புத்தாண்டு தினத்தில் சீனாவை பின் தள்ளி இந்தியா முதலிடம் - எதில் தெரியுமா?

02 Jan, 2020 | 03:52 PM
image

புத்தாண்டினை புதிய கனவுகளுடனும் புதிய எதிர்பார்ப்புகளுடனும் ஒவ்வொருவரும் வரவேற்கின்றனர். இந்த எதிர்பார்ப்புகள் புதிய ஆடைகளில் தொடங்கி பிறக்கப்போகும் குழந்தைகள் வரை நீண்டு செல்கின்றது. 

ஒவ்வொரு ஆண்டிலும் ஜனவரி முதலாம் திகதி தமது குழந்தையை பிரசவிப்பதில் பெற்றோர் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு புத்தாண்டு தினத்தன்றும் உலகில் எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என ஐ.நா. சபையினால் கணக்கெடுக்கப்பட்டு தகவல் வெளியிடப்பட்டு வருகிறன்றது.

இந்த ஆண்டு ஐ.நா. சபையினால்  வெளியிடப்பட்டுள்ள தகவலிற்கமைய ஏற்கனவே உலக சனத்தொகை பட்டியலில், இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது. 

இந்தியாவில் புத்தாண்டு தினத்தன்று 67ஆயிரத்து 385 குழந்தைகள் பிறந்துள்ளன. இது உலகளவில் புத்தாண்டு தின குழந்தைகள் பிறப்பு சதவிகிதத்தில் 17 சதவிகிதமாகும்.

ஆண்டுதோரும் புத்தாண்டு தினத்தில் அதிக குழந்தைகள் பிறக்கும் நாடாக சீனா இருந்து வந்தது. எனினும் இந்த ஆண்டு இந்தியா 21,086 குழந்தைகளுடன் சீனாவை பின் தள்ளி முதலிடத்தை பெற்றுள்ளது.

இந்நிலையில், புத்தாண்டு தினத்தில் 46,299 குழந்தைகள் பிறந்து சீனா இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.  

ஐ.நா. சபையின் கணக்கெடுப்பின்படி புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் 3 லட்சத்து 92 ஆயிரத்து 78 குழந்தைகள் பிறந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் புத்தாண்டு தினத்தில் முதல் குழந்தை பிஜி நாட்டில் பிறந்திருப்பதாக ஐ.நா. சபை கணித்துள்ளது. 

இரண்டாவது இடத்தை பிடித்துள்ள சீனாவில் 46 ஆயிரத்து 299 குழந்தைகளும் 3 ஆவது இடத்திலுள்ள நைஜீரியாவில் 26 ஆயிரத்து 39 குழந்தைகளும் 4 ஆவது இடத்திலுள்ள பாகிஸ்தானில் 16 ஆயிரத்து 787 குழந்தைகளும், 5 ஆவது இடத்திலுள்ள இந்தோனேசியாவில் 13 ஆயிரத்து 20 குழந்தைகளும் பிறந்துள்ளன.

6 ஆவது இடத்தினை பெற்ற அமெரிக்காவில் 10 ஆயிரத்து 452 குழந்தைகள் பிறந்துள்ளதுடன் 2020 ஆம் ஆண்டின் புத்தாண்டு தினத்தின் கடைசி குழந்தை அமெரிக்காவில் பிறந்ததாக ஐ.நா. சபை வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் புத்தாண்டு தினத்தை அதிர்ஷ்டமிக்க நாளாக அனைவரும் கருதுகின்றனர். இதனால் சில நாடுகளில் ஜனவரி முதலாம் திகதியன்று சத்திரசிகிச்சை மூலம் ஏராளமான பெண்களுக்கு குழந்தைகள் பிறந்திருப்பதாக ஐ.நா. சபை மேலும் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right