆண்டு தேர்தல்கள் ஆண்­டாக அமை­யு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. எதிர்­வரும் ஏப்ரல் மாதத்தில் பொதுத்­ தேர்தலும் அதைத் தொடர்ந்து வரும் மாதங்­களில் கலைக்­கப்­பட்­டுள்ள 9 மாகா­ணங்­க­ளுக்­கு­மான மாகாண சபைத் தேர்த­லும் ­ந­டை­பெ­று­மென்ற எதிர்­பார்ப்­பு­முள்­ளது.

அந்­த­வ­கையில்,இவ்­வ­ருடம் நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்தல் ­க­டந்த கால பொதுத் தேர்தலை விடவும் பலப் ­ப­ரீட்சை மிக்க தேர்தலாக அமையக் கூடும். ஏனெனில், ஆளும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன, கூட்­டணிக் கட்­சிகள் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையைப் பெறு­வ­தற்கு கட்சி சார்­பான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்ள வேளை ஐக்­கிய தேசியக் கட்சி அல்­லது ஐக்­கிய தேசிய முன்­னணி பிர­தமர் கன­வோடு இத்­தேர்த­தலைச் சந்­திக்­க­வுள்­ளது. இச்­சந்­தர்ப்­பத்தில் தமிழ்­ பேசும் மக்கள் சார்­பான தனித்­துவக் கட்­சிகள் கூட்­டா­கவும், தனித்தும் இத்தேர்தலுக்கு முகம் ­கொ­டுக்­க­வுள்­ளன.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளிலும், அதற்கு வெளியிலும் போட்­டி­யிட உத்­தே­சித்­துள்­ள­தாக அறி­வித்­துள்ள நிலையில், மலை­ய­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தமிழ் முற்­போக்கு முன்­ன­ணியும் ஏனைய கட்­சி­களும் பாரா­ளு­மன்­றப் பிர­தி­நி­தித்­து­வத்தை அதி­க­ரிப்­ப­தற்­கான முன்­ன­கர்­வு­களை மேற் ­கொண்­டுள்­ளதைக் காண முடி­கி­றது.

இச்­சந்­தர்ப்­பத்தில் முஸ்லிம் சமூ­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்சித் தலை­மை கள் இத்­தேர்தலை எவ்­வாறு கையா­ளப் ­போ­கி­ன்றன? சமூகம் சார்பில் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தை அதி­க­ரிப்­ப­தற்­காக எத்­த­கைய வியூ­கங்­களை வகுக்கும்? இதில் முஸ்லிம் மக்கள் எத்­த­கைய தீர்­மா­னத்­துக்கு வரப்­போ­கி­றார்கள் என்ற கேள்­வி­க­ளுக்கு மத்­தியில்,தனித்­துவக் கட்­சி­களை நிரா­க­ரித்து பெரும் தேசிய கட்­சி­ சார்­பான வேட்­பா­ளர்­களை ஆத­ரிக்கும் ஒரு மன­ நி­லைக்கு குறிப்­பாக வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியில் வாழும் முஸ்­லிம்கள் வந்­து­விட்­டார்­களா எனவும் எண்­ணத் ­தோன்­று­கி­றது.

இவற்­றுக்­கெல்லாம் அப்பால் முஸ்­லிம்கள் கடந்து வந்த அர­சியல் பாதையில் முஸ்லிம் அர­சியல் எத்­த­கைய நிலையில் காணப்­பட்­டுள்­ளது என்­பது தொடர்­பிலும் கவனம் செலுத்த வேண­டி­யுள்­ளது. சுதந்­தி­ரத்­துக்கு முன்னும் பின்னும் உரு­வான சில சூழ்­நி­லைத்­தாக்கங்­களின் விளை­வு­களால்  முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தி­யி­லி­ருந்து அமைப்­புகள் மற்றும் அர­சியல் கட்­சிகள் உத­ய­மா­கி­யி­ருக்­கின்­றன. ஆனால், இக்­கட்­சி­க­ளினால் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கிய பிரச்­சி­னை­க­ளுக்கு முழு­மை­யான தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்க முடி­ய­வில்லை. தீர்வைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக கூட்­டாக இணைந்து செயற்­ப­டவும் முடி­ய­வில்லை. இதனால், முஸ்லிம் அர­சியல் பல­வீ­ன­டைந்­தது.

