ஒற்றுமையை சிதைத்து, தமிழர்களை அரசியல் அநாதைகளாக்க முயற்சி: இடமளிக்கக்கூடாதென்கிறார் வேலுகுமார்

Published By: J.G.Stephan

02 Jan, 2020 | 04:49 PM
image

போர்முடிவடைந்த பின்னர் ‘ஒற்றுமை’ என்பதே தமிழர்களுக்கு எஞ்சியிருக்கும் பலம் பொருந்திய ஆயுதமாகும். அதனை சிதைப்பதற்கு பேரினவாதிகள் வழிமீது விழிவைத்து காத்திருக்கின்றனர். எனவே பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் சிக்கும் வகையில் தமிழ்க்கட்சிகள் தீர்மானங்களை எடுக்ககூடாது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

2020 ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் கொழும்பு, கம்பஹா மற்றும் மலையகத்தில் போட்டியிடுவது தொடர்பில் பரீசிலிக்கப்பட்டுவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளமை தொடர்பில் இன்று (02.01.2020) கருத்து வெளியிடுகையிலேயே வேலுகுமார் எம்.பி.மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

“தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும், எல்லா தொகுதிகளிலும் போட்டியிடக்கூடிய ஜனநாயக உரிமை இருக்கின்றது.அந்தவகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டால்கூட அதனை நாம் எதிர்க்கப்போவதில்லை.

எனினும், நடைமுறை அரசியலை புரிந்துகொண்டு - களநிலைவரம் குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பதே சாலச்சிறந்ததாகும்.

குறிப்பாக தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணம், நுவரெலியா போன்ற பகுதிகளில் தமிழ்க்கட்சிகளுக்கிடையில் பலமுனைப்போட்டி நிலவினால்கூட தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கும், அரசியல் இருப்புக்கும் சிக்கல்வரப்போவதில்லை.

ஆனால், கண்டி, பதுளை, அம்பாறை, திருகோணமலை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தமிழர் தரப்பு பல அணிகளாக பிரிந்துநின்று போட்டியிட்டால் அது ஆங்காங்கே உள்ள தமிழ் வாக்குகளை சிதறடித்து, தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையும் இல்லாமல்செய்து, எதிரிகளுக்கு களம் அமைத்துக்கொடுத்துவிடும்.

ஆகவே, இம்மாவட்டங்களில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை ஒரு தரப்பு பெற்றால் மட்டுமே பிரதிநிதித்துவம் உறுதியாகும் என்ற யதார்த்த நிலைமையை சுமந்திரன் போன்றோர் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் முற்போக்கு கூட்டணியானது தனது அரசியல் தளத்தில் பலமாகவே இருக்கின்றது.மக்களும் கூட்டணியின் தேவையை உணர்ந்துவிட்டதால், எந்த கட்சி, எந்த வடிவில் போட்டியிட்டாலும் இம்முறை எமது வெற்றியை தடுக்கமுடியாது என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம்.

ஆனால், கடந்த காலங்களில் புரிந்துணர்வுடனும், விட்டுக்கொடுப்புகளுடனும் செயற்பட்ட - தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட முக்கியமான தமிழக்கட்சிகள் பிரிந்துநின்று மோதிக்கொண்டால் அது பேரினவாதிகளுக்கு வலிந்துசென்று தீனிபோடுவதாக அமைந்துவிடும்.

போர் முடிவடைந்த பின்னர் ‘ஒற்றுமை’ மூலமே தமிழ் மக்கள் தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளனர். நெருக்கடியான சூழ்நிலைகளில் ஓரணியில் திரண்டு குரல் எழுப்பிவருகின்றன. இந்நிலையைில்இந்த ஒற்றுமையை சிதைத்து, தமிழர்களை அரசியல் ரீதியில் அநாதைகளாக்குவதற்கு சில தரப்புகள் காத்திருக்கின்றன. அத்தகையசூழ்நிலைஉருவாக இடமளிக்ககூடாது என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சிப் பதவியை வகித்தபோதுகூட தெற்கில் உரிய வகையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்காத சுமந்திரன், யதார்த்தம் புரியாமல் தேர்தல்கள் பற்றி அறிவிப்பு விடுத்துவருகிறார்.

உண்மையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தாம் சந்திக்கின்ற பலத்த எதிர்ப்புகளாலும், மக்கள் மத்தியிலான செல்வாக்கு சரிவுகளாலும் தாம் எதிர்கொள்ள கூடிய வாக்கு சரிவுகளை சரி செய்யவே தெற்கில் போட்டியிடும் எண்ணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த முறை கூட்டமைப்பு பெற்ற இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்கள் இம்முறை கிடைக்காது என சுமந்திரன் நன்கறிவார்.  ஆகவே தமது தேசிய பட்டியலுக்கான வாக்குகளை அதிகரிக்கும் ஒரே உத்தேசம் மட்டுமே அவருக்கு இருக்கின்றது.

தமது இந்த வாக்கு வேட்டையால், தமிழ் வாக்குகள் சிதறி அதன் மூலம்   தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் வாழும் தமிழ் மக்கள் தங்கள் அரசியல் பிரதிநிதித்துவங்களை இழந்தாலும் அதுபற்றிய எந்த சமூக பொறுப்பும் அற்ற அரசியல்வாதியாக சுமந்திரன் மாறியுள்ளார் என்பதை தமிழ் வரலாறு பதிவு செய்கிறது.

இதைத்தவிர தெற்கில் நிலவும் அரசியல், சமூக கள நிலவர பின்னணியில் தெற்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆற்றக்கூடிய  எந்த ஒரு  பணியும் கிடையாது என்பதை சிறு குழந்தையும் அறியும்.

சுமந்திரன் தனது அரசியல் முதிர்ச்சியற்ற முடிவுகளால் கூட்டமைப்புக்கு ஏற்கனவே பாரிய சரிவுகளை ஏற்படுத்தி உள்ளார்.  அந்த வரிசையில் அவரது அடுத்த மிக மோசமான முடிவுதான் இந்த முடிவாகும். இதனால் ஏற்படும் அரசியல் விபரீதங்களுக்கு சுமந்திரனே பொறுப்பேற்க வேண்டும் என்பதை கூறி வைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53