யாழ் - சென்னை விமான சேவை : விமான நிலைய வரியாக பெருந்தொகை அறவிடப்படுவதாக குற்றச்சாட்டு

Published By: Vishnu

05 Jan, 2020 | 01:30 PM
image

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கான விமான பயணத்திற்கு பயணிகளிடம் இருந்து விமான நிலைய வரியாக பெருந்தொகை பணம் அறவிடப்படுவதாக கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

நல்லாட்சி என்று சொல்லப்பட்ட கடந்த ஆட்சி காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட, யாழ்;ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்ற சென்னை விமான நிலையத்திற்கான விமானப் போக்குவரத்திற்காக பயணிகளிடம் இருந்து பெருந் தொகையான விமான நிலைய வரி அறவிடப்படுகின்றமை தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவை கூட்டம் 02.01.2020 ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிலையியல் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்படி விடயம் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

குறித்த அமைச்சரவை கூட்டத்தில், கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு பயணங்களை மேற்கொள்வோருக்கான விமான நிலைய வரி ஆறாயிரம் ரூபாயாக இருக்கின்ற நிலையில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகளிடம் இருந்து பன்னிராயிரம் ரூபாய் அறிவிடப்படுகின்றமையை யாழ்ப்பாண மக்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற ஓரவஞ்சனையாகவே நோக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சுட்டிக் காட்டப்பட்டது.

மேலும், அடிப்படை வசதிகள் கூட முழுமையாக நிறைவு செய்யப்படாத நிலையில் கடந்த ஆட்சியாளர்களினால் தேர்தலை நோக்கமாக கொண்டு யாழ்ப்பாண விமான நிலையம் திறந்து வைக்கப்பட்ட நிலையில், கட்டுநாயக்கா விமான நிலையத்துடன் ஒப்பிடுகின்றபோது குறைந்த பறப்பு தூரத்தைக் கொண்ட சென்னைக்கான பயணிகளிடம் இருந்து விமான நிலைய வரி இரண்டு மடங்காக அறவிடப்படுவதற்கு ஐ.தே.மு – தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்த கூட்டரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு எதிரான இந்த தீர்மானமானது ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையின் நியாயத்தினை ஏற்றுக் கொண்ட அமைச்சரவை குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏகமனதாக தீர்மானித்தது.

அதேபோன்று, ஜேர்மனி அரசாங்கத்தின்; அனுசரணையில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட ஜேர்மன் ரெக் எனப்படும் ஜேர்மனி தொழிற்பயிற்சி நிறுவனத்தில் நிலவிவருகின்ற குறைபாடுகள் தொடர்பான விடயங்களும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அது தொடர்பாகவும் உரிய விசாரணைகளை மேற்கொண்டு குறித்த நிறுவனம் சிறப்பாக செயற்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலிய அபிவிருத்தி திட்டத்தில் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றிருப்பதாகவும் அவை தொடர்பிலும் விசாணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர டக்ளஸ் தேவானந்தர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தகக்கது.

- அரசாங்க தகவல் திணைக்களம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37