அத்­துடன் கால ஓட்­டத்தில் இக்­கட்­சிகள் மக்கள் செல்­வாக்கை இழந்­தன. 1948ஆம் ஆண்டு முதல் 1982ஆம் ஆண்டுக் காலம் வரை இந்­நாட்டில் வாழும் முஸ்­லிம்­களை ஒன்­றி­ணைக்கும் பல­மிக்­க­தொரு அர­சியல் கட்சி உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. அதற்­கான முயற்­சி­களும் ஆரோக்­கி­ய­மாக இத­ய­சுத்­தி­யோடு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்­பதை இக்­கட்­சி­களின் செல்­வாக்­கி­ழப்­பையும் அதனால் ஏற்­பட்ட பல­வீ­னத்­தையும் முஸ்லிம் அர­சியல் வர­லாற்றில் நோக்க முடி­கி­றது.

இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றுக் காயங்­க­ளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்­டு­மாயின் தன்­மா­னத்தை இழக்­காத, உறு­தி­யான, கொள்கைப் பிடிப்­போடு கூடிய, தனித்­து­வ­ மிக்க, பல­மான அர­சியல்  கட்சி ஒன்று உரு­வாக்­கப்­ப­டு­வது அவ­சியம் என்ற சிந்­தனை முஸ்லிம் காங்­கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மறைந்த அஷ்­ர­பிடம் உதித்­தது. இந்த சமுதாயச் சிந்­த­னையின் வழியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எனும் கட்சி 1982ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்டு, 1986இல் அர­சியல் கட்­சி­யாகப் பதிவு செய்­யப்­பட்­டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் வரவு வடக்கு, கிழக்கு அர­சி­யலில் மாத்­தி­ர­மின்றி தென்­னி­லங்கை அர­சி­யலிலும் விமர்­ச­னங்­களை உரு­வாக்­கி­யது. இருப்­பி­னும் அன்­றைய தேவை தனித்­துவக் கட்­சி­யாகக் கரு­தப்­பட்­ட­தனால் முஸ்லிம் காங்­கி­ரஸை பல­முள்ள அர­சியல் சக்­தி­யாக புடம் ­போட வேண்­டிய நிர்ப்­பந்தம் மறைந்த தலைவர் அஷ்­ர­ப்புக்கு ஏற்­பட்­டது. 1989ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத் தேர்தலி­னூ­டாக 4 ஆச­னங்­க­ளையும், 1994ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத்­ தேர்தலின்­போது 7 ஆச­னங்­களையும் பெற்­றதன் மூலம் முஸ்லிம் காங்­கி­ரஸின் வளர்ச்சி அஷ்­ரபின் யுகத்தில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது.

அத்­துடன் அஷ்­ரப்பின் ஆரோக்­கி­ய ­மிக்க அர­சியல் பயணம் தென்­னி­லங்­கையில் பாரிய அதிர்வை ஏற்­ப­டுத்­தி­யது. ஆளு­மையும் அர­சியல் எதிர்­கால வியூக சிந்­த ­னையும் நிறைந்த அஷ்­ரபின் அர­சியல் பய­ணத்தின் வெற்றி ஒளி இலங்கை முழுதும் பிர­கா­சிக்கத் தொடங்­கி­யதன் விளைவு அவரை நோக்­கிய கருத்­து­வா­தங்­க­ளையும் விமர்­ச­னங்­களையும் அதி­க­ரிக்கச் செய்­தது. அவ­ரால் சமூக நலன்­கொண்டும் நாட்டின் நலன் கரு­தியும் முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக கூக்­கு­ரல்­களை பாரா­ளு­மன்­றத்­துக்குள்ளும் அதற்கு வெளியிலும் சில்­லறை முஸ்லிம் அர­சியல் நபர்­க­ளைக்­கொண்டே முன்­னெ­டுக்கச் செய்­யப்­பட்­டன.

