இலங்கை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மன்னார் மாவட்ட தேர்தல் திணைக்களத்துக்கு இன்று சனிக்கிழமை காலை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
கடந்த வருடம் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிக்கைகள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்தல் தொடர்பாகவும் அதே நேரத்தில் குறித்த தேர்தலோடு பணியாற்றிய அதிகாரிகளைச் சந்திக்க முகமாகவும் குறித்த விஜயம் அமைந்திருந்தது.
ஜனாதிபதி தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்ற விடயங்கள் தொடர்பான முழுமையான அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் அதனை முழுமைப்படுத்தும் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
எதிர் வரும் நாட்களில் இடம் பெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் அதே போன்று மாகாணசபைத் தேர்தல் தொடர்பான விபரங்களையும் அது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காகக் குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட உதவி தேர்தல் அத்தியட்சகர் ஜெனிற்றன், மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுடனும் சிநேக பூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM