அப்புத்தளை விமான விபத்து : மூன்று நாட்களுக்குள் அறிக்கையை சமர்பிக்குமாறு விமானப்படை தளபதி உத்தரவு 

Published By: R. Kalaichelvan

06 Jan, 2020 | 08:49 AM
image

(செ.தேன்மொழி)

அப்புத்தளை - தம்பதென்ன - ஐஸ்பீலி பகுதியில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவிடமிருந்து மூன்று நாட்களுக்குள் அறிக்கையொன்றை சமர்பிக்குமாறு கோரியுள்ள விமானப்படை தளபதி இரு வாரத்திற்குள் முழுமையான விசாரணை அறிக்கையை சமர்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை வீரவில விமானப்படை முகமிலிருந்து ரத்மலானை செல்லுவதற்காக புறப்பட்ட விமான படைக்கு சொந்தமான வை 12 இலகு ரக விமானம் அப்புதளை பகுதியில் வைத்து விழுந்து விபத்துக்குள்ளாகியிருந்தது. 

இதன்போது விமானத்தின் பிரதான விமானியாக கடமைபுரிந்த  ஸ்கொடன் லீடர் டப்ளியூ.ஏ.எம்.பி.என்.பி.வீபெத்த , உதவி விமானி பிளைட் லெப்டிணன் கே.எம்.டி.எல்.குலதுங்க ஆகியோரும் அவர்களுக்கு உதவியாக கடமையில் இருந்த சார்ஜன்ட் நிலை வீரர்களான டி.டபிள்யூ.ஆர்.டபிள்யூ.குமார மற்றும் எல்.ஏ.சி.ஹெட்டியா ஆரச்சி ஆகியோரும் உயிரிழந்திருந்தனர். 

இவர்களின் சடலங்கள் தொடர்பான மரண பரிசோதனைகள் பண்டாரவளை நீதிவான் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து அவை பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டன.  நேற்று பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் , பரிசோதனைகளின் பின்னர் சடலங்கள் உறவினர்களுக்கு ஒப்படைக்கப்பட்டன. 

இந்நிலையில் விபத்துக்கான காரணம் தொடர்பில் ஆராய்வதற்காக அரச இரசாயனப் பகுப்பாய்வாளர்களும் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனைகளை முன்னெடுத்திருந்தனர். விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் , அப்புத்தளை பொலிஸாரும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விமான படையினால் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்டுள்ள ஆறு பேர் அடங்கிய குழுவினரால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த விமானபடையின் ஊடகப்பேச்சாளர் விங்கொமாண்டர் கிஹான் செனவிரத்ன விசாரணை தொடர்பான அறிக்கைகள் உரிய அதிகாரிகளுக்கு கையளிக்கப்பட்டதன் பின்னர் , விமானப்படை தளபதியின் ஆலோசனைக்கமைய அது ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01