இந்­நி­லை­யில்­தான், அவ­ரது சிந்­த­னை யில் மாற்றம் ஏற்­பட்­டது. வற்­பு­றுத்தல், வலுக்­கட்­டா­ய­மில்­லாத வழி­க­ளி­னூ­டாக மக்­களைச் செயற்­பட ஊக்­கு­விப்­பதன் மூலம் ஒரு திட்­ட­மிட்ட திசையில் நகர்த்திச் செல்லும் செயல்­முறை கொண்ட தலை­மைத்­து­வத்­தால் நீண்­ட ­கால, குறு­கிய கால நோக்­கங்­களை அடைய முடியும். அதன் அடிப்­ப­டையில் பல குறு­கிய கால செயற்­றிட்­டங்­களில் வெற்றி கண்ட அஷ்ரப் நீண்ட கால செயற்­றிட்­டங்கள் பல­வற்­றையும் வகுத்துச் செயற்­பட்டார். அதில் ஒன்­றுதான் புது யுகத்தை நோக்கிப் புறப்­பட அவர் முயற்­சித்­த­தாகும். 2012ஆம் ஆண்டை நோக்கி என்ற அடிப்­ப­டையில் தேசிய ஐக்­கிய முன்­னணி என்ற அர­சியல் கட்­சியை புறாச் சின்­னத்தில் ஸ்தாபித்து அதில் அனைத்து இனங்­க­ளையும் சேர்ந்த அர­சியல் பிர­மு­கர்­க­ளையும் மக்­க­ளையும் இணையச் செய்­த­தாகும்.

1998ஆம் ஆண்டு ஸ்தாபிக்­கப்­பட்ட தேசிய ஐக்­கிய முன்­னணி குறித்து 1999ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட விவா­தத் தின் போது மறைந்த தலைவர் அஷ்ரப் பார­ளு­மன்­றத்தில் இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருந்தார். "ஒரு மாற்றம் ஒன்று தேவை என்றே நான் உணர்­கின்றேன். இலங்கை மக்­க­ளு­டைய நாடு, ஸ்ரீலங்கா என்­பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். இனம், மதம், மொழி எனக் கரு­தாமல் ஒவ்­வொரு ஸ்ரீலங்கா பிர­ஜைக்கும் நாடு சொந்­த­மா­னது. பெரும்­பான்மை, சிறு­பான்மைச் சமூ­கங்கள் எனும் வார்த்­தைகள் பாவிப்­பதைத் தடுக்கும் வகை­யிலும் அவ்­வாறு பாவிப்­ப­வர்­களைத் தண்­டிப்­ப­தற்­கா­கவும் சட்­டங்கள் ஏற்­ப­டுத்த வேண்­டு­மெ­னவும் குறிப்­பிட்ட அவர், "முஸ்லிம் காங்­கிரஸ் பார்­வையில் மனித இனமும் அனைத்து ஸ்ரீலங்கா மக்­களும் ஒரு குடும்­பமே. எல்லாம் வல்ல இறை­வனின் படைப்­பு­களே நாம் அனை­வரும். நாட்டைக் கட்டி எழுப்­பு­வ­தற்கு குறு­கிய பாதைகள் இல்லை என்­பதை நாங்கள் திட­மாக நம்­பு­கிறோம். அது மலர்கள் இல்­லாத முட்கள் நிறைந்த,  நீண்ட கஷ்­ட­மான பாதை­யாகும். நாட்டில் புரை­யோடிப் போயி­ருக்கும் சில பிரச்­சி­னை­க­ளுக்கு  விடை­ காண்­பதில் காங்­கிரஸ் வெற்றி கண்­டுள்­ளது.

