தமி­ழர்­களின் அடுத்த தலைவர் சுமந்­தி­ரனா?: தமிழர் ஐக்­கிய முன்­ன­ணி­யுடன் கைகோர்க்­கு­மாறு சுரேஷ் அழைப்பு

Published By: J.G.Stephan

06 Jan, 2020 | 11:01 AM
image

தற்­போது சம்­பந்தன் தேர்­தலில் போட்­டி­யி­ட­மாட்டேன் என்று கூறிய நிலையில், மாவை சேனா­தி­ராசா கையறு நிலையில் உள்­ள­போது, தமிழ் மக்­களை தலைமை தாங்­கப்­போ­வது சுமந்­தி­ரனா என்­பதைத் தமிழ் மக்கள் தீர்­மா­னிக்­க­வேண்டும். முன்னாள் முல்வர் விக்­கி­னேஸ்­வ­ரனின் தமிழ் மக்கள் கூட்­டணி, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி, இன்னும் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யே­றிய பலர் இணைந்து  "தமிழர் ஐக்­கிய முன்­னணி" என்ற அமைப்­பினை உரு­வாக்­கி­யி­ருக்­கி­யி­ருக்­கின்றோம். இது குறித்து  விரைவில் அறி­விக்­கப்­படும். இந்த மாற்று அணி­யுடன் தமிழ் மக்கள் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண­டு­மென ஈ.பி.ஆர்.எல் எப் கட்­சியின் தலைவர் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் அழைப்பு விடுத்­துள்ளார்.

முல்­லைத்­தீவு - தண்­ணீ­ரூற்று பகு­தியில் நேற்­றைய தினம் கட்­சி­யி­னு­டைய அலு­வ­லகம் ஒன்றைத் திறந்து வைத்து  உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

நாட்டின் புதிய ஜனா­தி­பதி தான் சிங்­கள மக்­களால் தெரி­வு­செய்­யப்­பட்டேன் என்றும்  அவர்­க­ளுக்கு கட­மைப்­பட்­டுள்­ள­தா­கவும் பகி­ரங்­க­மாக தெரி­வித்­துள்ளார்.

சில வேளை­களில் பெரும்­பாண்மை இனத்­த­வர்கள் அவ­ருக்­கொரு ஆணையை வழங்­கி­யி­ருக்­கலாம். ஆனால் அதே சமயம் வட­கி­ழக்­கி­லுள்ள மற்­றொரு தேசிய இன­மான, தமிழ்த் தேசிய இனம் என்­பது இன்­னு­மொரு ஆணையைக் கொடுத்­தி­ருக்­கின்­றது.

எமது இனம், மொழி, நிலம் என்­பன காப்­பாற்­றப்­ப­ட­வேண்டும், எமக்­கான உரி­மைகள் கிடைக்கப் பெற­வேண்டும்,  அதி­கா­ரங்கள் பிரித்துக் கொடுக்­கப்­ப­ட­வேண்டும், நாம் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வேண்டும்.  இதற்­கா­கவே தமிழ் மக்கள் வாக்­க­ளித்­துள்­ளனர்.

ஆகவே ஒட்­டு­மொத்­த­மான நட்­டி­னு­டைய அரச தலைவர் எனச் சொல்­லக்­கூ­டிய ஒருவர், வெறு­மனே சிங்­கள மக்கள் கொடுத்த ஆணை­யினை மாத்­தி­ர­மல்ல, அவ­ருக்கு எதி­ராக இருந்­தாலும் தமிழ் மக்கள் வழங்­கிய ஆணை­யையும் அவர் பரி­சீ­லிக்­க­வேண்டும்.

இந்த நாட்டில் வாழ்­கின்ற ஒட்­டு­மொத்த மக்­க­ளுக்­கு­மான அரச தலை­வ­ராக அவர் இருந்தால் இந்த விட­யங்­களை நிரா­க­ரிக்க முடி­யாது.

