2020.01.02 இடம்பெற்ற அமைச்சரவை  தீர்மானங்கள்!

Published By: Vishnu

03 Jan, 2020 | 02:59 PM
image

2020.01.02 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்.

1. இலங்கையின் தேசிய பௌதிக திட்டத்தை மேம்படுத்தல்

நாட்டை மேம்படுத்தும் சுபீட்சத்தின் புதிய தொலைநோக்கு கொள்கை பிரகடனத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள தேசிய அனுமதி பயன்பாட்டின் (National Spatial system) புதிய பிரவேசத்திற்கு அமைவாக இந்த உத்தேச கொள்கை அம்சங்களை ஒன்றிணைப்பதற்காக தேசிய பௌதிக திட்டத்தை மேம்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. 

இதற்கு அமைவாக அபிவிருத்தி பணிகள் மற்றும் தொடர்புபட்ட அனைத்து நிறுவனங்களுக்கு நாட்டின் பௌதிக சுற்றாடல் தொடர்பில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் அபிவிருத்தி பணிகளை திட்டமிடுதல் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் சுற்றாடல் அபிவிருத்திக்கு சந்தர்ப்பம், வசதி மற்றும் சேவையுடன் தொடர்புபட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காகவும் தேசிய மட்டத்தில் வழிகாட்டலுக்காக முழுமையான கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துதல் மற்றும் 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையை உலகின் உன்னதமான இனத்தவராகவும் போட்டித்தன்மை மிக்க பொருளாதாரத்தை கொண்டதாக மேம்படுத்துவதற்கும் அதன் பின்னர் அதன் நிலையை முன்னெடுப்பதற்கும் வசதிகளை செய்யும் பௌதீக சுற்றாடலுக்கான திட்டத்தை வகுப்பதே இந்த அலுவலகத்தின் அடிப்படை நோக்கமாகும்.

இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு தேசிய பௌதீக திட்டமிடற் திணைக்களத்தின் மூலம் இலங்கையின் தேசிய பௌதீக திட்டத்தை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை நகர அபிவிருத்தி நீர் விநியோகம் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.

02. குடி நீரின் தரத்தை பரிசோதித்தல் மற்றும் மதிப்பீடு செய்யும் வேலைத்திட்டம்.

51 சதவீதமான தற்போதைய குழாய் நீர் விநியோகத்தில் 11 சதவீத உள்ளடக்கத்தை சமூக அமைப்பின் மூலம் முகாமைத்துவப்படுத்தப்படும் நீர் விநியோக முறை பாதுகாப்பான கிணறு மற்றும் குழாய் கிணறு மூலம் பெறப்படும் நீர் வசதிகளை கொண்டுள்ளதுடன் இவற்றின் மூலம் விநியோகிக்கப்படும் நீர் தரமானவை என்பதை பரிசோதிப்பதற்காக நகர அபிவிருத்தி நீர் விநியோகம் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சின் மூலம் வேலைத்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் விநியோகம் மற்றும் வடிகாலமைப்பு சபை தேசிய சமூக நீர் விநியோக திணைக்களம், நீர் விநியோகம் மற்றும் சாக்கடை மேம்பாட்டுக்கான திட்டம் மற்றும் சீனா - இலங்கை ஆய்வு திட்டத்தினர் இதில் முக்கிய தரப்பினர்களாவர்.

இதற்கு அமைவாக சமூக அடிப்படையிலான அமைப்பின் மூலம் முகாமைத்துவம் செய்யப்படும் நீர் விநியோக முறை பாதுகாப்பான கிணறு மற்றும் குழாய் கிணறு ஆகியவற்றின் மூலம் வழங்கப்படும் நீர் தரமானது என்பதை பரிசோதனை செய்வதற்கும், கண்காணிப்பதற்குமான வேலைத்திட்டம் உலக வங்கியின் மூலம் நிதி உதவி வழங்கப்படும் நீர் விநியோகம் மற்றும் சாக்கடை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் உள்ளடக்கப்பட்டதாக 4 மாவட்டத்தில் ஆரம்பிப்பதற்கும் இதன் பின்னர் இதனை ஏனைய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்துவதற்கும் நகர அபிவிருத்தி நீர் விநியோகம் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. அரசாங்கம் அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடர்வதற்காக மாணவர்களுக்கு வட்டி இன்றி வழங்கப்படும் மாணவர் கடன் பரிந்துரை முறையில் பிரவேசிப்பதற்கு உள்ள சந்தர்ப்பத்தை விரிவுபடுத்துதல்.