ஐக்­கி­யத்­தையும், ஒருங்­கி­ணைப்பையும் பிர­தி­ப­லிக்கும் பொருட்டு மூன்று நிறங்­க­ளையும் தேசியக் கொடியில் சந்­திக்கச் செய்­துள்ளோம். மூன்று சமூ­கங்­க­ளையும் கொண்­ட­தாக, ஒற்­று­மைப்­பட்ட மக்­களின் நிறம்  ஒன்­றையும் கண்­டெ­டுப்­பதில் நாங்கள் வெற்றி பெற்றோம். அதுதான் சிவப்பும், கரு­மஞ்­சளும், பச்­சையும் கூட்டுச் சேர்ந்த நிற­மாகும். நிறம் சம்­பந்­த­மாக அர­சியல் கட்­சி­களால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட கட்­டுக்­க­தை­களை அறிந்து வான­வில்லின் ஏழு அழ­கிய நிறங்­க­ளையும் கொண்ட தேசிய ஐக்­கிய முன்­னணிக் கொடியை ஏற்­றி­யுள்ளோம். இறைவன் நாடினால் 2012ஆம் வரு­ட­ம­ளவில் நமது மக்கள் அனை­வ­ருக்கும் சமா­தானம் கிடைக்கும் வகையில் தொழிற்­ப­டு­கின்றோம்” என்று கூறிய மறைந்த தலைவர் அஷ்ரப், இலங்கைத் தாய்க்கு ஒவ்­வொரு பிர­ஜையும் தேவை, அனைத்துப் பிர­ஜைகளுக்கும் ஓர் இலங்கை தேவை. இதுதான் தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் இலச்­சி­னை­யாகும் என அவர் அன்று தெரி­வித்து இனத்­துவ அர­சி­ய­லிலி­ருந்து விடு­பட்டு அனைத்து இனத்­த­வர்­க­ளையும் கொண்ட ஒரு தேசிய அர­சியல் கட்­சி­யி­னூ­டாக இந்­நாட்டில் நிரந்­தர சமா­தா­னத்தையும், சக­வாழ்­வையும், நல்­லி­ணக்­கத்­தையும் கட்­டி­யெழுப்ப வேண்டும்  என்ற இலக்­குடன் அதற்­கான அர­சியல் பய­ணத்தை அவர் முன்­னெ­டுத்தார்.

ஆனால்,அவ­ரது அர­சியல் சிந்­தனை மாற்­ற­மும்­ அந்தப் பய­ணமும் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. அவரது அகால மர­ணத்தின் பின்­னர் ­பா­சறைப் போரா­ளி­க­ளால் அவ­ரது இலக்கு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. மாறாக சொற்ப இலா­பங்­க­ளுக்­கா­கவும் சுய­நல, பெயர்­தாங்கி அர­சி­யலுக்­கா­கவும் பிள­வுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. அவர் விட்ட இடத்­தி­லி­ருந்து அவ­ரது இலக்கு முன்­னெ­டுக்­கப்­ப­டாது கைவி­டப்­பட்­டதன் பாவம் முஸ்லிம் சமூ­கத்தை மீண்டும் முப்­பது வருடங்கள் பின்­னோக்கி நகர்ந்து சிந்­திக்­கச் செய்­துள்­ளது. இதனை பச்­சை­யையும், நீலத்­தையும், சிவப்­பையும் ஆத­ரிக்­கு­மா­று­வி­டுக்­கப்­ப­டு­கின்ற கோரிக்­கைகள், அறிக்­கைகள் மூலம் புரியக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

"எதிர்­வரும் பொதுத் தேர்தலில் முஸ்­லிம்கள் இன ரீதி­யி­லான கட்­சி­களைத் தவிர்த்து பெரும் தேசியக் கட்­சி­களை ஆத­ரிக்க வேண்டும். அக்­கட்­சி­க­ளி­னூ­டாக முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தைப் பெற­ மு­டியும். பாது­காப்பைப் பெற முடியும். முஸ்லிம் கட்­சிகள் பின்­ன­டைவைக் கண்­டுள்­ளன. பெரும்­பான்மைக் கட்­சிகள் முஸ்லிம் கட்­சி­களை இணைத்­துக்­கொண்டு தேர்தலில் போட்­டி­யி­டு­வதும் தற்­போது கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. ஆத­லால், தங்கள் நலன் ­பேணும் பெரும்­பான்மைக் கட்­சி­களை  முஸ்­லிம்கள் ஆத­ரிக்க வேண் டும்” என்ற கருத்­துகள் தென்­னி­லங்கை முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து வெளிப்­பட்­டி­ருக்­கி­ன்றன.

ஏப்ரல் 21 தாக்­குதல் முஸ்­லிம்­களை இந்­நாட்டில் அந்நி­யப்­ப­டுத்தும் அள­வுக்கு இட்டுச் சென்­றி­ருப்பது உண்மை. அவற்­றிற்குச் சான்­றான பல நிகழ்­வுகள் நடந்­தே­றி­யுள்­ளன. இருப்­பினும், 'பழைய குருடி கதவைத் திறடி' என்ற நிலை­யி­லான முஸ்லிம் அர­சியல் சிந்­த­னையும் அதன் வழி­யி­லான நகர்வும் ஆரோக்­கி­ய­மா­ன­தா­கு­மா என்று சிந்­திப்­பதும் அவ­சி­ய­மா­கி­றது. சமூக ரீதி­யி­லான அர­சியல் பலம் ஆரோக்­கி­ய­மா­னதா அல்­லது எடுப்­பார் கைப்­பிள்ளை அர­சியல் ஆரோக்­கி­ய­மா­னதா என்று சிந்­திக்க வேண்­ டிய சூழலும் முஸ்லிம் சமூ­கத்­துக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது. முஸ்லிம் அர­சி­யலின் பல­வீனம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க பல­மாக அமையும். ஏனெனில், தற்­போது முஸ்­லிம்­களின் மூக்கின் நுனி­ வரை இன­வாதம் வந்து நிற்­கி­றது என்­ப­தையும் காண ­மு­டி­கி­றது.

உலகில் எல்லா மக்­களும், மதங்­களைத்  தழு­வியே வாழ்­கின்­றனர். எல்லா மதங்­களும் நல்­ல­வற்­றையே போதிக்­கின்­றன. சமயம், மார்க்கம், மதம் என்­பன கருத்­தொ­ரு­மித்த சொற்­க­ளாகும். மதம் என்­ப­தற்கு 'வெறி' என்னும் ஒரு கருத்தும் உள்­ளது. மதம் வெறி­யாக மாறும்­போ­துதான் விரும்­பத்­த­காத பல பிரச்­சி­னைகள் உரு­வெ­டுக்­கின்­றன. இவை இனங்­க­ளுக்­கி­டையில் காணப்­படும் சமா­தானம், சக­வாழ்வு. இன ஒற்­றுமை, இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நம்­பிக்கை என்­ப­வற்றை சவா­லுக்­குட்­ப­டுத்தி பல­மி­ழக்கச் செய்­வதை அவ­தா­னிக்­கலாம்.

ஓர் இனம் மற்­றைய இனத்தை விட மேலா­னது என்ற உள்­ளார்ந்த நம்­பிக்­கையே இன­வாதம் எனக் கரு­தப்­ப­டு­கி­றது. இன­வா­த­மா­னது ஓர் இனம் தொடர்­பான தப்­ப­பிப்­பி­ராயம், ஓரி­னத்­துக்­கெ­தி­ரான வன்­முறை, அடக்­கு­முறை, ஒடுக்­கு­முறை போன்­ற­வற்­றைக் கொண்­டது.   இன­ மே­லாண்மை நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் எதிர்­மறை மனப்­பாங்­கு­க­ளோடு ஏனைய இனங்­களை வெறுத்து, வெறுப்­ப­டையச் செய்து செயற்­ப­டு­கின்­ற­வர்கள் இன­வா­தி­க­ளாகக் கரு­தப் ­ப­டு­கின்­றார்கள்.

பல்­லின சமூ­கங்­களைக் கொண்ட இந்­நாடு சுதந்­தி­ரத்­துக்கு முன்­னரும் சுதந்­தி­ரத்தின் பின்­னரும் எதிர்­கொண்ட அழி­வு­க­ளுக்கு இன­வா­தமும், மத­வா­தமும் முக்­கிய கார­ணி­க­ளாகும். இன­வா­தத்­தையும், மத­வா­தத்­தையும் இயக்கும் பெரும் சக்­தியே அர­சி­ய­லாகும். சுய இலா­பங்­களை அடைந்­து ­கொள்­வ­தற்­காக அர­சி­யலால் தூண்­டப்­ப­டு­கின்ற இன­வா­தமும், மத­வா­தமும், பிர­தே­ச­வாதமும் இந்­நாட்டை அபி­வி­ருத்­தி­ய­டை­வ­தி­லி­ருந்தும் சர்­வ­தே­சத்தில் நன்­ம­திப்பைப் பெறு­வ­தி­லி­ருந்தும், நல்­லி­ணக்க சக­வாழ்­வி­லி­ருந்தும் வர­லாற்று நெடு­கிலும் தடுத்­துக் ­கொண்­டி­ருக்­கி­றது என்­பதை மறுக்க முடி­யாது.