ஒவ்­வொரு கால­கட்­டங்­க­ளிலும் ஆட்­சிக்கு வரு­கின்ற அர­சுகள் இந்த நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் பிரச்­சினை இருக்­கின்­றது என்­ப­தனை ஏற்­றுக்­கொள்­கின்­றன. பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வு­க­ளுக்­காக குழுக்­க­ளையும்  உரு­வாக்­கி­யுள்­ளன. 

அவ்­வாறு உரு­வாக்­கப்­பட்ட குழுக்­களால் ஆவ­ணங்கள் தயா­ரிக்­கப்­பட்­டாலும், எந்த சிங்­களத் தலை­மைக்கும் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான திரா­ணியோ, பக்­கு­வமோ கிடை­யாது. அதனைப் போட்டு மிதித்து இல்­லாமல் செய்­கின்ற போக்­கைத்தான் நாம் தொட­ரச்­சி­யாக பார்க்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

தற்­போது வந்­தி­ருக்­கக்­கூ­டிய கோத்­த­பா­யவின் தலைமை என்­பது எல்­லா­வற்­றி­னையும் நிரா­க­ரித்­த­துடன், தற்­போது பிரச்­சினை என்று எதுவும் கிடை­யாது.  அபி­வி­ருத்தி செய்தால் போது­மா­னது. அந்த அபி­வி­ருத்­தியை நாம் செய்­வோ­மென்று கூறு­கின்­றனர்.

வட, கிழக்கு போரில் பாதிக்­கப்­பட்ட மாகா­ணங்கள், இங்கு பெரு­ம­ள­வான மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர், இங்­குள்ள மக்கள் பெரு­ம­ள­வானோர் வாழ்­வா­தார தேவை­யு­டை­வர்­க­ளா­கவும், பெண் தலை­மைத்­துவக் குடும்­பங்­க­ளா­கவும் காணப்­ப­டு­கின்­றனர்.

காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்பில் கேட்டால் காணாமல் போனோர், காணாமல் போனோர்தான்.  ஆகவே அவர்கள் காணாமல் போனோர் தொடர்பில் அக்­கறை எடுப்­ப­தற்குத் தயா­ராக இல்லை.

யுத்­தத்தில் இரு தரப்­பி­ன­ருக்­கி­டையில் யுத்தம் இடம்­பெ­றும்­போது, அதில் இறந்­த­வர்கள் காணா­மல்­போ­யி­ருக்­கலாம். இது தற்­போ­தைய அரச தலை­வ­ரி­னு­டைய கருத்­தாக இருக்­கின்­றது.

ஆனால் நாங்கள் யாரும் அதைப்­பற்றிப் பேச­வில்லை. நாங்கள் அவர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­ட­வர்கள், சர­ண­டைந்­த­வர்கள், பொது­மக்­க­ளுக்கு முன்­பாக கடத்­தப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய இரு­ப­தி­னா­யிரம் பேருக்கும் மேற்­பட்­டோரைப் பற்றிப் பேசு­கின்றோம்.  உண்­மை­யான, நேர்­மை­யான அர­சாங்கம் என்றால் அவர்கள்  இதற்கு பதில்­சொல்­லி­யாக வேண்டும்.

இந் நிலையில் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்­காக 16பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை பாரா­ளு­மன்றம் அனுப்­பி­னாலும், சிவ­சக்தி ஆனந்­தனைத் தவிர ஏனைய 15 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் எதைச் செய்­தார்கள். எதிர்க்­கட்­சியில் இருந்­து­கொண்டு சம்­பந்தன் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருந்­த­போதும் ஆளும் கட்­சிக்கு துணை­யாக அவர்கள் செயற்­பட்­டனர்.

