நில்வளா தேசிய கல்வி கலாச்சாலையின் இரண்டாம் வருட விஞ்ஞான பீடத்தில்  கல்வி கற்கும் மாணவர்கள் 3 பேரை அக்குரஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர்.முதலாம் வருட ஆசிரியர் பயிற்சிக்காக இணைந்த இரண்டு மாணவர்களை பகுடிவதைக்கு உட்படுத்தி தாக்கிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

தாக்கப்பட்ட மாணவர்கள் மயக்க நிலைக்கு சென்றதாகவும், தற்போது அவர்கள் அக்குரஸ்ஸ வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று திரும்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விஞ்ஞானப் பீடத்தின் தலைமை அதிகாரி சுனில் சேதர செனரத்ன மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.