உல­குக்கு அமை­தி­யையும், சக­வாழ்­வை­ யும் விட்­டுக்­கொ­டுப்­பையும் அறி­மு­கப்­ப­டுத்­திய இஸ்­லா­தத்தைப் பின்­பற்­று­கின்ற முஸ்­லிம்கள் திருந்­த­வில்லை, திருந்­துங்கள் என்ற கருத்­துகள் முன்­வைக்­கப்­ப­டு­வது அல்­லது முன்­வைக்­கப்­பட்­டது தொடர்பில் முஸ்­லிம்கள் சிந்­தித்­தார்­களா?, அவர்கள் முஸ்­லிம்கள் மீது அன்று சுமத்­திய குற்­றங்­க­ளுக்கும், விமர்­ச­னங்­க­ளுக்கும் முறை­யாக பதி­ல­ளித்­தார்­களா? முஸ்லிம் தரப்பு பிழை­களைத் திருத்த முயற்­சித்­தார்­களா அல்­லது முஸ்­லிம்­க­ளது பக்கம் எந்தப் பிழை­யு­மில்லை என்­பதை ஆதா­ர­பூர்­வ­மாக நிரூ­பித்­தார்­களா என்ற கேள்­வி­க­ளையும் தற்­போது எழுப்ப வேண்­டி­யுள்­ளது. அது ­மாத்­தி­ர­மின்றி பிழை­யான செயற்­பா­டு­க­ளையும் திருத்­தாமல் இருக்க முடி­யாது என்­ப­தை யும் சுட்­டிக்­காட்ட வேண்­டியுள்­ளது.

முஸ்­லிம்கள் ஒவ்­வொரு துறை­யிலும் விடும் சிறு சிறு தவ­று­க­ளும் சட்­டத்­துக்குப் புறம்­பான விட­யங்­களும் பெரும்­பான்மைச் சமூ­கத்தின் மத்­தியில் ஊதிப் பெருப்­பிக்­கப்­ப­டு­கின்­றன. முஸ்­லிம்­களின் பொரு­ளா­தார வளர்ச்சி குறித்தும், வர்த்­தக நட­வ­டிக்கை தொடர்­பிலும் மற்றும் ஏனைய செயற்­பா­டுகள் தொடர்­பிலும் எதிர்­மறை சிந்­த­னைகள் ஊட்டி வளர்க்­கப்­ப­டு­கின்­றன. ஊட­கங்கள் குறிப்­பாக சமூக வலைத் ­த­ளங்கள் இச்­செ­யற்­பா­டு­க­ளுக்கு பேரா­யு­த­மாகப் பயன்­ப­டுத்­தப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

இந்­நி­லையில், சம­கால அரசியல் சூழல் தொடர்பில் சிந்­திப்­பதும் சாணக்­கி­ய­மாகச் செயற்­பட்டு முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான பரப்­பு­ரை­க­ளையும் செயற்­பா­டு­க­ளையும் வெற்­றி­ கொள்­­வதும் அவ­சி­ய­மா­க­ உள்­ளது.ஏனெனில், இந்­நாடு எல்­லோ­ருக்கும் சொந்­த­மா­னது. இந்­நாட்டின் அர­சி­ய­ல­மைப்­பா­னது இந்­நாட்டில் வாழும் அனைத்து இனங்­க­ளும் சமூ­கங்­களும் தங்­க­ளுக்­கு­ரிய உரி­மை­க­ளோடு வாழ முடியும் என்றே கூறி­யி­ருக்­கி­றது. அத­னால் சந்­ததி சந்­த­தி­யாக இந்­நாட்டில் வாழ­வி­ருக்கும் முஸ்­லிம் கள் பொரு­ளா­தா­ரத்தை மாத்­தி­ர­மின்றி அத்­தனை சமூகக் கூறு­க­ளையும் பாது­காத்து ­இன ஐக்­கி­யத்­துடன் வாழ வேண்­டிய தேவை­யுள்­ளது.

