மாணவர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்குமா?

02 Jan, 2020 | 11:04 AM
image

திரு­மலை மாணவர் ஐவர் படு­கொலை வழக்கில் குற்றம் சாட்­டப்­பட்­டி­ருந்த 13 படை­யி­னரும் குற்­ற­மற்­ற­வர்கள், குற்­றத்தை நிரூ­பிக்க போதிய ஆதாரம் இல்­லை­யென்ற கோதாவில் கடந்த 2019 ஜுலை மாதம் நீதி­மன்­றத்­தினால் விடு­தலை செய்­யப்­பட்­டனர். சுமார் 13 வரு­டங்­க­ளுக்குப் பிறகு இத்­தீர்ப்பு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. திரு­மலை பிர­தான நீதவான் இத்­தீர்ப்பை 2019 ஆம் ஆண்டு ஜுலையில் வழங்­கி­யி­ருந்தார்.

பீனல் கோட்டின் 154 மற்றும் 153 ஆம் பிரி­வு­களின் கீழ் இவ்­வ­ழக்­கினை தொடர்ந்து நடத்­து­வ­தற்­கான போதிய ஆதா­ரங்கள் இல்லை எனக்­கூறி குறித்த சந்­தேக நபர்­களை குற்­ற­மற்­ற­வர்­க­ளென நீதவான் விடு­தலை செய்­துள்ளார். (3.7.2019)

2006 ஆம் ஆண்டு ஜன­வரி 2 ஆம் திகதி திரு­கோ­ண­மலை கடற்­க­ரையில் அமைந்­துள்ள காந்தி சிலை அருகில் வைத்து ஐந்து மாண­வர்கள் சுட்டுக் கொல்­லப்­பட்­டனர். மனோ­கரன் ரஜிகர், யோக­ராஜா ஹேமச்­சந்­திரா, லோஹி­த­ராஜா ரொஹான், தங்­கத்­துரை சிவா­னந்தா, சண்­மு­க­ராஜா கஜேந்­திரன் ஆகிய ஐந்து மாண­வர்­க­ளுமே ஆயு­த­தா­ரி­களால் சுட்டுக் கொல்­லப்­பட்­டி­ருந்­தனர்.

இறந்­த­வர்கள் பல்­க­லைக்­க­ழக அனு­ம­திக்­காக காத்­தி­ருந்த மாண­வர்கள். கொலைகள் மலிந்து போன காலத்தில் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் என்ற சந்­தே­கக்கண் கொண்டு பார்க்­கப்­பட்டு சுதந்­தி­ர­மாக காற்று வாங்கிக் கொண்­டி­ருந்த அப்­பாவி மாண­வர்கள் ஐவர் அன்று கொல்­லப்­பட்­டார்கள்.

இலங்­கையில் கடும் சீற்­றத்­துடன் பேசப்­பட்டு வந்த குற்­ற­வியல் நீதி­மு­றையின் சகல அநீ­தி­களும் எதி­ரா­னதென விமர்­சிக்­கப்­ப­டு­கி­ற­போ­திலும் குறைந்­தது இந்த வழக்­கி­லா­வது கொலை­யா­ளர்கள் நீதியின் முன் நிறுத்­தப்­பட்­டார்கள் என்று நம்­பப்­பட்­ட­போதும் சகல சந்­தேக நபர்­களும் அவர்­க­ளுக்கு எதி­ரான ஆதா­ரங்கள் இல்­லை­யென்ற அடிப்­ப­டையில் விடு­விக்­கப்­பட்­டமை உலகப் பழிப்­புக்­கு­ரி­ய­தாக இருக்­கி­றது என்று நீதித்­து­றை­யின்பால் பழி­சு­மத்தும் அள­வுக்கு பேசு­பொ­ரு­ளாக்­கப்­பட்டு விட்­டது.

