கண்டி நாகதேவாலயச் சுற்றாடலை ஒருவார காலத்திற்கு பொசன் வலயமாக மத்திய மாகாண ஆளுனர்  பிரகடனப்படுத்தியுள்ளார்.

புனித பொசன் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான காலப் பகுதியே பொசன் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே குறிப்பிட்டகாலப் பகுதியில் தர்மபோதனைகள், போதி பூஜை, பக்தி கீதம், பொசன் கூடு கண்காட்சி, பௌத்த சித்திரக்கண்காட்சி, தானசாலைகள், குறைவருமான கொண்டவர்களுக்கு பல்வேறு உதவிகளைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுனர் திருமதி நிலூக்கா ஏக்கநாயக்கா தெரிவித்தார்.

அத்துடன் கண்டி ஸ்ரீபுஷ்பதான சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மிகிந்து பெரஹராவும் இக்காலத்தில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.