இலங்கை சுதந்திரத்தின் உதயமும் தமிழரசுக் கட்சியின் பிறப்பும்

Published By: J.G.Stephan

06 Jan, 2020 | 12:38 PM
image

இலங்கைத் தமி­ழர்­களின் அர­சியல் வர­லாற்றில் 1949 டிசம்பர் 18 ஆம் திகதி மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தொரு தின­ம். அன்­றைய தினம் இரண்டு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், இரண்டு செனட்­டர்­கள் உட்­பட 60 தமி­ழர்­களைக் கொண்ட குழு­வொன்று ஐக்­கி­யப்­பட்ட இலங்­கைக்குள் தமிழ்ப்­பேசும் மக்­க­ளுக்­கென சுயாட்சி அர­சொன்றை நிறு­வு­வதை இலக்­காகக் கொண்டு புதி­ய­தொரு அர­சியல் கட்­சியை ஆரம்­பித்­தது. அந்தக் கட்­சிக்கு ’இலங்கைத் தமிழ்’ அரசுக் கட்சி” என்று பெய­ரி­டப்­பட்­டது.

ஆனால் கட்­சியின் தாப­கர்கள் ஆங்­கி­லத்தில் அதை ’சமஷ்டிக் கட்சி’ (Federal Party) என்று வர்­ணித்­தனர். புதிய கட்­சியின் பெயர் சமஷ்டிக் கட்­சி­யல்ல. ஆனால் கட்சி எதைக்­கோரி நிற்­கி­றது என்­பதை விளக்­கு­வ­தற்­கா­கவே அவ்­வாறு சமஷ்டிக் கட்சி என்று கூறப்­பட்­ட­தென புகழ்­பெற்ற அர­சியல் விஞ்­ஞானப் பேரா­சி­ரி­ய­ரான ஏ.ஜே.வில்சன் கூறினார். ’அரசு’ (State)என்­பது சமஷ்டிக் கட்­ட­மைப்­பிற்குள் இருக்கும் ஓர் அலகைக் குறிக்­கின்­றதே தவிர, புதிய கட்­சியின் தோற்­றத்தை எதிர்க்­கின்ற சிலர் கூறி­யதைப் போல சுயா­தி­பத்­தியம் கொண்ட ஓர் அர­சை­யல்ல என்று ’இலங்கைத் தமிழ் தேசி­ய­வாதம்’ என்ற தனது நூலில் வில்சன் எழு­தி­யி­ருக்­கிறார். துர­திஷ்­ட­வ­ச­மாக இந்தச் சொல் வழக்­கி­லுள்ள குழப்­ப­நிலை பெரும்­பான்மைச் சமூ­கத்தின் பல உறுப்­பி­னர்­களின் மனங்­களில் சந்­தே­கத்­திற்­கான விதை­களை ஊன்­று­வ­தி­லேயே முடிந்­து­விட்­டது.

புதிய கட்­சியின் முத­லா­வது தலை­வ­ராக எஸ்.ஜே.வி.செல்­வ­நா­யகம் தெரிவு செய்­யப்­பட்ட அதே­வேளை, டாக்டர் ஈ.எம்.வி.நாக­நா­தனும், வி.நவ­ரட்­ணமும் இணைச்­செ­ய­லா­ளர்­க­ளாகத் தெரிவு செய்­யப்­பட்­டனர். சுதந்­தி­ரத்­திற்குப் பின்­ன­ரான இலங்­கையில் அர­சியல் விவா­தத்­திற்குள் சமஷ்­டிக்­கான கோரிக்­கையை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சி­யே­. தமி­ழ­ர­சுக்­கட்­சியின் பிறப்பும், வளர்ச்­சியும் சமஷ்டி ஏற்­பாடு ஒன்­றி­னூ­டாக அதி­கா­ரப்­ப­ர­வ­லுக்­கான அதன் கோரிக்­கையும் இலங்கை நாட்டின் அர­சி­ய­லுக்குள் துடிப்­பா­ன­தொரு கட்­டத்தை அறி­முகம் செய்­தது. இந்தக் கட்சி தொடங்­கப்­பட்டு 70 வரு­டங்கள் கடந்­து­விட்ட போதி­லும்­கூட, அது சமஷ்டி என்ற சிந்­த­னையைத் தன்­னுடன் வரித்­துக்­கொண்­ட­தா­கவே தொடர்ந்தும் விளங்­கு­கி­றது.