அரசாங்கம் அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடர்வதற்காக வட்டி அற்ற மாணவர் கடன் பரிந்துரை முறை ஒன்று தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் அதற்காக எதிர்பார்த்த வகையில் மாணவர்களை கவருவதற்கு முடியாதுள்ளது. 

விசேடமாக இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள கற்கை நெறிக்காக தொழில் வாய்ப்பு சந்தையில் போதுமான கோரிக்கைகள் இல்லாமை மற்றும் அதில் பட்டப்படிப்பு கற்கை நெறியின் மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு போதுமான பங்களிப்பு இல்லாமையினால் இதன் கடன் பரிந்துரை முறையை மிகவும் பயனுள்ள வகையில் மீண்டும் வகுக்க வேண்டியுள்ளது. இதற்கு அமைவாக சுபீட்சமிக்க தொலைநோக்கு என்ற புதிய 5 வருட அபிவிருத்தி மூலோபாய கொள்கைக்கு அமைவாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் நிலவும் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பத்திற்காக தொழில்நுட்ப அறிவைக் கொண்ட 10,000 பட்டதாரிகளை உருவாக்கக் கூடிய வகையில் சம்பந்தப்பட்ட வட்டி இல்லா மாணவர் கடன் திட்ட முறையை மேலும் விரிவுபடுத்தி நடைமுறைப்படுத்துவதற்காக உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. ஆரம்ப பாடசாலை கல்வி தொடர்பான தேசிய கொள்கை.

மாணவர்களின் ஆரம்ப பராயத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஆரம்ப பாடசாலையின் மூலம் உயர்வான பங்களிப்பை வழங்க முடியும் என்பது அடையளம் காணப்பட்டுள்ளது. இதேபோன்று சில ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள், மகளிர் தொழில் ரீதியிலான திறமை அல்லது போதுமான கல்வி தகுதியை கொண்டிருக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக பயிற்சி அற்ற ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் 3 தொடக்கம் 5 வயதிற்குட்ட மாணவர்களின் வளர்ச்சிக்கு பொருத்தமற்ற கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. இந்த அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டு புத்திஜீவிகள், அதிகாரிகள் மற்றும் ஆர்வங்கொண்டுள்ள தரப்பினர்களின் கருத்துக்களை பெற்றுக்கொண்ட பின்னர் முறையாக முன்னெடுக்கப்படவுள்ள ஆரம்ப பாடசாலை கல்வி தொடர்பான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. கணனியுடன் தொடர்புபட்ட கற்பித்தலுக்கான ஈ - கற்பித்தல் வளங்களை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்படவுள்ள தேசிய மத்திய நிலையத்தை ஹோமாகம, பிட்டிபன என்ற இடத்தில் அமைத்தல்.

பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப கல்வி மற்றும் கல்விக்காக தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை முறையாக முன்னெடுப்பதற்காக தேசிய மட்டத்தில் உள்ளுர் விடயங்களை உள்ளடக்கிய / மென்பொருள் மற்றும் கணனி தொழில்நுட்ப பயன்பாட்டு மத்திய நிலையம் ஒன்று குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டிய மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் நாராங்கல்ல தோட்ட காணியில் அமைப்பதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. உத்தேச மத்திய நிலையம் கொழும்பில் இருந்து 90 கிலோமீற்றருக்கு அப்பால் இருப்பதும் இவ்வாறான தூரத்தில் இந்த மத்திய நிலையம் அமைப்பதன் மூலம் ஏற்படக்கூடிய நடைமுறை சிரமங்களை கவனத்தில் கொண்டு அந்த மத்திய நிலையத்தை ஹோமாகம பிரதேச செயலாளர் பிரிவில் பிட்டிப்பன என்ற இடத்தில் அமைப்பதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. தேயிலை துறைக்கு புத்துயிர் அளித்தல் மற்றும் நவீன மயப்படுத்தும் வேலைத்திட்டம்.

தேயிலை உற்பத்தியை முக்கிய ஏற்றுமதி தொழில்துறையாக முன்னெடுக்கும் நோக்கில் 2020 ஆம் ஆண்டு தொடக்கம் வருடத்தில் ஆகக் குறைந்தது 10 சதவீதத்தினால் தனது இறக்குமதியை அதிகரிப்பதற்கு சிலோன்ரீ இனை இறக்குமதி செய்யும் நாடுகளை ஊக்குவிக்கக்கூடிய வகையில் இலங்கை தேயிலை சபை வணிக திணைக்களம் மற்றும் இலங்கை வெளிநாட்டு தூதுவர் சபைக்கான அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. 

