அவிசாவளை, கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீடுகளை வழங்குமாறு ஜே.வி.பி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே   ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர்  விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொஸ்கம சம்பவம் தொடர்பாக முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதேவேளை இந்த வெடிப்பு சம்பவத்தால் மக்களின் சொத்துக்கள் சேதமாகியுள்ளன. இது தொடர்பில் சரியான முறையில் ஆராய்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்றார்.