தற்­போது இலங்கைத் தமி­ழர்­களை அர­சியல் ரீதியில் பிர­தா­ன­மாகப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்புத்தான்.  அந்தக் கூட்­ட­மைப்பின் பிர­தான அங்­கத்­து­வக்­கட்சி தமி­ழ­ரசுக் கட்­சியே. அதனைத் தவிர தமி­ழீழ விடு­தலை இயக்கம் (ரெலோ), தமி­ழீழ மக்கள் விடு­தலைக் கழகம் (புளொட்) ஆகி­யவை அதன் ஏனைய அங்­கத்­துவக் கட்­சி­க­ள். ஆனால் தமி­ழ­ரசுக் கட்­சியின் வீட்­டுச்­சின்­னத்தின் கீழேயே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தேர்­தல்­களில் போட்­டி­யி­டு­கி­றது.

மேலும் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பெரும்­பான்­மை­யான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், உள்­ளூ­ராட்­சி­மன்ற உறுப்­பி­னர்­களும் தமி­ழ­ரசுக் கட்­சியைச் சேர்ந்­த­வர்­களே. தற்­பொ­ழுது கலைக்­கப்­பட்­டி­ருக்கும் வட­மா­காண சபை­யி­னதும், கிழக்கு மாகா­ண­ச­பை­யி­னதும் பெரும்­பான்­மை­யான உறுப்­பி­னர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சியைச் சேர்ந்­த­வர்­களே.

தமி­ழ­ரசுக் கட்­சியின் 70 ஆவது வருட நிறைவை முன்­னிட்டு 2019 டிசம்பர் 18 புதன்­கி­ழமை நல்­லூ­ரி­லுள்ள இளங்­க­லைஞர் மண்­ட­பத்தில் நிகழ்­வொன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. யாழ்ப்­பாண மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வ­ரு­மான சோம­சுந்­தரம் சேனா­தி­ராஜா (மாவை சேனா­தி­ராஜா) அந்தக் கூட்­டத்­திற்குத் தலைமை தாங்­கினார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும், திரு­கோ­ண­மலை மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா­ஜ­வ­ரோ­தயம் சம்­பந்தன் மற்றும் யாழ் ­மா­வட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன், தமி­ழ­ரசுக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் முன்னாள் கிழக்கு மாகா­ண­ச­பையின் அமைச்­ச­ரு­மான கே.துரை­ரா­ஜ­சிங்கம், ரெலோவின் தலை­வரும் வன்னி மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் மற்றும் புளொட் தலை­வரும் யாழ் ­மா­வட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் ஆகியோர் அந்தக் கூட்­டத்தில் உரை­யாற்­றினர். கூட்­டத்தில் கலந்­து­கொண்­ட­வர்­களின் மன­நிலை மிகுந்த உற்­சா­க­மா­ன­தாக இருந்­தது. தமி­ழ­ரசுக் கட்சி ரெலோ­வு­டனும், புளொட்­டு­டனும் சேர்ந்து எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்குப் பெரும் நம்­பிக்­கை­யு­ணர்­வுடன் தயா­ரா­வதைப் போன்று தோன்­றி­யது.

