"ரிப்பன் வெட்டும் திறப்பு விழாக்கள் மட்டும் அபிவிருத்தியல்ல. சமூக மாற்றத்திற்கான செயற்பாடுகளும் அபிவிருத்திகளே: திலகர் எம்.பி 

Published By: J.G.Stephan

02 Jan, 2020 | 03:57 PM
image

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த அறிதல் அவசியமான ஒன்றாகும். உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் தத்தமது சபைகளில் இந்த வன்முறைகளுக்கு எதிரான குரல்களை எழுப்புவதுடன் சபைகளின் ஊடாக நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கவும் தலைமை கொடுக்கவும் முன்வர வேண்டும். அதற்கு தேவையான பயிற்சிகளை நாம் தொடர்ந்து வழங்க திட்டமிட்டுள்ளோம். ரிப்பன் வெட்டும் திறப்பு விழாக்கள் மாத்திரம் அபிவிருத்தி அல்ல. இத்தகைய சமூக மாற்றத்திற்கான செயற்பாடுகளும் அபிவிருத்திகளே என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கம், முன்னணியின் மகளிர் அணி கிளைத் தலைவிகளுக்கான மாநாடும் செயலமர்வும் நுவரெலியா மாநகரசபை சினிசிட்டா மண்டபத்தில் ( 29/12/2019) நடைபெற்றது. மகளிர் அணித் தலைவியும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சரஸ்வதி சிவகுரு தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட முன்னணியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் சிறப்புரை ஆற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மதங்கள் பெண்களைப் போற்றுகின்ற அதேநேரம் எவ்வாறு ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு மறுப்பை செய்கின்றன என்பன போன்ற விடயங்கள் இன்றைய செயலமர்வில் தெளிவாக விளக்கப்பட்டன. பாரதியார், பாரதிதாசன் போன்ற கவிஞர்கள் எவ்வாறு அதில் இருந்து மீண்டுவர பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் செயற்பட்டார்கள் என்பது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது. சமூகத்தில் கையாளப்படும் தூஷன வார்த்தைகளில் கூட பெண்களை நிந்தனை செய்தே கட்டமைக்கப்படுவதாக ஓர் ஆய்வு கூறுகிறது.


எனவே மதங்களின் பின்னணிகளையே நற்பண்புகளாக நம்பி கலாசாரமாக நினைத்து வளர்ந்த சமூக கட்டமைப்பில் அடக்குமுறைகளுக்கு எதிராக பெண்களை கிளர்ந்தெழச் செய்வதற்கு அறிவூட்டுதலும், பயிற்சிகளும், செயலமர்வுகளும் வேண்டப்படுகின்றது.

 இன்று நடைபெற்ற பயிற்சி செயலமர்வு தனியே தோட்டத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதற்கெதிரான சட்ட ஏற்பாடுகளை மாத்திரமின்றி வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லக்கூடிய பெண்களுக்கு நிகழக்கூடிய வன்முறைகள், உரிமை மீறல்களில் இருந்து சர்வதேச தொழில் நியமங்களுக்கு அமைவாக நிவாரணம் பெறக்கூடிய வழிமுறைகள் குடும்ப வன்முறைகளை குறைத்தல் முதலான பல விடயங்கள் பேசப்பட்டன. 

இன்று தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கிறது. தோட்டத்தில் தேயிலை பறித்து அதனூடான உற்பத்தியான தேயிலை ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணியை உழைத்த இலங்கை நாடு இப்போது அந்த தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் பெண்களை வீட்டு வேலையாட்களாக ஏற்றுமதி செய்து அவர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி வருமானத்தினை பெறும் நிலைக்கு மாறியமை துரதிஷ்டமானது. பெருந்தோட்டத்துறைப் பெண்கள் மாத்திரமன்றி கிராமிய சிங்களப் பெண்களுக்கும் , ஏழை முஸ்லிம் பெண்களுக்கும் கூட இந்த துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருப்பது வேதனைக்குரியது. இதனால் பெண் தலைமைத்துவம் இல்லாத குடும்ப சூழல் அவர்களது வாழ்க்கைத் துணை திசை மாற்றத்துக்கும் அவர்களின் குழந்தைகள் வழி தவறி செல்லும் நிலைக்கும் காரணமானது. இதனை நான் பலமுறை பாராளுமன்றில் எடுத்துக் கூறி இந்த நிலைமையில் மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளேன்.

இலங்கையில் ஏனைய சமூகங்களைவிட மலையக சமூகத்திலேயே பெண் தலைமைத்துவம் அதிகம் உள்ளது. அவர்கள் அனைவரும் தொழிற்சங்கம் சார்ந்தவர்கள். அவர்கள் தொழிற்சங்கம் சார்ந்த விடயங்களுக்கே தலைமை கொடுக்கும் நிலைமை அவதானிக்கப்படுகின்றது.எனவேதான் தோட்டத் தொழிலில் அல்லாத பெண்களையும் எமது வலையமைப்பில் இணைத்து அனைத்துப் பெண்களுக்குமான பயிற்சி செயலமர்வுகளை ஒழுங்கமைத்து வருகிறோம். 

எது எவ்வாறு எனினும் இன்றைய வாழ்க்கை செலவை சமாளிக்கும் அனைத்து குடும்பப் பெண்களுமே சிறந்த தலைவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. 

புதிய அரசாங்கத்தின் கீழ் அரிசி, மரக்கறிகள் என அனைத்து அத்தியாவசிய விலைகளும் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் இத்தகைய செயலமர்வு மற்றும் மாநாட்டுக்கு பெண்கள் அணிதிரண்டு வந்துள்ளமை பாராட்டத்தக்கது.

செயலமர்வில் கலந்து கொண்ட கிளைத்தலைவிகள் உங்களது குழு மட்டத்தில் இந்த விடயங்களை பேசுவதற்கு முன்வரவேண்டும். வன்முறைகள் எந்தவடிவில் வந்தாலும் அதனை சட்டரீதியாக எதிர்க்கொள்ள தேவையான அறிவை இத்தகைய செயலமர்வுகளில் பெற்று ஒவ்வொரு ஊருக்கும் தலைமை கொடுக்க முன்வருதல் வேண்டும். உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் தத்தமது சபைகளில் இந்த வன்முறைகளுக்கு எதிரான குரல்களை எழுப்புவதுடன் சபைகளின் ஊடாக நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கவும் தலைமை கொடுக்க முன்வர வேண்டும். அதற்கு தேவையான பயிற்சிகளை நாம் தொடர்ந்து வழங்க திட்டமிட்டுள்ளோம். ரிப்பன் வெட்டும் திறப்பு விழாக்கள் மாத்திரம் அபிவிருத்தி அல்ல. இத்தகைய சமூக மாற்றத்திற்கான செயற்பாடுகளும் அபிவிருத்திகளே எனவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08