காணாமல் போனோர் விவகாரத்திற்கு பரிகாரம் வழங்க விசேட குழு :  அமைச்சரவையில் தீர்மானம்

Published By: R. Kalaichelvan

02 Jan, 2020 | 10:20 PM
image

காணாமல்போனோர் பிரச்சினை தொடர்பில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து அதனடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் காண்பதற்கு விசேட குழுவொன்றினை அமைப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் மற்றும் நிர்வாக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று 02.01.2020 இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட காணாமல் போனோர் விவகாரம் தொடர்பான கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த காணாமல் போனோரின் உறவினர்கள், தமது சார்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடி கௌரவமான தீர்வினைப் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த விடயத்தினை இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 

காணாமல் போனோரின் உறவினர்களில் பெரும்பாலானோர் அரசாங்கத்துடன் கலந்துரையாடி கௌரவாமான தீர்வினைப் பெற்றுக் கொள்ளத் தயராக இருப்பதாகவும், ஆனால் இந்த விவகாரத்தினை தீராத பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்ற அரசியல் கட்சிகளின் பின்னணியில் இயங்குகின்ற ஒரு சிறு பகுதியினரே தொடர்ந்தும் குழப்பங்களை மேற்கொண்டு வருவதாகவும் எடுத்துக் கூறினார்.

இதனையடுத்து இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களினால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், குறித்த விவகாரம் தொடர்பாக கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உட்பட அனைத்து விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளையும் விரிவாக ஆராய்ந்து அதனடிப்படையில் கூடிய விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் வழங்குவதாகவும்,  அதற்கான குழு ஒன்றினை உடனடியாக அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02