முன்னர் குறிப்­பிட்­ட­வாறு தமி­ழ­ரசுக் கட்­சியின் தோற்றம் இலங்கை அர­சி­யலில் முக்­கிய மைல்­கல்­லாக அமைந்­தது. ஏனென்றால் சமஷ்டி யோச­னையை பிர­தான கோட்­பா­டா­கவும், இலக்­கா­கவும் வரித்­துக்­கொண்ட முதன்­மு­த­லான தமிழ் அர­சியல் கட்சி அது­வே­. அந்தப் புதிய கட்சி ஐக்­கி­யப்­பட்­ட­தொரு இலங்­கைக்குள் தமி­ழர்­களின் ஆதிக்­கத்­தி­லான வடக்கு மாகா­ணத்­தையும், தமி­ழர்­களைப் பெரும்­பான்­மை­யி­ன­ராகக் கொண்ட கிழக்கு மாகா­ணத்­தையும் உள்­ள­டக்­கிய தமிழ் சுயாட்சி மாநி­ல­மொன்றை வேண்­டி­நின்­றது. சுயாட்சித் தமிழ் மாநி­லத்­திற்கும், நாட்டின் எஞ்­சிய பகு­தி­க­ளிலும் உள்ள சிங்­கள அர­சிற்கும் இடையில் சுயாட்சி ஒன்­றியம் ஒன்றை அந்தக் கட்சி விரும்­பி­யது. இந்தக் கட்­டுரை தமி­ழ­ரசுக் கட்சி எவ்­வாறு உரு­வாக்­கப்­பட்­டது, ஏன் அது சமஷ்டிக் கோரிக்­கையைக் கிளப்­பி­யது என்­பவை பற்­றிய வர­லாற்றுப் பின்­னணி விப­ரங்­களை வாச­கர்­க­ளுக்கு வழங்கும் நோக்­கத்தைக் கொண்­ட­து.

இரண்­டா­வது உலக மகா­யுத்தம் முடி­விற்கு வந்­து­கொண்­டி­ருந்த நிலையில், இந்­திய உப­கண்­டத்­திற்கும் அயல் நாடான இலங்கைத் தீவிற்கும் பிரிட்டிஷ் கால­னித்­துவ ஆட்­சி­யி­லி­ருந்து சுதந்­திரம் கிடைப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் பெரு­ம­ள­விற்குத் தென்­பட ஆரம்­பித்­தன. இலங்கை சனத்­தொ­கையின் சகல பிரி­வு­க­ளு­டனும் ஆலோ­சனை கலந்து அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்த யோச­னை­களை வரை­வ­தற்­காக பிரிட்டிஷ் அர­சாங்கம் 1944 ஆம் ஆண்டு கோமகன் சோல்­பரி தலை­மையில் விசா­ரணை ஆணைக்­கு­ழு­வொன்றை இலங்­கைக்கு அனுப்­பி­யது. அதுவே சோல்­பரி ஆணைக்­கு­ழு­வென்று அறி­யப்­பட்­ட­து.

அகில இலங்கைத் தமிழ்க் காங்­கிரஸ்

சுதந்­தி­ரத்­திற்கு முன்­ன­ரான வரு­டங்­களில் இலங்கைத் தீவில் அர­சியல் கட்சி முறைமை மெது­மெ­து­வாக வேர்­விட ஆரம்­பித்­தது. சோல்­பரி கமி­ஷனின் வரு­கை­யை­ய­டுத்து இலங்கைத் தமி­ழர்கள் அகில இலங்கைத் தமிழ் காங்­கி­ரஸை அமைத்­தனர். அதன் தலை­வ­ராக ஜி.ஜி.பொன்­னம்­ப­லமும், பொதுச் ­செ­ய­லா­ள­ராக எஸ்.சிவ­சுப்­பி­ர­ம­ணி­யமும் செயற்­பட்­டனர். அந்தக் கட்­டத்தில் காங்­கி­ரஸின் பிர­தான இலக்கு சோல்­பரி ஆணைக்­கு­ழுவின் முன்­பாக ’ஐம்­ப­துக்கு ஐம்­பது’கோரிக்­கையை நியா­யப்­ப­டுத்தி வாதி­டு­வ­தா­கவே இருந்­தது. காங்­கிரஸ் ஒரு சம­நி­லை­யான பிர­தி­நி­தித்­துவ முறை­மை­யொன்றை விரும்­பி­யது. பாரா­ளு­மன்­றத்தில் சிங்­களப் பெரும்­பான்­மை­யி­ன­ருக்கு 50 சத­வீத ஆச­னங்­களும், தமி­ழர்கள் உட்­பட ஏனைய சகல சிறு­பான்மை இனக்­கு­ழுக்­க­ளுக்கும் 50 சத­வீத ஆச­னங்­களும் ஒதுக்­கப்­பட வேண்டும் என்­பதே அந்தக் கோரிக்­கை­. சிங்­கள ஆதிக்­கத்தை எதி­ரி­டை­யாகச் சம­நி­லைப்­ப­டுத்­து­வ­தற்கு சிங்­க­ள­வ­ரல்­லாத ஏனைய சமூ­கங்கள் ஒன்­று­சேர்ந்து அழுத்­தத்தைக் கெர்­டுக்­கக்­கூ­டிய வகையில் சிறு­பான்மை சமூகப் பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­தி­செய்­யக்­கூ­டிய ஒரு முறை­மை­யையே காங்­கிரஸ் விரும்­பி­யது. அந்தக் கோரிக்­கையை சோல்­பரி ஆணைக்­குழு நிரா­க­ரித்­தது. ’ஒரு சிறு­பான்­மை­யி­லி­ருந்து செயற்­கை­யான பெரும்­பான்மை’ ஒன்றை உரு­வாக்க ஆணைக்­குழு மறுத்­து­விட்­டது.