மக்கள் மறந்தும் மற­வா­த­து­மாக மங்கிப் போய்­விட்ட இப்­ப­டு­கொலை தொடர்பில் நடந்த சம்­பவம் தொடர்பில் இரை­மீட்டிப் பார்க்க வேண்­டிய பல விட­யங்­களும் செய்­தி­களும் உள்­ளன. யுத்தம் உக்­கிரம் பெற்­றி­ருந்த 2006 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 2 ஆம் திகதி திரு­கோ­ண­மலை கடற்­க­ரைக்கு முன்­பாக காந்­தியார் பார்த்­துக்­கொண்­டி­ருக்கும் சந்­தியில் காற்று வாங்­கவும் கூடி கதைத்து பொழுது போக்­கவும் உரை­யாடிக் கொண்­டி­ருந்த மாண­வர்கள் மீது இனந்­தெ­ரி­யாத துப்­பாக்­கி­தா­ரிகள் துப்­பாக்கிப் பிர­யோகம் நடத்­தி­னார்கள். குண்­டு­களை வீசி எறிந்­தார்கள். பல்­க­லைக்­க­ழ­கத்­துக்குத் தெரி­வா­கி­யி­ருந்த 5 மாண­வர்கள் பதைக்கப் பதைக்கப் பலி­யெ­டுக்­கப்­பட்­டார்கள்.

மாவட்­டத்தில் பிர­பல்யம் பெற்­று­வி­ளங்கும் இந்துக் கல்­லூ­ரியில் பயின்று 2005–2006 கல்­வி­யாண்­டுக்­காக தெரிவு செய்­யப்­பட்ட நான்கு மாணவர் களும் அவர்­களின் உற்ற நண்பன் ஒரு­வ­னு­மாக ஐவர் பலி கொள்ளப் பட்­டார்கள்.

வன்­னியார் வீதியைச் சேர்ந்த தங்­கத்­துரை சிவா­னந்தா, புனித மரியாள் வீதி மனோ­கரன் ரஜீகர், வித்­தி­யா­லயம் வீதி சண்­மு­க­ராஜா கஜேந்­திரன், சிவன் வீதி லோஹி­த­ராஜா ரொஹான் மற்றும் போ.ஹேமச்­சந்­திரன் ஆகிய ஐவ­ருமே படு­கொலை செய்­யப்­பட்­ட­வர்­க­ளாவர்.

2006 ஆம் ஆண்டு திரு­கோ­ண­ம­லையைப் பொறுத்­த­வரை ஓர் அபத்தம் நிறைந்த ஆண்­டா­கவே பார்க்­கப்­பட்­டது. 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி இரா­ணுவத் தள­பதி சரத் பொன்­சே­காவின் படு­கொலை முயற்சி கார­ண­மாக சம்பூர் மீது விமா­னத்­தாக்­குதல் நடத்­தப்­பட்டு சம்பூர் மக்­களின் இடம்­பெ­யர்வு ஜுலையில் மாவி­லாறு யுத்தம் தொடக்­கப்­பட்டு போரா­ளி­க­ளுக்கும் படை­யி­ன­ருக்கும் கடும்போர் நடை­பெற்­றமை. 1.8.2006 திரு­கோ­ண­மலை கடற்­படைத் தளத்தின் மீது தாக்­குதல். 2.8.2006 மூதூர் அண்­டிய பகு­தி­களில் முஸ்லிம் மக்கள் இடம்­பெ­யர்வு. 23 க்கும் மேற்­பட்ட அகதி முகாம்கள் அமைக்­கப்­பட்­டமை. 2006 ஜன­வரி 24 ஆம் திகதி சுடர்­ஒளி நிருபர் எஸ்.சுகிர்­த­ராஜன் உவர்­மலை லோவர் வீதியில் வைத்து ஆயு­த­தா­ரி­களால் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார். அதே­யாண்டு 4.8.2006 இல் மூதூரில் வைத்­து­தொண்டர் நிறு­வ­ன­மான அக்ஷன் பாம் நிறு­வன 17 பணி­யா­ளர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள்.

