அரசாங்கத்தின் செயற்பாடுகள் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது - ஆசுமாரசிங்க 

Published By: R. Kalaichelvan

05 Jan, 2020 | 06:21 PM
image

(செ.தேன்மொழி)

அரசாங்கம் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுவருவதாகவும் , வீட்டை சோதனையிட வேண்டும் என்று தெரிவித்துக் கொண்டு அவர்களே சட்டவிரோத பொருட்களை வீட்டில் வைத்துவிட்டு கைதுகளை மேற்கொள்ளக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க அனைவரும் இரவு தோறும் விழித்திருந்து தமது வீடு மற்றும் நிலங்களை பாதுகாக்க வேண்டிய நிலமையே தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ரஞ்சனின் வீட்டை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளதாக எனக்கு தகவல் கிடைத்ததை அடுத்து நான் நேரடியாகவே அங்கு சென்றிருந்தேன்.

இதன்போது அங்கிருந்த பொலிஸார் எனக்கு அனுமதி வழங்க மறுத்தனர் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சக உறுப்பினர் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பது கடமை என நான் விளக்கியதை அடுத்தே உள்ளே செல்ல அனுமதித்தனர். பின்னர் பாலித்த தெவரப் பெரும , முஜூபுர் ரஹூமான் மற்றும் ஹரின் பெர்ணான்டோ அகியோரும் அங்கு வந்திருந்தனர்.

இதன்போது பொலிஸார் ரஞ்சனின் வீட்டில் சட்டவிரோத ஆவணங்கள் இருப்பதாகவும் , அவரது கணணி மற்றும் இருவட்டுகள் தொடர்பில் சோதனைகளை முன்னெடுப்பதற்காக நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில் உத்தரவுப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர். பின்னர் சோதனைகளை முன்னெடுத்த பொலிஸார்  அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த பிஸ்டல் தொடர்பிலே அவரை கைது செய்தனர். 

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக அரசினால் வழங்கப்படுகின்ற பிஸ்டோலும் அதற்கான தோட்டாக்களையே அவர் வைத்திருந்தார்.

இந்த பிஸ்டோலை நானும் முஜூபுரும் பெற்றுக் கொள்ளவில்லை அதனால் எமக்கு இந்த விவகாரம் தொடர்பில் தெரியாது. இருந்த போதும் இது தொடர்பாக அறிந்துக் கொள்வதற்காக உரிய பொலிஸ் அதிகாரிகளிடம் நாங்கள் கேட்டப் போது , இதற்கான அனுமதிப் பத்திரத்தை ஒவ்வொரு வருடமும் புதிப்பிக்கப்பட வேண்டும் என்றும் , அவ்வாறு புதிப்பிப்பதற்கான கலாம் நெறுங்கும் பொழுது உரிய அதிகாரிகளால் அவர்களுக்கு நினைவூட்டப்படும் என்றும் தெரிவித்தார். 

இவ்வாறு நினைவூட்டப்பட்டிருந்தால் அவர் ஏன் அதனை செய்யவில்லை ? என்பதும் உரிய முறையில் நினைவூட்டப்பட்டதா ?என்பது தொடர்பிலும் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.

அதேவேளை அரசாங்கத்தினால் வழங்கப்படும் இந்த பிஸ்டல்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது , ஒவ்வொரு வருடமும் அதற்கான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும் அவ்வாறு தவறும் பட்சத்தில் வழக்கு தொடராமல் அபராதம் அறவிடப்படும் என்றனர்.

அரசாங்கத்தினால் நாட்டிலுள்ள அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையிலே தற்போது வீட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதாவது வீட்டை சோதைக்குட்படுத்த வேண்டும் என்று கூறிக் கொண்டு 15 பேருக்கும் அதிகமான பொலிஸார் வீட்டுக்குள் பிரவேசிக்கின்றனர். வீட்டில் மூன்று அறைகள் இருந்தால் அனைத்துக்குள்ளும் ஒரே நேரத்தில் சோதனையை மேற்கொள்கின்றனர்.இவ்வாறு சோதனைகளில் ஈடுப்படும் அனைவரது செயற்பாடுகளையும் எம்மால் கவனிக்க முடியாது.

இந்த சந்தர்ப்பங்களில் சோதனையிடும் நோக்கில் வருகைத்தரும் நபர்களாலே வீட்டுக்குள் சட்டவிரோத பொருட்கள் ஏதாவது வைக்கப்பட்டு கைது செய்யப்படக் கூடிய சூழ்நிலைகள் காணப்படுகின்றது.

பொலிஸாரின் மீது எமக்கு பெரிதும் மதிப்புமற்றும் நம்பிக்கை உண்டு , ஆனால் பொலிஸாருக்குள் இவ்வாறான சதிகாரர்களும் வருகைத்தரலாம் அல்லவா? இதனால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இனிவரும் காலந்தில் வீடுகளை சோதனையிட வேண்டும் என்றுக் கூறிக்கொண்டு யார்வந்தாலும். வீட்டார் அரவர்களை சோதனைக்குட்படுத்தியதன் பின்னரே வீட்டுக்குள் அனுமதிக்கவேண்டும் என்ற சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அப்போதே வீட்டாரின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

நாட்டு மக்கள் தற்போது தனது வீட்டை மட்டுமல்ல காணிகளையும் இரவிரவாக பாதுகாக்க வேண்டிய சூழ்நிலைஏற்பட்டுள்ளது. இரவு வேளையில் கூட இனந்தெரியாத நபர்களால் எதாவது சட்டவிரோத பொருட்கள் எமது இடங்களில் வைக்கப்பட்டு ,சோதனை என்ற பெயரில் கைது செய்யப்படக் கூடும். இது தொடர்பில் நாட்டிலுள்ள அனைவரும் கவனத்துடன் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44