இருப்பினும் தேயிலை தொழில்துறையின் முக்கிய பணிகளை நிறைவேற்றும் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் இதற்கு தடையாக அமைந்துள்ளது. விசேடமாக கடந்த சில வருடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட வரையறுக்கப்பட்ட நிதி மற்றும் வரி முறைகளைப் போன்று மானியம் வழங்குவதற்காக தேயிலை இறக்குமதிக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்காக அதுவரையில் இருந்த சட்டம் மற்றும் சட்ட விதிகளை நீக்கியமை இந்த நிலை ஏற்படுவதற்கு காரணமாக உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலைமையின் கீழ் தேயிலை தொழில்துறையின் ஸ்திரத்தன்மை மற்றும் போட்டிமிகுந்த ஏற்றுமதி வருமான வழிமுறையாக மாற்றியமைப்பதன் மூலம் இதற்கான விநியோகத்துறையுடன் தொடர்புபட்ட தொழில்துறையில் ஈடுபட்டுள்ள பெரும் எண்ணிக்கையானோரின் தொழிலின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையில் தேயிலை தொழில்துறைக்கு புத்துயிர் அளித்தல் மற்றும் நவீன மயப்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட பெருந்தோட்ட தொழில்துறை மற்றும் ஏற்றுமதி விவசாய துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. தெற்கு நெடுஞ்சாலை தொடர்பான திட்டத்தின் கீழ் கிருலப்பனையில் இருந்து கொடகம வரையிலான வீதி பகுதி மற்றும் பாமன்கடையில் இருந்து பொக்குனுவிட்ட வரையிலான வீதி பகுதியை புனரமைத்தல் / மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்.

ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவி வழங்கும் தெற்கு நெடுஞ்சாலையுடன் தொடர்புபட்ட திட்டத்தின் கிழ் கிருலப்பனையில் இருந்து கொடகம வரையிலான வீதி பகுதி மற்றும் பாமன்கடையில் இருந்து பொக்குனுவிட்ட வரையிலான வீதி பகுதியை புனரமைத்தல் / மேம்படுத்துவதற்காக சர்வதேச போட்டித் தன்மையை அடிப்படையாக கொண்டு கேள்வி மனு கோரப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசிற்கு அமைய கேள்வி நாமத்தின் இலச்சினை ரீதியில் பாராட்டப்பட்டுள்ள MAGA Engineering (Pvt LTD)என்ற நிறுவனத்திடம் 4,215.15 மில்லியன் ரூபாவிற்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தை வழங்குவதற்காக வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளான அரச மற்றும் அரச சார்பு ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குதல்.

கடந்த காலப்பகுதியி;ல் அரசியல் ரீதியில் பழிவாங்கும் நோக்கத்தில் அரசாங்கம் மற்றும் அரச சார்பு நிறுவனங்களின் அதிகாரிகளை இலக்காக கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து குறிப்பிட்ட உடனடி நடைமுறைகளுக்கு அப்பால் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக தெரியவந்துள்ளது. இவ்வாறான நிலைமையை விசாரணை செய்து அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதி மன்ற நீதியரசரான ஜகத் பாலபடபெதி அவர்களின் தலைமையில் குழு ஒன்றை நியமிப்பதற்காக 2019.12.20 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இக் குழுவின் செயலாளராக செற்படுவதற்காக சட்டத்தரணி சுமுது கே. விக்ரமாராச்சியை நியமிப்பதற்காக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. உத்தேச பயங்கரவாதத்தை தடுப்பது தொடர்பான திருத்த சட்ட மூலத்தை விலக்கிக்கொள்ளுதல்.

1979 ஆம் ஆண்டு இலக்கம் 48 இன் கீழான பயங்கரவாதத்தை தடுக்கும் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை இரத்து செய்வதற்கும் பயங்கரவாதத்தை தடுப்பதற்குமான புதிய விதிகளை பிறப்பிக்கும் எதிர்பார்ப்புடன் பயங்கரவாதத்தை தடுக்கும் திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கதாக இதற்கு முன்னர் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. 

இந்த திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சர்வதேச தொடர்புகள் குறித்த துறைகள் சார்ந்த மதிப்பீட்டு குழுவினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இந்த திருத்த சட்ட மூலத்தில் உள்ளடங்கியுள்ள சில விதிகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரினால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களை கவனத்தில் கொண்டு இந்த திருத்த சட்ட மூலத்தை விலக்கிக்கொள்வதற்காக வெளிநாட்டு தொடர்புகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04