இதே வருடம் ஏப்ரல் 23 இல் மூன்று தமிழ் இளை­ஞர்கள் அதே­போன்று ஆகஸ்ட் 2 இல் மூன்று இளை­ஞர்கள் செப்­டெம்பர் 14 மக்­ஹெய்சர் விளை­யாட்டு அரங்­குக்கு அருகில் வைத்து அரச அலு­வலர் ஒருவர், அன்­பு­வ­ழி­புரம் படு­கொலை, மீனவர் படு­கொலை, செல்­வ­நா­ய­க­புரம் படு­கொலை (27.10.2006). ஆத்­தி­மோட்­டைக்­கொலை (7.12.2006) என ஏரா­ள­மான அசம்­பா­வி­தங்கள் நிகழ்ந்த ஆண்­டாக 2006 ஆம் ஆண்டு பதி­யப்­பட்­டுள்­ளது.

5 மாணவர் படு­கொ­லை­யா­னது உள்­நாட்­ட­ள­விலும் சர்­வ­தேச ரீதி­யா­கவும் மனித உரி­மை­யாளர் மத்­தி­யிலும் அதிக கவ­னத்­துக்­கு­ரி­ய­தா­கவும் கண்­ட­னத்­துக்­கு­ரி­ய­தா­கவும் மாறி­ய­போதும் அர­சாங்கம் இப்­ப­டு­கொலை தொடர்பில் எவ்­வித கவ­லைப்­பாடு கொண்­ட­தா­கவும் காட்டிக் கொள்­ள­வில்லை. கண்டு கொள்­ளா­மலே காலத்தைக் கடத்­தி­யது என்று பல­ராலும் குற்­றம்­சாட்­டப்­பட்­டது. பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­களைச் சேர்ந்­த­வர்கள் பயத்தின் கார­ண­மாக நாட்டை விட்டு ஓட வேண்­டிய சூழ்­நிலை காணப்­பட்­டது.

இது பற்றி 2014 ஆம் ஆண்டு இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த நவ­நீ­தம்­பிள்­ளை­ய­வர்கள் தனது அறிக்­கையில் பின்­வரும் விட­யங்­களை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். நீதி மற்றும் பொறுப்­புக்­கூறல் விவ­கா­ரங்கள் சம்­பந்­த­மான முக்­கி­ய­மான ஏனைய பரிந்­து­ரைகள் தொடர்பில் சிறிய முன்­னேற்­றமே காணப்­பட்­டி­ருப்­பது மனித உரிமை பேர­வையின் முக்­கிய கவ­லை­யாக இருக்­கி­றது. உதா­ர­ண­மாக 9120 ஆம் இலக்க பரிந்­து­ரை­யா­னது 2006 ஆம் ஆண்­டி­லி­ருந்து இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்கள் சம்­ப­வங்­களை குறிப்­பாக 2006 இல் திரு­கோ­ண­ம­லையில் இடம்­பெற்ற 5 மாணவர் படு­கொலை மற்றும் மூதூரில் இடம்­பெற்ற பட்­டி­னிக்கு எதி­ரான நட­வ­டிக்கை என்னும் பிரான்ஸ் தொண்டர் நிறு­வனப் பணி­யாளர் 17 பேரின் படு­கொலை சம்­ப­வங்கள் தொடர்­பாக 2006 ஆம் ஆண்டு நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் (உட­ல­கம ஆணைக்­குழு) அறிக்­கையின் பரிந்­துரை களை அமுல்­ப­டுத்­து­மாறு அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கி­றது. திரு­மலை மாணவர் படு­கொலை வழக்கு சாட்­சிகள் அச்­சு­றுத்தல் கார­ண­மாக நாட்டை விட்டு வெளி­யே­றி­யுள்­ளனர் என நவ­நீ­தம்­பிள்­ளை­ய­வர்கள் தனது அறிக்­கையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

