(க.கிஷாந்தன்)

நான்கு  மாணவர்களை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 52 வயதுடைய சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டமொன்றில் இச் சம்வம் இடம்பெற்றுள்து.

நுவரெலிய விசேட பொலிஸ் பிரிவினர் குறித்த சந்தேகநபரை  கைது செய்து நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுத்திய போதே நீதிவான் பதினான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த சந்தேக நபர் தொடர்ச்சியாக குறித்த நான்கு மாணவர்களையும்  துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளது.

நுவரெலியா சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நான்கு மாணவர்களும் நுவரெலிய அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் வீடு திரும்பியுள்ளனர். 

இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் நால்வரும் 13 -14  வயதுக்குட்பட்டவர்களாவர் என தெரியவந்துள்ளது.