அனைத்து இன மக்­களின் மத சுதந்­தி­ரத்­தையும் சிங்­கள பௌத்­தர்­களே பாது­காத்­துள்­ளார்கள்: பழ­மொழி இன்று மாற்­றி­ய­மைக்­கப்­பட்டு விட்­டது

Published By: J.G.Stephan

06 Jan, 2020 | 10:48 AM
image

(இரா­ஜ­துரை ஹஷான்)  

நாட்டில் வாழும் அனைத்து இன மக்­களின் மத சுதந்­தி­ரத்­தையும் சிங்­கள பௌத்­தர்­களே பாது­காத்­துள்­ளார்கள். 'சிங்­க­ளயா மோடயா கெவும் கன்ன யோதயா’ (சிங்­க­ள­வர்கள் முட்­டாள்கள் பல­காரம் உண்­ப­தற்கே சூரர்கள்) என்று குறிப்­பிட்ட  பழ­மொழி கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திக­தி­யுடன் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டது.  நாட்­டுக்கு எதி­ரான சூழ்ச்­சிகள் வெற்றிப் பெற்­றி­ருந்தால் சிங்­கள இனத்தின் இருப்பு கேள்­விக்­கு­றி­யாக்­கப்­பட்­டி­ருக்கும்  என  பிர­தமர் மஹிந்த  ராஜ­பக்ஷ  தெரி­வித்தார்.

 பாலி திரி­பி­டக  துறையில் தேர்ச்சிப் பெற்ற 5000ஆம்   பௌத்த  மத பிக்­கு­க­ளுக்கு   டெப் ரக  கணனி வழங்கும்  நிகழ்வு நேற்று  முன்­தினம்  சுஹ­த­தாஸ  உள்­ளக அரங்கில் இடம் பெற்­றது. இந்­நி­கழ்வில் பிர­தமர் அதி­தி­யாக கலந்துக் கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இங்கு பிர­தமர் மேலும் கூறி­ய­தா­வது,

இடம்­பெறும் இந்­நி­கழ்வில்   பெரு­மை­யினை ஒரு சில வார்த்­தை­க­ளினால் மட்­டுப்­ப­டுத்த முடி­யாது.பௌத்த மதத்தின் பெரு­மை­களை எடுத்­து­ரைக்கும் சேவை­யினை மேற்­கொள்ளும் தேரர்கள் என்றும் போற்­றப்­பட வேண்டும்.

பாலி திரி­பீ­டக துறையில் இன்று பல வழி­மு­றை­களில் தேர்­சசிப் பெற்­றுள்­ளார்கள். பாலி  கற்­கை­க­ளுக்கு என்று  தனி இடம் வழங்­கப்­பட்­டுள்­ளன.     குறிப்­பி­டப்­பட்­டுள்ள அறக்­க­ருத்­துக்கள்   இளம் தலை­மு­றை­யினர் மத்­தியில் கொண்டு செல்லும் பொறுப்பு  மாநா­யக்க தேரர்­க­ளுக்கு அதிகம் காணப்­ப­டு­கின்­றன.  மதத்­துடன் தொடர்­பு­டைய  கற்­கை­களில்  நவீன தொழி­னுட்­பங்கள் கையா­ளப்­பட வேண்டும்.

பௌத்த மதம் இலங்­கையில் தோற்றம் பெற­வில்லை . ஆனால் தேர­வாத பௌத்த இலங்­கையில் தோற்றம் பெற்று  இன்றும் பௌத்த மதத்தை பின்­பற்றும் நாடு­க­ளுக்கு  ஒரு முன்­னு­தா­ர­ண­மாக செயற்­ப­டு­வது பெருமைக் கொள்ள வேண்­டிய  விட­ய­மாகும். அரச  நிர்­வா­கத்தில்  ஏற்­படும் சவால்­களும் அதனை எதிர்க் கொள்ளும் வழி­மு­றையும் பாலி திரி­பி­ட­கத்தில் தெளி­வுற குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எமது காலத்தில் மத போத­னை­க­ளுக்கும்,   நெறிப்­ப­டுத்­த­லுக்­கும முன்­னு­ரிமை கொடுக்­கப்­பட்­டன.

ஆட்சி மாற்­றத்­திற்கு மாநா­யக்க தேரர்­களின் பங்­க­ளிப்பு இன்­றி­ய­மை­யா­த­தாகும். இடம் பெற்று முடிந்த  ஜனா­தி­பதி தேர்­தலின் பெறு­பேற்­றினை  அடிப்­ப­டை­யாகக் கொண்டு பௌத்த மதத்­திற்கும், சிங்­கள பௌத்­தர்­க­ளக்கும்  ஏற்­பட்­டி­ருந்த சவால் எந்­த­ள­விற்கு பார­தூ­ர­மா­னது என்­பதை தெரிந்துக் கொள்­ளலாம். நாட்­டுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட சூழ்ச்­சிகள் இன்று    வெற்றிப் பெற்­றி­ருந்தால்  சிங்­கள   பௌத்­தர்­களின் இருப்பு கேள்­விக்­கு­றி­யாக்­கப்­பட்­டி­ருக்கும்.  எழுந்த சவால்கள் இன்றும் நிறைவுப் பெற­வில்லை.

 சவால்­களின் ஊடாக பலம் பெறு­கின்றோம்.   பல்­வேறு  நெருக்­க­டி­களை   வெற்றிக் கொண்­டதால் இன்று    பௌத்த மதத்­திற்கு உரி­மை­கோ­ரு­ப­வர்­க­ளாக   செயற்­ப­டு­கின்றோம். கடந்த  ஐந்து ஆண்­டு­க­ளாக   சவால்­களை எதிர்க் கொண்­டதால் இன்று தேசியம்  பல­ம­டைந்­துள்­ளது.

சிங்­க­ளயா மோடயா  கெவும் கண்ண யோதயா என்ற  பழ­மொழி கடந்த நவம்பர் 16ஆம் திக­தி­யுடன் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டன.   இனத்தின் விடி­விற்கு செயற்­பட்ட மநா­யக்க தேரர்­களின் அர்ப்­ப­ணிப்பு தொடர்பில்  புதி­தாக குறிப்­பிட வேண்­டிய தேவை கிடை­யாது.  பௌத்த மத  சாச­னத்­தையும், பௌத்த இனத்­தையும்,  நாட்டின் இறை­யான்மை ஆகிய  மூன்­றையும் பாது­காத்தல் என்­பது   வேறுப்­பட்­டது அல்ல ஒன்­றொடு ஒன்று தொடர்புக் கொண்­டுள்ள அடிப்­படை விட­யங்­க­ளாகும்.

  சிங்­கள பௌத்தத்தை பாதுகாத்தால் மாத்திரம் ஏனைய மதங்கள்  பாதுகாக்கப்படும் என்று   வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.   இந்நாட்டின்  அனைத்து இன மக்களின் மதங்களையும், அவர்களின் தனித்துவத்தையும் சிங்கள பௌத்தர்களே பாதுகாத்துள்ளார்கள். பௌத்த சாசனத்தை   பாதுகாத்து பலப்படுத்துவற்கு   பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01