2006 ஆம் ஆண்டு மாணவர் படு­கொலை சம்­பவம் இடம்­பெற்­ற­போதும் 2010 ஆம் ஆண்டு வரை இது தொடர்பில் அக்­கறை காட்­டாத நிலையே காணப்­பட்­டது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­ட­தாக இலங்கை அர­சாங்கம் பிர­க­டனம் செய்­தி­ருந்­தாலும் மனித உரிமை மீறல் போர்க்­குற்றம் தொடர்பில் சர்­வ­தேச வலைப்­பின்­ன­லுக்குள் இலங்கை அர­சாங்கம் மாட்­டிக்­கொண்ட சூழ்­நி­லையில் தான் 2013 ஆம் ஆண்டு இது பற்­றிய விசா­ர­ணைகள் முடுக்­கி­வி­டப்­பட்­டதன் பேரில் சந்­தே­கத்தின் பேரில் விஷேட அதி­ரடிப் படையைச் சேர்ந்த 12 பேர் கைது செய்­யப்­பட்­டனர். இச்­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் 13 பேர் என அடை­யாளம் காணப்­பட்­ட­போதும் ஒருவர் மர­ணித்த கார­ணத்­தினால் பின்­வரும் 12 அதி­ரடிப் படை­யினர் கைது செய்­யப்­பட்­டனர்.

ஏ.சரச்­சந்­திர பெரேரா, ஜி.ஏ.ரோஹித விஜித்த குமார, ஜி.ஆனந்த, எஸ்.பி.ஜெயலால், ஏ.கமல்­பி­ரதீப், ரவில்­கு­மார ரத்­நா­யக்க, சமிந்த லோஜித உதய மிகிர பண்­டார, கே.எம்.கே.சஞ்­சீவ, எம்.ஏ.விமல் பண்­டார, ஜெய­சே­கர திஸ­நா­யக்க, ஜெயந்த திஸ­நா­யக்க, எஸ்.இந்­திக்க தூஷார ஆகி­யோரே அந்த பன்­னி­ரு­வ­ரு­மாகும்.

இவர்கள் அதி­ர­டி­யாக கைது செய்­யப்­பட்­ட­மைக்­கான காரணம் 2013 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமைப் பேர­வையின் நிகழ்ச்சி நிரலில் இவ்­வி­வ­காரம் இடம்­பெற்­றி­ருந்­த­மை­யினால் கைது செய்­யப்­பட்­டிருந் தார்கள். இதே­வேளை 2013 பெப்­ர­வ­ரியில் இடம்­பெற்ற மனித உரிமைப் பேர­வையில் படு­கொலை செய்­யப்­பட்ட ரஜி­கரின் தந்தை டாக்டர் மனோ­கரன் மனித உரிமைப் பேர­வையில் உரை­யாற்­று­வ­தற்கு ஒரு சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்­டது.

“எனது மகன் சுட்டுக் கொல்­லப்­பட்­டுள்ளான். இதற்கு முறை­யான நீதி வழங்­கப்­பட வேண்­டு­மாயின் சர்­வ­தேச விசா­ரணை மேற்­கொண்டு நீதி வழங்­கப்­பட வேண்டும். சுட்­டுப்­ப­டு­கொலை செய்­யப்­பட்ட ஐவரும் மாண­வர்கள். அவர்கள் தமி­ழர்கள் என்ற ஒரே கார­ணத்­துக்­கா­கவே திட்­ட­மி­டப்­பட்டு சுட்­டுக்­கொலை செய்­யப்­பட்­ட­தா­கவும் அக்­கொ­டூ­ர­மான காட்­சியை தான் நேரே கண்­ட­தா­கவும் அவர் பேர­வையில் தெரி­வித்­தி­ருந்தார். தந்­தைக்கு முன் மகன் சுடு­பட்டு மூளை சிதறி படு­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வ­மா­னது நாக­ரிகம் மிக்க மனித குலத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட அநா­க­ரி­கமும் கொடூ­ரமும் நிறைந்த சம்­ப­வ­மாகும்.

