இவ் வருடத்தில் எதிர்பாராத வகையில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டு அது மக்களை மோசமான வகையில் பாதிக்கும் என பிரபல ஜோதிடர் மஞ்சுல பீரிஸ் ஏற்கனவே கூறியிருந்ததாகவும் அதுவே தற்போது கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் இடம்பெற்றுள்ளதாகவும் சர்ச்சையான கருத்துக்கள் சமூக வலைத்தளங்கில் வெளியாகியுள்ளன.

அனுபவம் வாய்ந்த ஜோதிடரொருவரான மஞ்சுல பீரிஸ் கடந்த ஏப்ரல் மாதம் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு, இவ்வருடத்துக்குள் நாட்டில் ஏதாவது பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டு மக்களுக்கு பாரிய அழிவை ஏற்படுத்தும் என தீர்க்க தரிசனமாக கூறியிருந்தார்.

இவருடைய தீர்க்க தரிசனமே தற்போது சாலாவ இராணுவ முகாம் வெடிப்பு சம்பவத்தில் உண்மையாகியுள்ளது என சமூக வலைத்தளங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.