நோபல் பரிசு வென்றவர்கள் கூட தவறு இழைக்கலாம்!: மன்னிப்பு கோரிய விஞ்ஞானி

06 Jan, 2020 | 03:06 PM
image

2018 ஆம் ஆண்டில் நோபல் பரிசு வென்ற அமெரிக்க பெண்மணி பிரான்சஸ் அர்னால்ட், வெளியிட்ட ஈ.கோலி பாக்டீரியா பற்றிய ஒரு தனி ஆய்வறிக்கையில் உள்ள பிழை சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து அதற்கு மன்னிப்புக்கோரியுள்ளார்.

2018 ஆம் ஆண்டின் உயிரியலில் இரசாயன எதிர்வினைகளை அதிகரிக்கச் செய்யக்கூடிய புதிய நொதியங்களை உருவாக்க ‘இயக்கப் பரிணாமம்’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தியமைக்காக அமெரிக்காவைச் சேர்ந்த பிரான்சஸ் அர்னால்ட், ஜார்ஜ் பி. ஸ்மித், இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பிரிடன் கிரகோரி வின்டர் ஆகியோருக்கு  நோபல் விருது வழங்கப்பட்டது.  ஈ.கோலி பாக்டீரியாவை அழிக்கச் செய்து புதிய ஆண்டிபைட்டிக்குகளை உருவாக்குவதற்கு இத்தொழில்நுட்பங்களை அவர்கள் பயன்படுத்தியிருந்தனர். 

எனினும், பிரான்சிஸ் அர்னால்ட் வெளியிட்ட ஈ.கோலி பாக்டீரியா பற்றிய ஒரு தனி ஆய்வறிக்கை, ”கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி” இல் பணி புரியும் வைத்தியரால் தவறு என சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து  தமது  ஆய்வறிக்கையை திரும்பப் பெற்றதுடன், ஆராய்ச்சி சரியாக  மேற்கொள்ளப்பட்டவில்லை என தமது  தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவட்டுள்ளார் டாக்டர் பிரான்சஸ் அர்னால்ட்.

தமது பதிவில், 

 'ஒப்புக்கொள்வது வேதனையானது, ஆனால் அவ்வாறு செய்வது முக்கியம். அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது சமர்ப்பிக்கப்பட்டபோது நான் சற்று வேலைப்பழுவுடன் இருந்தேன், என் வேலையை சரியாக செய்யவில்லை. என தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக ஏனைய புத்திஜீவிகள் இவரை நேர்மையானவர் என்றும், நோபல் பரிசு வென்றவர் கூட தவறு இழைக்கலாம் என்பதை வெளிபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்து பாராட்டியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right