திரு­கோ­ண­மலை கடற்­க­ரைக்கு முன்­பா­க­வுள்ள காந்தி சிலைக்­க­ருகில் மாலை­பட்ட வேளை 7 மாண­வர்கள் ஒன்­று­கூடி கதைத்துக் கொண்­டி­ருந்­தி­ருக்­கி­றார்கள். பச்­சை­நிற முச்­சக்­க­ர­வண்­டியில் வந்த இனந்­தெ­ரி­யாத நபர்கள் மேற்­படி மாண­வர்கள் மீது கைக்­குண்­டு­களை வீசி விட்டு ஓடி­விட்­டார்கள். அக்­குண்­டுகள் தெய்­வா­தீ­ன­மாக தெறித்து அவர்கள் இருந்த இடத்­தை­விட்டு வில­கி­விட்­டது.

இந்த திடீர் தாக்­குதல் கார­ண­மாக அதிர்ச்­சி­ய­டைந்த மாண­வர்கள் செய்­வது அறி­யாது திகைத்­துப்போய் நின்ற நிலையில் மறு­மு­னை­யி­லி­ருந்து திடீ­ரென ஓடி வந்த ஆயுத தாரிகள் அம்­மா­ண­வர்­களை சுற்றி வளைத்து வியூகம் இட்­டுள்­ளனர். ஏழு மாண­வர்­க­ளையும் ஆயுத தாரிகள் தனித்­த­னி­யாக பிரித்­தெ­டுத்து ஒவ்­வொ­ரு­வ­ரையும் நடு­ரோட்டில் குப்­பு­றப்­ப­டுக்க வைத்து சுடு­வ­தற்கு ஆயத்­தப்­ப­டுத்­திய வேளை ரஜிகர் என்ற மாணவன் தனது தந்­தை­யுடன் கைபே­சியில் தொடர்பு கொண்டு தாம் ஆயு­த­தா­ரி­களால் சுற்றி வளைக்­கப்­பட்ட அவ­லத்தை தெரி­வித்­துள்ளான். அச்­செய்தி கேட்டு அரு­கி­லுள்ள வீதியில் குடி­யி­ருக்கும் தந்தை சம்­பவ இடத்­துக்கு ஓடி வந்­துள்ளார். ஓடி வந்து பார்த்­த­போது தந்­தைக்கு முன்­னா­லேயே மகன் சுடப்­பட்டு மூளை­சி­தறி செத்தான் என வாக்கு மூலம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

7 மாண­வர்கள் சம்­பவ இடத்தில் கூடி­யி­ருந்­த­போதும் இரு மாண­வர்கள் தப்பி ஓட முயற்சி செய்­த­போது அவர்கள் மீது சர­மா­ரி­யாக துப்­பாக்கிச் சூடு நடாத்­தப்­பட்­டுள்­ளது. இருந்­த­போ­திலும் மேற்­படி இரு மாண­வர்­களும் தெய்­வா­தீ­ன­மாக ஓடித்­தப்­பி­விட்­டார்கள்.

இச்­சம்­பவம் தொடர்­பாக விசா­ரிப்­ப­தற்­காக 2006 ஆம் ஆண்டு அன்­றைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ   உட­ல­கம விசா­ரணை ஆணைக் குழுவை நிய­மித்தார். ஆனால் அவ்­வி­சா­ரணை பூர்த்தி செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்­பாக முடி­வ­டைந்து விட்­டது. பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்ப உறுப்­பி­னர்கள் ஆணைக்­குழு முன்­னி­லையில் சாட்­சியம் அளித்­தார்கள். பாது­காப்பு இல்­லை­யென இருந்த நிலை­யிலும் அவர்­களால் சாட்­சியம் அளிக்­கப்­பட்­டது. இவ்­வா­ணைக்­கு­ழு­வினால் 2006–2007 காலப்­ப­கு­தியில் விசா­ரிக்­கப்­பட்டு வந்­த­போதும் அர­சாங்­கமோ குறித்த ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை வெளி­யி­டு­வ­தற்கு ஒரு­போதும் தயா­ரா­க­வி­ருக்­க­வில்லை. அதே காலப்­ப­கு­தியில் குறித்த படு­கொலைச் சம்­பவம் இலங்கை மனித உரிமை ஆணைக்­கு­ழு­வி­னாலும் விசா­ரிக்­கப்­பட்டு வந்த நிலையில் உட­லகம ஆணைக்­கு­ழு­வினால் கண்­ட­றி­யப்­பட்­டவை குறித்து தொடர் நட­வ­டிக்கை எதுவும் எடுக்­கப்­ப­டாமை திகைப்­பூட்டும் அச்சம் வெளிப்­ப­டுத்தப்பட்­டி­ருந்­தது என முன்னாள் மனித உரி­மை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளை­ய­வர்கள் தனது அறிக்­கையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