இஸ்லாம் மார்க்­க­மா­னது முஸ்­லிம்­களின் சகோ­த­ரத்­துவம் என்ற ஒற்­று­மையில் உரு­வான ஒப்­பற்ற வாழ்க்கை நெறி. இருந்தும், இதன் ஒழுக்கப் பண்­பு­க­ளையும் மாண்­பு­க­ளையும் சிதைத்து சின்­னா­பின்­ன­மாக்கி சுய இலா­பங்­க­ளுக்­கா­கவும், தனிப்­பட்ட நிகழ்ச்சி நிரல்­க­ளுக்­கா­கவும், கட்சி ரீதி­யா­கவும், ஆன்­மீகக் கொள்­கைகள் ரீதி­யா­கவும், அமைப்­புகள் ரீதி­யா­கவும் தனித்­த­னியே பிரிந்து செயற்­பட்டதன் பலா­ப­லன்­களை சமூகம் அனு­ப­வித்துக் கொண்­டி­ரு­க்­கி­றது

சமூக ஒற்­றுமை என்­பது ஒரு கடமை, ஒரு வணக்கம். சமூ­கத்தில் வாழுகின்ற ஒவ்­வொ­ரு­ தனி நபர்­க­ளுக்­கி­டையே பரஸ்­பர அறி­முகம், புரிந்­து­ணர்வு, ஒப்­பந்தம், ஐக்­கியம் இருக்க வேண்டும்.

இந்த எதிர்­பார்ப்வை நிறை­வேற்ற வேண் ­டிய முஸ்­லிம்கள் பிரிந்து நின்று எதையும் சாதிக்க முடி­யாது. ஒற்­று­மைக்கு வழி­காட்ட வேண்­டிய சமூகம் நான் பிடித்த முய­லுக்கு முன்று கால் என்ற நிலையில் இருந்து விடுபட வேண்டும். இந்­நாட்டில் ஏற்­படும் ஆட்சி அதி­கார மாற்றப் பரப்­புக்குள் வாழும் முஸ்லிம் சமூகம்  எத்­த­கைய சவால்­க­ளுக்கு முகம் ­கொ­டுக்கும் என்று சிந்­தித்து அச்­ச­வால்­களை வெற்றி கொள்­ளவும்,எழுந்­துள்ள மற்றும் எழும் பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய தீர்பபைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கும் இரா­ஜ­தந்­திர ரீதியில் நிதா­னத்­துடன் அர­சியல் நகர்­வு­களை முன்­னெ­டுக்க முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் வேற்­று­மைக்குள் ஒன்­று­பட்டு செயற்­பட முன்­வர வேண்­டி­யது தற்­கால அர­சியல் சூழலின் அதி­முக்­கிய தேவை­யா­க­வுள்­ளது. இத்­தே­வை­யா­னது முஸ்­லிம்­களின் அர­சி­ய­லுக்குப் பலத்தை அளிப்­ப­துடன் எதிர்­காலத் தேர்தல்­களில் முஸ்லிம் பிரதி­நி­தித்­து­வங்­களை அதி­க­ரிக்­கவும் வழி­வகுக்கும்.