சோல்­பரி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை ஒரு வெள்ளை அறிக்­கை­யாகக் கூட்­டி­ணைக்­கப்­பட்டு 1945 அக்­டோ­பரில் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இலங்­கைக்கு ’டொமி­னியன் அந்­தஸ்த்து’ (தன்­னாட்சி உரி­மை­யு­டைய கால­னித்­துவ நாடு) ஒன்றை வழங்கும் திட்­டத்தை முன்­மொ­ழிந்த அறிக்கை தொடர்ந்­து­வரும் காலத்தில் முழு­மை­யான சுதந்­தி­ரத்­திற்கு விதப்­புரை செய்­தது. இலங்கை அமைச்­சர்கள் சபை ஆட்­சே­ப­னை­க­ளுடன் அதை ஏற்­றக்­கொண்­டது. அதைத் தொடர்ந்து அந்தக் கால­கட்­டத்தில் அர­சாங்­க­சபை என்று அறி­யப்­பட்ட (State Council)) சட்­ட­வாக்க சபையின் அங்­கீ­கா­ரத்­திற்­காக ஒரு பிரே­ரணை தோற்­க­டிக்­கப்­பட்­டி­ருந்தால் டொனமூர் அர­சி­ய­ல­மைப்பின் கீழ் அமைக்­கப்­பட்­டி­ருந்த அர­சாங்க சபையே தொடர்ந்தும் நடை­மு­றையில் இருந்­தி­ருக்கும். டொமி­னியன் அர­சி­ய­ல­மைப்­பொன்றின் கீழான சுயாட்சி அர­சாங்­கத்­தி­லி­ருந்து முழு சுதந்­தி­ரத்­திற்கு வழி­வ­குக்­கின்ற ஏற்­பாடு ஒரு தொலை­தூரக் கன­வா­கவே போயி­ருக்கும்.

அகில இலங்கைத் தமிழ்க் காங்­கிரஸ் ஒரு விசேட கூட்­டத்தை நடத்தி, சோல்­பரி அறிக்­கையை நிரா­க­ரிக்கத் தீர்­மா­னித்­தது. அர­சாங்க சபை­யி­லுள்ள சகல சிறு­பான்மை சமூ­கங்­களின் உறுப்­பி­னர்­களும் வெள்ளை அறிக்­கைக்கு எதி­ராக அந்தக் கூட்­டத்தில் வாக்­க­ளிக்க வேண்­டு­மென்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. சோல்­பரி அர­சி­ய­ல­மைப்பை ஏற்­றுக்­கொள்­வதைத் தடுப்­ப­தற்­கான நம்­பிக்கை இழந்த நிலை­யி­லான ஓர் இறு­தி­நேர முயற்­சி­யாகத் தமிழ்க் காங்­கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்­னம்­பலம் லண்­ட­னுக்குச் சென்றார்.

சிறு­பான்­மை­யி­ன­ருக்கு டி.எஸ் உறு­தி­மொழி

அர­சாங்க சபையில் பிரே­ரணை டி.எஸ்.சேன நா­யக்­க­வினால் முன்­மொ­ழி­யப்­பட்­டது. அதை ஆமோ­தித்­தவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்க. ’சுதந்­திர’ இலங்­கையில் சிங்­களப் பெரும்­பான்­மை­யி­னரால் ஆதிக்கம் செய்­யப்­பட்டு ஒடுக்­கப்­ப­டுவோம் என்று சிறு­பான்மைச் சமூ­கங்­க­ளுக்கு, குறிப்­பாக இலங்கைத் தமி­ழர்­க­ளுக்­கி­ருந்த ஏக்கம், சந்­தேகம் மற்றும் பீதியை விளங்­கிக்­கொண்ட டி.எஸ்.சேன­நா­யக்க (பின்னர் இவர் இலங்­கையின் முத­லா­வது பிர­த­ம­ராக வந்தார். ’தேச­பிதா’என்று அழைக்­கப்­பட்டார்) சொல்­வன்­மை­யுடன் வேண்­டுகோள் ஒன்றை விடுத்தார்.