நவ­நீ­தம்­பிள்­ளையால் சுட்­டிக்­காட்­டப்­பட்ட உட­ல­கம ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­யா­னது சுமார் 8 வரு­டங்­க­ளுக்குப் பின் கால­தா­ம­த­மாக 20.10.2015 ஆம் திக­தி­யன்று பாரா­ளு­மன்றில் முன்னாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்கவினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வ­றிக்­கையில் குறிப்­பிட்­ட­வாறு குற்றம் இழைக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் அர­சாங்கம் போதிய கவனம் செலுத்­த­வில்­லை­யென்­பது சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது.

ஏலவே குறிப்­பிட்­ட­து­போல சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள் ஜெனிவா மனித உரிமைப் பேர­வையின் அழுத்தம் ஆகி­யவை கார­ண­மாக 12 விஷேட அதி­ர­டிப்­ப­டை­யினர் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு திரு­மலை நீதி­மன்றில் வழக்கு தொட­ரப்­பட்­டது. 2013 ஆம் ஆண்டு தொட­ரப்­பட்ட இவ்­வ­ழக்கு தொடர்பில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்­காக 31 சாட்­சி­யாளர் அழைக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஆனால் பெரும்­பான்­மை­யானோர் பயத்தின் கார­ண­மாக வெளி­நாடு சென்று விட்­ட­தாக அறி­விக்­கப்­பட்ட நிலை­யி­லேயே 2013 ஆம் ஆண்டு தாக்கல் செய்­யப்­பட்ட இவ்­வ­ழக்கின் தீர்ப்பு கடந்த வருடம் ஜுலை மாதம் 3 ஆம் திகதி வழங்­கப்­பட்டு, 12 படை­யி­னரும் குற்­ற­மற்­ற­வர்கள் என திரு­மலை நீதி­மன்­றத்­தினால் விடு­தலை செய்­யப்­பட்­டனர்.

இவ்­வ­ழக்கு தொடர்­பாக அதி­ரடிப் படை­யி­ன­ருக்கு எதி­ராக 15 குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­ட­போதும் மர­ண­ம­டைந்த ஒரு படை வீரர் உட்­பட 13 படை வீரர்­களும் சகல குற்­றங்­க­ளி­லு­மி­ருந்தும் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தனர். இது­போன்ற தீர்ப்பை குமா­ர­புரம் படு­கொலை வழக்­கிலும் நீதி­மன்றம் வழங்­கி­யி­ருந்­தமை நீதி­யின்பால் நம்­பிக்கை வைத்­தி­ருக்கும் அனைத்து தரப்­பி­ன­ரையும் அதிர்ச்­சிக்கு உள்­ளாக்­கிய விட­ய­மாகும்.

1996 ஆம் ஆண்டு பெப்­ர­வரி 11 ஆம் திகதி மூதூர் தேர்தல் தொகு­தியைச் சேர்ந்த குமா­ர­புரம் என்னும் குக்­கி­ரா­மத்தைச் சேர்ந்த 26 அப்­பாவி பொது­மக்கள் பதைக்­கப்­ப­தைக்க படு­கொலை செய்­யப்­பட்ட 24 ஆவது நினை­வேந்தல் நாள் எதிர்­வரும் பெப்­ர­வரி 11 ஆம் திகதி இடம்­பெற வுள்­ளது. 26 அப்­பா­விகள் கொடுங்­கோ­லுக்கு இரை­யாக்­கப்­பட்­டார்கள். படு­கொலை செய்­யப்­பட்ட 26 பேரில் 13 பேர் பிள்­ளைகள். ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, மகன், மகள், அப்பா, பேத்தி, பேரன் என குடும்ப கொடி­களே படு­கொலை செய்­யப்­பட்­டார்கள்.