அத்­தோடு, இனத்­து­வத்­தி­னூ­டான அர­சி­யலை மாத்­திரம் முன்­னெ­டுப்­பது எதிர்­கால நலன்­களில் பாதிப்பை ஏற்­ப­டுத்­த லாம் என்றும் தேசிய இன­மாக வாழும் முஸ்­லிம்­களை தேசிய அர­சி­ய­லி­னூ­டாக தேசிய அர­சியல் நீரோட்­டத்தில் சங்­க­மிக்கச் செய்ய வேண்டும் என்றும் கரு­தியே அஷ்ரப் தேசிய ஐக்­கிய முன்­னணி என்ற அர­சியல் கட்­சி­யையும் ஸ்தாபித்து அக்­கட்­சி­யி­னூ­டாக தேசிய மட்­டத்தில் பல இலக்­கு­களை அடைந்து கொள்­ளவும் திட்­ட­மிட்டு, 2000ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத்­தேர்தலில் பொதுஜன ஐக்­கிய முன்­ன­ணி­யுடன் முஸ்லிம் காங்­கி­ரஸை இணைத்து போட்­டி­யிடச் செய்த அஷ்ரப் தேசிய ஐக்­கிய முன்­ன­ணி­யையும் தேர்தல் களத்தில் இறக்­கினார்.

இருப்­பினும், அத்­தேர்தலை அவரால் சந்­திக்க முடி­ய­வில்லை. ­தேர்தல் நடை­பெ­று­வ­தற்கு ஒரு சில நாட்­க­ளுக்கு முன்னர் அவரை அகால மரணம் அழைத்துக் கொண்­டது. இருந்தும், அத­தேர்தலில் 1,97,983 வாக்­குகள் தேசிய ரீதி­யாக தேசிய ஐக்கிய முன்னணிக்குக் கிடைத்ததுடன் ஒட்டுமொத்தமாக 11ஆசனங்கள் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய ஐக்கிய முன்னணி ஊடாகக் கிடைக்கப்பெற்றன. அஷ்ரபின் அரசியல் சாணக்கியம் பல்வேறு அரசியல் வெற்றிகளை முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி முழு சிறுபான்மை சமூகத்துக்கும் பெற்றுக் கொடுத்தது. அந்த வெற்றியின் பலன்களை அதிகம் நுகர்ந்தவர்கள் கிழக்கு வாழ் முஸ்லிம்கள்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இருப்பினும் அவரின் மரணம் முஸ்லிம் காங்கிரஸை பிளவுக்குள்ளாக்கியதோடு அவரின் தேசிய மக்கள்சார் இலக்குகளை அடைந்து கொள்ளும் தலைமைகளையும் அடையாளம் காண முடியாது பெரும் தலைமைத்துவ இடைவெளியை விட்டுச் சென்றது.

இத்தலைமைத்துவ இடைவெளிதான் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை பின்னோக்கி சிந்திக்கச் செய்துள்ளது. தேசிய நீரோட்டத்தில் மக்களை இணைத்து அதன் மூலம் நிரந்தர சமாதானத்தை இந்நாட்டில் ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணியினூடாக அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்த கட்சியாக பரிணமிக்கச் செய்து இந்நாட்டில் புதிய அரசியல் யுகத்தை உருவாக்கும் அஷ்ரபின் முயற்சியையும், இலக்கையும் கைவிட்டு தங்களது நலன்களுக்காக கட்சி ரீதியாக பிரிந்து நின்று செயற்பட்ட பாவத்தின் விளைவு நிழலாடிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத் ­தேர்தலில் முஸ்லிம் சமூகம் சார்பில் அதிக ஆசனங்களைப் பெறுவதற்கான வியூகங்களை வகுத்துச் செயற்படுவது முஸ்லிம் அரசியல் தலைமைகளின் மீது காலம் சுமத்தியுள்ள சுமையாகும். இந்தச் சுமையைச் சுமந்த வர்களாகச் செயற்பட்டு எதிர்வரும் பொதுத் தேர்தலில் அதிகளவிலான ஆசனங்களைப் பெறுவதன் மூலமே முஸ் லிம் அரசியலைப் பலமிக்கதாக மாற்ற முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் ஆலோசனையாக உள்ளதைக் காண முடிகிறது. முஸ்லிம்களின் அரசியல் பலம் அதிகரிக்கப்பட வேண்டுமாயின் அதற்கு ஒருமித்த வாக்குப்பலம் அவசியமாகவும், தேவையாகவும் கருதப்படுகிறது. இந்த அவசியத்தையும், தேவையையும் காலம் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் சுமத்தியிருக்கிறது என்பதே நிதர்சனமாகும்.

- எம்.எம்.ஏ.ஸமட்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22