கடந்த ஆட்­சியில் ரணில் ஒரு புறமும் மறு­புறம், மைத்­திரி மைத்­தி­ரி­யு­மாக ஓர்­க­யி­றி­ளுவைப் போட்­டிக்­குப்போய் தங்­க­ளு­டைய பிரச்­சி­னை­களைப் பார்த்­தார்­களே தவிர, தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னைகள் தீர்த்­து­வைக்­கப்­ப­ட­வில்லை.   ஆனாலும் மைத்­திரி மற்றும் ரணில் ஆகிய இரு தரப்­பி­ன­ரையும் ஒரே மேசையில் அமர்த்தி இந்த அர­சியல் சாச­னத்­தினை நிறை­வேற்­றி­யி­ருக்க வேண்டும்.

 ரணில் அர­சாங்கம் கவிழ்ந்­த­போது  நீதி­மன்­றத்­தில்­வ­ழக்குத் தொடர்ந்­தவர் சுமந்­திரன். ஆனால் வழக்கு தொட­ர­வேண்­டி­ய­வர்கள் ஐக்­கி­ய­தே­சியக் கட்­சி­யி­னரே. எனினும் ஜன­நா­ய­கத்­திற்கு பாதிப்பு என­வே­தான வழக்குத் தொட­ரப்­பட்­ட­தாக சம்­பந்தன் சொன்னார். இவ்­வாறு ஜனா­நா­ய­கத்­தினை காப்­பாற்­று­கின்றோம் என்று சொல்­கின்­ற­வர்கள், மாறாக தமிழ் மக்­க­ளுக்கு எதைச் செய்­தார்கள்.

அர­சியல் சாச­னத்­தினை ஒரு­புறம் வைத்­தா­லும்­கூட, தற்­போது தமிழ்­மக்கள் எதிர்­நோக்­கு­கின்ற, அர­சி­யல்­கை­திகள் விடு­தலை, காணி­வி­டு­விப்­புகள் எனப் பல்­வேறு பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. இந்த பிரச்­சி­னை­க­ளை­யா­வது தீர்த்து வைத்­தி­ருக்­கலாம்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது கட்­சி­யைச்­சர்ந்த ஒரு தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்கு கூறி­னாராம் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு பல கோரிக்­கையை எம்­மிடம் முன்­வைக்கும் என்று பயந்தேன். ஆனால் அவர்கள் எத­னையும் முன்­வைக்­க­வில்லை என்று கூறி­ய­தாக அறிந்தேன். எனவே இவ்­வா­ற­ன­தொரு தலை­மை­யி­னைத்தான் நாம் கொண்­டி­ருக்­கின்றோம். இவ்­வா­றா­ன­தொரு தலை­மை­யி­னைத்தான் இது­வ­ரையில் நாம் வைத்­தி­ருக்­கின்றோம்.

ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் அவர்கள் அர­சாங்­கத்­தினைக் காப்­பாற்­றி­னார்கள். எமக்கு விரோ­த­மான வரவு செலவுத் திட்­டங்­களை சம்­பந்தன் ஆத­ரித்தார். வர­வு­செ­ல­வுத்­திட்­டத்தை ஆத­ரிக்­கா­து­விட்­டால்­அ­ரசு கவிழும் நிலை இருந்­தது. எனவே அரசை பாது­காப்­ப­தில்­அவர் தெளி­வாக இருந்தார்.

தற்­போது மீண்டும் ஒரு தேர்தல் வரப்­போ­கின்­றது. அதற்­கான ஆசனப் பங்­கீ­டு­களைச் செய்து முடித்­தி­ருக்­கின்­றனர். மீண்டும் எமது பலத்­தினை எமது மக்­க­ளுக்கு நிரூ­பிப்போம் என்று கூறப்­போ­கின்­றனர். பலத்தை நிரூ­பித்து இது­வ­ரையில் எதைச் செய்­தார்கள். எதுவும் செய்­ய­வில்லை.

இது­வ­ரை­கா­லமும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு செய்­த­வற்றை ஒரு பட்­டி­ய­லிட்டு காட்­டட்டும். ஆனால் அவர்­களால் அவ்­வாறு பட்­டி­ய­லி­ட­மு­டி­யாது.