“நான் வழ­மை­யாக ஒரு சிங்­க­ள­வ­னாகப் பேசு­வ­தில்லை. அர­சாங்க சபையின் தலைவர் தன்­னை­யொரு சிங்­களப் பிர­தி­நி­தி­யென்று நினைக்க வேண்­டு­மென நான் கரு­த­வு­மில்லை. ஆனால் ஒரு சமூ­கத்தின் நலன்கள் சகல சமூ­கங்­க­ளி­னதும் நலன்­களே என்று கூறு­வ­தற்­காக ஒரு தடவை நான் சிங்­க­ள­வ­ராகப் பேச­வி­ரும்­பு­கிறேன். நாம் எந்த இனத்தை, மதத்தைச் சார்ந்­த­வர்­க­ளாக இருந்­தாலும் ஒரு­வ­ருக்­கொ­ருவர் உரித்­தா­ன­வர்கள்” என்று அவர் கூறினார்.

சோல்­பரி அர­சி­ய­ல­மைப்பை ஏற்­றுக்­கொள்­ளு­மாறு தமி­ழர்­க­ளையும், ஏனைய சிறு­பான்மைத் தமிழ்ச்­ச­மூ­கங்­க­ளையும் வலி­யு­றுத்­திய சேன நா­யக்க மேற்­கண்­ட­வாறு நேசக்­க­ரத்தை நீட்­டினார்.

“லண்­ட­னி­லி­ருந்து ஆட்சி செய்­யப்­ப­டு­வதை நீங்கள் விரும்­பு­கின்­றீர்­களா? அல்­லது இலங்­கை­யர்­க­ளாக நீங்கள் இலங்­கையை ஆள்­வ­தற்கு உதவ விரும்­பு­கின்­றீர்­களா? சுதந்­திர இலங்­கையில் எம்மால் உங்­க­ளுக்கு எந்த ஊறும் ஏற்­ப­டு­மென்று அஞ்­ச­வேண்­டி­ய­தில்லை என்ற மான­சீ­க­மான உறு­தி­மொ­ழியை காங்­கி­ரஸின் சார்­பிலும், எனது சார்­பிலும் சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்கு வழங்­கு­கின்றேன்” என்று அவர் பிர­க­டனம் செய்தார்.

ஜி.ஜி.பொன்­னம்­பலம் ஐக்­கிய இராச்­சி­யத்­தி­லி­ருந்த வேளையில் அர­சாங்க சபையில் பிரே­ரணை வாக்­கெ­டுப்­பிற்கு விடப்­பட்­டது. ஆத­ர­வாக 51 வாக்­கு­களும், எதி­ராக 3 வாக்­கு­களும் கிடைக்­கப்­பெற்றுப் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. எதி­ராக வாக்­க­ளித்த மூவரில் ஒருவர் சிங்­க­ளவர். இருவர் தமி­ழர்கள். விஜ­யா­னந்த தஹ­நா­யக்க (இவர் பிறகு பிர­த­ம­ராக இருந்தார்), மலை­யகத் தமிழ்த் தொழிற்­சங்­க­வா­தி­க­ளான நடேச ஐயர், ஐ.எக்ஸ்.பெரேய்ரா ஆகி­யோரே அவர்­க­ளாவர்.

