மக்கள் ஆணையை மறந்தமை எமது ஆட்சியின் பாரிய குறைப்பாடு - சம்பிக்க 

Published By: Vishnu

05 Jan, 2020 | 04:56 PM
image

(எம்.மனோசித்ரா)

அபிவிருத்தி என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கும், மத்திய வங்கி பிணை முறி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்காமையே எமது பின்னடைவுக்கான காரணம் என்று பாராளுமன்ற உறுப்பினரும் ஜாதிக ஹெல உருமயவின் தலைவருமான சம்பிக ரணவக்க தெரிவித்தார். 

ஹோமாகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், 

2015 இல் நாட்டு மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை நாம் நிறைவேற்ற தவறிவிட்டோம்.ராஜபக்ஷ ஆட்சியில் அபிவிருத்தி என்ற பெயரில் நாட்டு மக்களின் சொத்துக்களும் முதலும் கொள்ளையிடப்பட்டன. அவ்வாறான மோசடிக்காரர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே அப்போது மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரதான நோக்கமாகக் காணப்பட்டது. 

எனினும் இவ்விடயத்தில் எமது பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சரோ அல்லது நீத்துறைக்கு பொறுப்பான அமைச்சரோ இவ்வாறான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. 

மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அவர்கள்  முன்வரவில்லை.எனினும் தற்போதைய அரசாங்கம் எவ்வாறு துரிதமாக செயற்படுகின்றது என்பது புலப்படுகின்றது. 

நாம் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற முதன் முதலாக நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் எமக்கு வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனது. அரச அதிகாரத்தை வைத்துக் கொண்டு உள்ளுராட்சி அதிகாரங்களை கைப்பற்ற முடியாமல் போனது. 

இதற்கான பிரதான காரணம் 2015 ஆம் எமக்கு மக்கள் வழங்கிய ஆணையை மறந்து நாம் செயற்பட்டமையே ஆகும் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04