ஜனாதிபதித் தேர்தலில் வட கிழக்கு வாக்குகள் தெற்கைத் தோற்கடித்திருக்கின்றது -  ரவிகரன்

05 Jan, 2020 | 01:14 PM
image

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், வட கிழக்கில் தமிழ்மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகள் தெற்கைத் தோற்கடித்திருப்பதாகவும். தமிழ் மக்களுக்கு ஓர் தீர்வு கிட்டும்வரையில் தொடர்ந்து போராடுவோமெனவும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் 04.01நேற்றைய நாள் இடம்பெற்ற தமிழ் அரசு கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு கருத்துரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் அரசு கட்சி தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை ஏற்று செயற்படுவதனாலேயே இவ்வளவு ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பாக செயற்பட்டுவருகின்றது.

எப்போதும் தமிழரசுக்கட்சி வெற்றிபெற்றுக்கொண்டேயிருக்கும், இக்கட்சியை எப்போதும் வீழ்த்தவே முடியாது.

அத்தோடு கடந்த அரசதலைவர் தேர்தலில் வடகிழக்கில் தமிழ் மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகள் தெற்கைத் தோற்கடித்திருக்கின்றன.

தமிழர்கள் கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களை மறந்துவிடவில்லை, குறிப்பாக இளைய சமூகம் கூட கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களயும், கடந்த காலங்களில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பினையும் மறந்துவிடவில்லை.

கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்து, நடாத்திய கொத்துக்குண்டு, பல்குளல் செல் தாக்குதல்கள், அவர்களுடைய காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்கள் எவற்றையும் எமது மக்கள் மறந்துவிடவில்லை. அதனையே கடந்த அரச தலைவர் தேர்தல் உணர்த்தியுள்ளது.

எனவே எமது தமிழ் மக்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு கிட்டும்வரையில் தொடர்ந்தும் போராடுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58