சகல இலங்கைத் தமிழ்ப் பிர­தி­நி­தி­களும் முஸ்லிம், மலே, பறங்­கியப் பிர­தி­நி­தி­களும் அர­சாங்க சபையில் இருந்த ஐரோப்­பிய உறுப்­பி­னர்­களும் சோல்­பரி அர­சி­ய­ல­மைப்பை ஆத­ரித்து வாக்­க­ளித்­தனர். இலங்கைத் தமி­ழர்கள் உட்­பட சிறு­பான்­மை­யின சமூ­கத்­த­வர்கள் சிங்­களத் தலை­வ­ரான டி.எஸ்.சேன நா­யக்க மீது நம்­பிக்­கை­வைத்து அவரை ஏற்­றுக்­கொண்­டனர். இது பொதுவில் தமிழ்க் காங்­கி­ர­ஸிற்கும், குறிப்­பாக அதன் தலைவர் ஜி.ஜி.பொன்­னம்­ப­லத்­திற்கும் பெரும் தாக்­க­மாகப் போய்­விட்­டது.

ஜனப்­பி­ர­தி­நி­திகள் சபைக்குத் தேர்தல்

அர­சாங்­க­சபை 1947 ஜூன் 4 ஆம் திகதி கலைக்­கப்­பட்­டது. சோல்­பரி அர­சி­ய­ல­மைப்பில் விதந்­து­ரைக்­கப்­பட்ட ஜனப்­பி­ர­தி­நி­திகள் சபைக்­கான (பாரா­ளு­மன்றம்) பொதுத்­தேர்­தலை 1947 ஆகஸ்ட் 23 தொடக்கம் செப்­டெம்பர் 20 வரையும் நடத்­து­வ­தற்குத் திட்­ட­மி­டப்­பட்­டது. 95 உறுப்­பி­னர்கள் மக்­களின் வாக்­கு­களால் தெரிவு செய்­யப்­பட வேண்­டி­யி­ருந்­தது. 6 பேர் நிய­மன உறுப்­பி­னர்­க­ளாவர். எல்­லா­மாக 85 தேர்தல் தொகு­தி­களே இருந்­தன. அவற்றில் கொழும்பு மத்தி போன்ற ஒரு­சில தொகு­திகள் ஒன்­றுக்கும் கூடு­த­லான உறுப்­பி­னர்­களைத் தெரிவு செய்­தன. 30 செனட்­டர்­களைக் கொண்ட மேல்­ச­பையும் தெரிவு செய்­யப்­ப­ட­ வி­ருந்­தது. பாரா­ளு­மன்றத் தேர்தல் முறைப்­படி நடத்­தப்­பட்டு முடி­வு­களும் அறி­விக்­கப்­பட்­டன. புதி­தாக அமைக்­கப்­பட்ட டி.எஸ்.சேனா­நா­யக்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்சி 42 தொகு­தி­களில் வெற்­றி­பெற்­றது. கலா­நிதி என்.எம்.பெரேரா தலை­மை­யி­லான லங்கா சம­ச­மா­ஜக்­கட்சி 10 ஆச­னங்­களைக் கைப்­பற்­றி­யது. ஜி.ஜி.பொன்­னம்­ப­லத்தின் தமிழ்க் காங்­கிரஸ் 7 தொகு­தி­க­ளிலும், சௌமி­ய­மூர்த்தி தொண்­டமான் தலை­மை­யி­லான இலங்கை இந்­தியர் காங்­கிரஸ் (இன்­றைய இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் அன்று அவ்­வா­றுதான் அறி­யப்­பட்­டது) 6 தொகு­தி­க­ளிலும் வெற்­றி­பெற்­றன.

கலா­நிதி கொல்வின் ஆர்.டி.சில்வா தலை­மை­யி­லான போல்­ஷவிக் லெனினிஸ்ட் கட்சி 5 தொகு­தி­க­ளிலும், கலா­நிதி எஸ்.ஏ.விக்­­ர­ம­சிங்க தலை­மை­யி­லான இலங்கை கம்­யுனிஸ்ட் கட்சி 3 தொகு­தி­க­ளிலும் வெற்­றி­பெற்­றன. கொழும்பு மத்­தி­யி­லி­ருந்து அந்தக் கட்­சியின் ஸ்தாபகத்­த­லைவர் ஏ.ஈ.கண­சிங்க தெரி­வு­செய்­யப்­பட்டார். சுயேச்சை வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிட்ட 21 பேர் வெற்­றி­பெற்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கினர்.