மேற்­படி படு­கொலை வழக்கு திரு­கோ­ண­மலை நீதி­மன்­றி­லி­ருந்து அனு­ரா­த­புரம் மேல்­நீ­தி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்டு சம்­ப­வங்­களை நேரில் கண்­ட­வர்கள், பாதிக்­கப்­பட்­ட­வர்கள், தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற வகை­யிலும் பொலிஸ் அதி­கா­ரிகள், விஷேட வைத்­திய நிபு­ணர்கள், அரச உத்­தி­யோ­கத்­தர்கள் என்ற வகையில் 108 சாட்­சி­யா­ளர்கள் விசா­ரிக்­கப்­பட்டு 7 பேர் கொண்ட ஜுரி சபை நிய­மிக்­கப்­பட்டு 2016 ஆம் ஆண்டு ஆனி மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 2019 ஜுலை 27 ஆம் திக­தி­வரை விசா­ர­ணைகள் இடம்­பெற்று வழங்­கப்­பட்ட தீர்ப்பில் நீதி­மன்றில் நிறுத்­தப்­பட்ட ஆறு படை­வீ­ரர்­களும் நிர­ப­ரா­திகள் என தீர்ப்­ப­ளிக்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்­டனர். தீர்ப்பு வழங்­கிய நீதி­ப­தி­ய­வர்கள் வழக்கில் சாட்சியாளர்களால் பிரதிவாதி கூண்டிலிருக்கும் பிரதிவாதிகள் அடையாளம் காணப்படாமையை மட்டும் மையப்படுத்தி அவர்களுக்கு மரண தண்டனை வழங்க யாருக்கும் உரிமையில்லையென ஜுரி சபையினர் ஏகமனதாக தீர்மானித்ததற்கு ஏற்ப பிரதிவாதிகள் நிரபராதிகள் எனக் காணப்பட்டு விடுதலை செய்யப்படுகிறார்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

அத்தகையதொரு தீர்ப்பே திருமலை 5 மாணவர்கள் படுகொலையிலும் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட உறவினர்களுக்கு நீதியின்பால் வெறுப்பையே உண்டுபண்ணியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தீர்ப்பு தொடர்பில் மீண்டும் மீண்டும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற கோரிக்கையை சட்டமா அதிபர் காரியாலயம் விடுத்திருப் பதாக தெரிவிக்கப்படுகிறது. 5 மாணவர் படுகொலை தொடர்பில் சட்டமா அதிபர் எடுத்திருக்கும் தீர்மானத்தை வரவேற்றிருக்கும் சர்வதேச மன்னிப்பு சபை மேற்கொள்ளப்படவிருக்கும் விசாரணைகள் பயனுடையவையாக இருக்கவேண்டுமானால் நீதியில் சில சீர்திருத்தங்கள் அவசியமென்று கூறியிருக்கிறது.

இக்கொலையுடன் தொடர்புடைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஷேட அதிரடிப்படையைச் சேர்ந்த 13 வீரர்களையும் அவர்களுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லையென்ற காரணத்தைக்கூறி திருமலை நீதிவான் நீதிமன்றம் விடுதலை செய்தமையை அடுத்தே இந்த மீள் விசாரணை தீர்மானம் சட்டமா அதிபரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கும் இக்கொலை தொடர்பான நீதி கிடைப்பதற்கும் முழுமையானதும் கண்டிப்பானதும் பயனுறுதியுடையதுமான விசாரணைகள் அவசியம் என்பதையும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

- திருமலை நவம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04