முன்பு சுமந்­திரன் யாழில் இடம்­பெற்ற ஒரு பத்­தி­ரிக்­கை­யாளர் மாநாட்டில் ஒரு­வி­ட­யத்­தினைச் சொன்னார். இந்த அர­சியல் சாசனம் வரா­விட்டால் தன்­னு­டைய பத­வினைத் துறப்­ப­தாக கூறினார். ஆனால் அவர் அவ்­வாறு செய்­ய­வில்லை.

தற்­போது இந்த அர­சு­டனும் அர­சியல் சாசனம் தொடர்பில் பேச­வேண்டி ஏற்­படும் என்று கூறு­கின்றார். இவ்­வாறு அவர் தனது சட்டத் திற­மை­களை தமிழ் மக்­க­ளுக்கு காட்ட முயல்­கின்றார். அவர் ஒரு பிர­பல சட்­டத்­த­ரணி. ஆனால் அவர் சிறந்த தலைவர் இல்லை.

தற்­போது சம்­பந்தன் தேர்­தலில் போட்­டி­யி­ட­மாட்டேன் என்று கூறிய நிலையில், மாவை சேனா­தி­ராசா கையறு நிலையில் உள்­ள­போது, தமிழ் மக்­களை தலைமை தாங்­கப்­போ­வது சுமந்­தி­ர­னா­என்­பதைத் தமிழ் மக்கள் தீர்­மா­னிக்­க­வே­ணடும்.

அவ்­வா­றான மோச­மான நிலை தோன்­று­மானால் தமிழ் மக்கள் குழி­தோண்டிப் புதைக்­கப்­ப­டுவர். ஐக்­கிய தேசி­யக்­க­ட­சி­னு­டைய முக­வ­ராகச் செயற்­ப­டக்­கூ­டிய  சுமந்­திரன், தமிழ் மக்­க­ளுக்குத் தலைமைத் தாங்­கு­வ­தாக இருந்தால் அவர்­க­ளு­டைய பிரச்­சினை எங்­கேபோய் முடியும் என்­பதை நாம் புரிந்­து­கொள்ள வேணடும்.

ஆகவே மாற்றம் ஒன்று அவ­சியம், இதே நிலையில் நாம் தொடர்ந்தும் பய­ணப்­பட முடி­யாது. அந்த மாற்றம் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். அந்த மாற்­றத்­தி­னூ­டாக சரி­யான தலை­மைகள் தெரிவு செய்­யப்­பட வேண்டும். அந்தத் தலை­மைகள் போராட்டத்தின் வலியை உணர்ந்தவர்களாக இருக்கவேண்டும்.

தொடர்ந்தும் நாம் பாரம்பரியம் என்று சொல்லிக்கொண்டு தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்தால் தமிழ் மக்கள் பாரிய பின்னடைவிற்குள் சென்றுவிடுவார்கள்.

இன்று தமிழ் மக்களிடம் எஞ்சியுள்ள விடயம், தமிழ் தேசியமாகும்.அந்த தேசியம் என்ற விடயத்தினையும் தமிழ் மக்களிடமிருந்து அகற்றிவிடவேண்டும் என்பதில்சுமந்திரன் உறுதியாக இருக்கன்றார்.

எனவே கட்டாயமாக ஒரு மாற்றம் தேவை. அந்த மாற்றத்திற்காக, கடந்த இருவருடங்களாக நாங்கள் முயற்சித்துவருகின்றோம். அந்த அடிப்படையில்தன் முன்னாள் முதல் வர் விக்கினேஸ்வரன்  ஒரு கட்சியை ஆரம்பித்திருக்கின்றார்.  தமிழ் மக்கள் கூட்டணி, எங்களது கட்சி, இன்னும் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய பலர் இணைந்து ஒரு தமிழர் ஐக்கிய முன்னணி என்ற அமைப்பினை உருவாக்கியிருக்கியிருக்கின்றோம். இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38