தேர்தல் முடி­வுகள் தமிழ்க் காங்­கி­ர­ஸிற்குக் குதூ­க­ல­ம­ளித்­தன. தேர்­த­லுக்கு முன்­ன­தாக இந்­திய வம்­சா­வளித் தமிழ்த் தலை­வர்­க­ளுடன் உடன்­ப­டிக்கை ஒன்றைச் செய்­து­கொண்ட ஜி.ஜி.பொன்­னம்­பலம் சுதந்­திர இலங்­கையில் இந்­தியத் தமி­ழர்­களின் குடி­யு­ரி­மை­களைப் பாது­காப்­ப­தற்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்­கு­வ­தாக அவர்­க­ளுக்கு உறு­தி­ய­ளித்தார். தேயிலை, இறப்பர் தோட்­டங்­களில் வேலை செய்­கின்ற தமிழ்ப்­பேசும் இந்­தியத் தொழி­லா­ளர்­களின் குடி­யு­ரி­மைகள் மற்றும் வாக்­கு­ரி­மை­க­ளுக்கு எதி­ராக சிங்­களப் பகு­தி­களில் செய்­யப்­பட்ட பிர­சாரம் கார­ண­மா­கவே இத்­த­கை­ய­தொரு உறு­தி­மொ­ழியை இந்­திய வம்­சா­வளித் தமிழ்த் தலை­வர்­க­ளுக்கு ஜி.ஜி.பொன்­னம்­பலம் வழங்­க­வேண்­டி­யி­ருந்­தது.

சோல்­பரி அர­சி­ய­ல­மைப்பை நிரா­க­ரித்த தமி­ழர்கள்

சோல்­பரி அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தில் தனக்கு ஏற்­பட்ட பின்­ன­டை­வினால் வேத­னைப்­பட்டுக் கொண்­டி­ருந்த பொன்­னம்­பலம், அந்த அர­சி­ய­ல­மைப்­பிற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த அர­சாங்க சபையின் தமிழ் உறுப்­பி­னர்­களைப் பழி­வாங்­கு­வ­தற்கு மிகவும் புத்­தி­சா­லித்­த­ன­மாகப் பயன்­ப­டுத்­திக்­கொண்டார். தமிழ்க் காங்­கி­ர­ஸிற்கு அளிக்கும் வாக்கு தமி­ழர்கள் சோல்­பரி அர­சி­ய­ல­மைப்பு ஏற்­பாட்டை நிரா­க­ரித்­து­விட்­டார்கள் என்­ப­தையும், கொள்­கை­ய­ளவில் அவர்கள் சம­நி­லை­யான பிர­தி­நி­தித்­து­வத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட தேர்தல் முறை­யொன்­றையே வேண்­டி­நிற்­கி­றார்கள் என்­ப­தையும் ஐக்­கிய இராச்­சி­யத்­திற்கு உணர்த்தும் என்று பொன்­னம்­பலம் தமி­ழர்­க­ளிடம் கூறினார். சோல்­பரி அர­சி­ய­ல­மைப்பை ஆத­ரித்து வாக்­க­ளித்த தமிழ் உறுப்­பி­னர்­களைத் துரோ­கிகள் என்­ற­ழைத்த பொன்­னம்­பலம், அவர்­களைத் தேர்­தலில் நிரா­க­ரிக்­கு­மாறு தமிழ் மக்­க­ளிடம் அழைப்­பு­வி­டுத்தார். ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் போட்­டி­யிட்ட தமிழ் வேட்­பா­ளர்கள் சக­ல­ரையும் நிரா­க­ரிக்­கு­மாறும் அவர் கேட்­டுக்­கொண்­டார்.

தமிழ்க் காங்­கிரஸ் வட­மா­கா­ணத்­தி­லுள்ள 9 தொகு­தி­களில் 8 இலும், கிழக்கு மாகா­ணத் ­தி­ல் 7 தொகு­தி­களில் ஒன்­றிலும் போட்­டி­யிட்­டது. காங்­கிரஸ் போட்­டி­யி­டாத தொகு­தி­களில் சில சுயேச்சை வேட்­பா­ளர்­க­ளுக்கு அந்தக் கட்சி ஆத­ர­வ­ளித்­தது. தமிழ்க் காங்­கி­ர­ஸி­லி­ருந்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாகத் தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­களின் விபரம் வரு­மாறு: ஜி.ஜி.பொன்­னம்­பலம் (யாழ்ப்­பாணம்), எஸ்.ஜே.வி.செல்­வ­நா­யகம் (காங்­கே­சன்­துறை), சி.வன்­னி­ய­சிங்கம் (கோப்பாய்), வி.குமா­ர­சாமி (சாவ­கச்­சேரி), டி.இரா­ம­லிங்கம் (பருத்­தித்­துறை), கே.கன­க­ரட்ணம் (வட்­டுக்­கோட்டை), எஸ்.சிவ­பாலன் (திரு­கோ­ண­மலை).

சோல்பரி அரசியலமைப்பிற்கு ஆதரவாக வாக்களித்த முன்னாள் அரசாங்கசபை உறுப்பினர்களில் பிரபல மான மூவர் பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டனர். சேர்.அருணாச்சலம் மகாசேவா, ஜி.ஜி.பொன்னம்பலத்தினால் யாழ்ப்பாணம் தொகுதியிலும், எஸ்.நடேசன் செல்வநாயகத்தினால் காங்கேசன்துறையிலும் தோற்கடிக்கப்பட்டனர். ஜே.தியாகராஜா மன்னாரில் தமிழ்க் காங்கிரஸின் ஆதரவுடனான சுயேச்சை வேட்பாளர் சி.சிற்றம்பலத்திடம் தோல்விகண்டார்.

பூரிப்படைந்த பொன்னம்பலம் சம நிலையான பிரதிநிதித்துவம் தொடர்பான தமிழ்க் காங்கிரஸின் நிலைப்பாட்டை தேர்தல் முடிவுகள் பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கின்றன என பிரிட்டனிலுள்ள காலனித்துவ அலுவலகத்திற்கு கேபிள் செய்தி அனுப்பினார். சோல்பரி அரசியலமைப்பு அடியோடு நிராகரிக்கப்பட வேண்டும் என்றும், வேறுபட்ட தேர்தல் முறையொன்றின் கீழ் புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் நியாயத்திற்கு ஒவ்வாத கோரிக்கையைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் முன்வைத்தார்.

தொங்கு பாராளுமன்றம்

இலங்­கையின் முத­லா­வது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் எந்­தக கட்­சிக்­குமே அறுதிப் பெரும்­பான்மை இல்­லாத ’தொங்கு பாரா ளுமன்றம்’ ஒன்றே தெரிவு செய்­யப்­பட்­ட­தனால் அர­சியல் நில­வரம் நிச்­ச­ய­மற்­ற­தாக இருந்­தது. பாரா­ளு­மன்­றத்தில் மக்­களால் தெரி­வு­செய்­யப்­பட்ட 95 உறுப்­பி­னர்­களில் 42 பேரே டி.எஸ்.சேன­நா­யக்­கவின் ஐக்­கிய தேசியக் கட்­சியைச் சேர்ந்­த­வர்கள். நிய­மன உறுப்­பி­னர்கள் 6 பேருடன் சேர்த்து (மொத்தம் 101 ஆச­னங்­களைக் கொண்ட பாரா­ளு­மன்­றத்தில்) 48 உறுப்­பி­னர்­களைக் கொண்ட சிறு­பான்மை அர­சாங்கம் ஒன்­றையே சேன­நா­யக்­க­வினால் அமைக்க முடியும். அதே­வேளை இட­து­சாரிக் கட்­சி­க­ளையும், தமிழ்க் கட்­சி­க­ளையும், சுயேட்சை உறுப்­பி­னர்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக ஐ.தே.க அல்­லாத அர­சாங்­க­மொன்றை அமைப்­ப­தற்கும் பல்­வேறு வகை­யான நகர்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்டுக் கொண் டிருந்­தன.

இத்­த­கைய நிச்­ச­ய­மற்ற ஒரு அர­சியல் சூழ்­நி­லை­யி­லேயே சேர்.ஒலிவர் குண­தி­ல­கவின் உத­வி­யுடன் டி.எஸ்.சேன­நா­யக்க இலங்­கையின் முத­லா­வது பாராளுமன்ற அரசாங்கத்தை அமைப்பதில் தனது அரசியல் விவேகத்தையும், சாதுரியத்தையும் வெளிக்காட்டினார்.

- டி.எஸ்.பி. ஜெயராஜ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21