நடந்­ததும்... நடக்க வேண்­டி­யதும்...! அரசியல் செல்வாக்கை தக்கவைக்க வேண்டுமென மலையக அரசியல்வாதிகள் நினைக்கக்கூடாது !

Published By: Digital Desk 3

01 Jan, 2020 | 05:23 PM
image

மில்­லே­னியம் வருடம் ஆரம்­ப­மாகி 19 வரு­டங்கள் கடந்து விட்­டன. 2020 புதிய ஆண்டு பிறந்­துள்­ளது. வழமை போல ஒவ்­வொரு புதிய ஆண்டும் பிறக்கும் போது, நாடும் மக்­களும் சுபிட்­ச­மாக இருக்க வேண்டும் என்றே எதிர்­பார்த்து வாழ்த்­துக்கள் பரி­மா­றப்­ப­டு­வ­துண்டு. அதே எதிர்­பார்ப்­போடு இந்த ஆண்­டையும் வர­வேற்போம். அதே­நேரம், கடந்த காலத்தை அசை போட்டுப் பார்த்து நிகழ்காலத்தில் திட்­ட­மிட்டு செயற்­ப­டு­வ­தற்கும் எம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

2019 - ஒரு முக்­கி­ய­மான ஆண்டு

நேற்­றோடு விடை­பெற்றுச் சென்­றுள்ள 2019 ஆம் ஆண்டு எமது நாட்டைப் பொறுத்த வரையில் மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஓர் ஆண்­டாகும். ஏனெனில், இரண்டு தேசியக் கட்­சிகள் ஒன்று சேர்ந்து உரு­வாக்­கப்­பட்ட நல்­லாட்சி அர­சாங்கம் 2017 ஒக்­டோபர் மாத இறு­தியில் மாற்றம் பெறத் தொடங்­கி­யது. அப்­போது பிர­த­ம­ராக இருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க பத­வியில் இருக்கும் போதே மஹிந்த ராஜ­பக்ஷ அன்­றைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்டார். இது தொடர்­பாக வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்டு மீண்டும் 2018 டிசம்பர் மாதத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ரானார்.

நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­லி­ருந்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி வெளி­யே­றி­யதால், ஐக்­கிய தேசிய முன்­னணி தனித்து ஆட்சி அமைத்­தது. அது­வரை எதிர்க்­கட்­சி­யாக அங்கம் வகித்து வந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமக்கு பெரும்­பான்மை இல்லை என்று கூறி எதிர்க் கட்சித் தலை­வ­ராக இருந்த இரா. சம்­பந்தன் மிகவும் நாக­ரி­க­மான முறையில் பதவி வில­கினார். அவ­ருக்குப் பதி­லாக பொது­ஜன பெர­முன சார்பில் மஹிந்த ராஜ­பக்ஷ எதிர்­கட்சித் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

52 நாள் ஆட்சி மாற்­றத்­துக்குப் பிறகு அமைச்­சு­க­ளுக்கு போது­மான நிதி ஒதுக்­கீடு செய்ய முடி­யாமல் அபி­வி­ருத்திப் பணி­களில் பின்­ன­டைவை எதிர்­நோக்க வேண்­டி­யி­ருந்­தது. இத்­த­கைய பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு நாடு முகங்­கொ­டுத்து வந்த நிலையில் 2019 ஏப்­ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் முக்­கி­யமான தேவா­ல­யங்கள், நட்­சத்­திர ஹோட்டல் ஆகி­ய­வற்றில் முஸ்லிம் தீவி­ர­வா­திகள்  தற்­கொலை குண்டுத்  தாக்­கு­தலை நடத்­தி­யி­ருந்­தார்கள். வெளி­நாட்­ட­வர்கள் உட்­பட 250 க்கும் மேற்­பட்டோர் கொல்­லப்­பட்டும் நூற்றுக்கணக்­கானோர் காய­ம­டைந்தும் நாடு துய­ரத்தில் மூழ்­கி­யி­ருந்­தது.

    ஜனா­தி­பதித் தேர்­தலும் முடி­வு­களும்

2020ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திக­தி­யுடன் ஜனா­தி­ப­தியின் பதவிக் காலம் நிறை­வ­டைய இருந்த நேரத்தில் முன்­கூட்­டியே 2019 நவம்பர் 16 இல் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­ற­லா­யிற்று. இலங்கை வர­லாற்றில் ஜனா­தி­ப­தி­யா­கவோ, பிர­த­ம­ரா­கவோ, அமைச்­ச­ரா­கவோ, பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவோ இல்­லாத நிலையில் பாது­காப்பு செய­லா­ள­ராக மாத்­திரம் பதவி வகித்த கோத்தபாய ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார்.

 ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் போட்­டி­யிட்ட சஜித் பிரே­ம­தாச வெற்றி பெறுவார் என்று மிகவும் எதிர்­பார்ப்­புடன் காணப்­பட்டார். வடக்கு, கிழக்கு, மலை­யகம் உட்­பட சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கே அதி­க­மாகக் கிடைத்­தி­ருந்­தது. இருந்தும் சிறு­பான்மை மக்­களின் ஆத­ரவு இல்­லாமல் பெரும்­பான்மை வாக்­கு­க­ளுடன் கோத்தபாய வெற்றி பெற்றார்.

அதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு மஹிந்த ராஜ­பக் ஷ பிர­த­ம­ராகி அவ­ரது தலை­மையில் காபந்து அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால், சிறு­பான்மை மக்கள் சார்பில் ஆறு­முகன் தொண்­டமான், டக்ளஸ் தேவா­னந்தா ஆகியோர் அமைச்­சர்­க­ளாக இருந்த போதிலும், முஸ்லிம் மக்­களைப் பிர­தி­நி­தித்­துவப்படுத்தும் வகையில் ஒருவர் கூட அமைச்­ச­ரா­கவோ, பிர­தி­ய­மைச்­ச­ரா­கவோ நிய­மனம் பெற­வில்லை.

ஏப்­ரல் 21 குண்டு வெடிப்­புக்குப் பிறகு முஸ்லிம் சமூ­கத்தை  சந்­தேகக் கண்­கொண்டு பார்க்கத் தொடங்­கி­னார்கள். முஸ்லிம் அமைச்­சர்­களும் தமது ஒற்­று­மையை எடுத்துக் காட்டும் வகையில் எல்­லோரும் ஒரே நேரத்தில் தமது பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­தி­ருந்­தார்கள். ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பகி­ரங்­க­மா­கவே சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தது.

வடக்கு–கிழக்கு சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னைகள்

2019ஆம் ஆண்டிலிருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கத்தில் வடக்கில் பாது­காப்பு படை­யினர் கையகப்­ப­டுத்­தி­யி­ருந்த ஆயிரக் கணக்­கான அர­சாங்க மற்றும் தனியார் காணிகள் முழு­மை­யாக விடு­விக்­கப்­படாவிட்­டாலும்கூட ஓர­ளவு காணிகள் அவற்றின் உரி­மை­யா­ளர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தன. அதே­நேரம், காணாமல் போனோர் தொடர்­பாக வருடக்கணக்கில் அவர்­க­ளது உற­வி­னர்கள் ஆர்ப்­பாட்டம் செய்தும்கூட அதற்கு எந்தவித­மான தீர்­வையும், பதி­லையும் பெற்றுக்கொடுக்க முடி­ய­வில்லை.

கிழக்கு மாகா­ணத்திலுள்ள முஸ்­லிம்கள் அனை­வ­ருமே தீவி­ர­வா­தத்­துக்கு ஆத­ர­வா­ன­வர்கள் அல்லர் என்­பதை நிரூ­பித்து வந்­துள்­ளார்கள். குண்டு வெடிப்பில் உயி­ரி­ழந்த முஸ்லிம் தீவி­ர­வா­தி­களின் உடல்­களைக் கூட புதைப்­ப­தற்கு அங்­குள்ள மக்கள் இடம் கொடுக்­க­வில்லை. அவர்கள் தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரா­ன­வர்கள் என்­பதை பல சந்­தர்ப்­பங்­களில் எடுத்துக் காட்­டியும் பெரும்­பான்மை சமூகம் அதன் கடும் போக்­கி­லி­ருந்து விடு­ப­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை. எனவே, சிறு­பான்மை சமூ­கங்­களின் ஒற்­று­மையே இந்த நாட்டில் அவர்கள் கௌர­வ­மாக வாழ்­வ­தற்கு வழி சமைக்கும் என்­பது உண­ரப்­பட்டு வரு­கின்­றது.

 மேலும் கூட்­டணி அமைக்கும் முயற்சி

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பலம் பொருந்­திய அமைப்­பாக இருந்து வந்­துள்­ளது. எனினும், அதன் போக்கில் இளைய சமூகம் திருப்தி கொள்­ளாத நிலை­யி­லேயே இருந்து வரு­கின்­றது. அதற்­கான கார­ணத்தை ஜனா­தி­பதித் தேர்­தலின்போது வெளிப்­ப­டை­யா­கவே கூறியும் இருந்­தார்கள். இருந்தும் அவர்­களின் கருத்­துக்­க­ளுக்கு செவி சாய்க்­காத நிலையில், மேலும் ஒரு கூட்­டணி உரு­வாகும் வாய்ப்பும் தோன்­றி­யுள்­ளது. விரைவில் வட­மா­காண முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் தலை­மையில் மற்­று­மொரு கூட்­டணி உத­ய­மாகி தேர்­தலில் போட்­டி­யி­ட­வுள்­ளது.

இவ்­வாறு பல கூட்­ட­ணிகள் உரு­வாகி தலை­மைத்­துவப் போட்­டிகள் அதி­க­ரிக்கும் போது, சிறு­பான்மை மக்­களின் பலத்தை  இழக்கக்கூடிய ஆபத்தும் காத்­தி­ருக்­கின்­றது. அதே­நேரம், பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வெற்றி பெறும் போது, ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் பேரம் பேசும் சக்­தியைப் பெற்றுக்கொள்ளக் கூடிய சந்­தர்ப்­பமும் இருக்­கின்­றது.

 மலை­யக மக்கள் அன்றும் இன்றும்

மலை­யக மக்­களைப் பொறுத்த வரையில் கடந்த ஆண்டு அவர்­களின் அர­சியல் உரி­மை­க­ளுக்கு வழி­வ­குத்த ஆண்­டாகத் திகழ்ந்­துள்­ளது.  மலை­யக மக்­க­ளுக்கு தலா ஏழு பேர்ச் காணியில் தனி வீடு­களை அமைத்துக் கொடுக்கும் திட்டம் முன்னாள் அமைச்சர் பி. திகாம்­பரம் தலை­மையில் மலை­நாட்டு புதிய கிரா­மங்கள் அமைச்சின் ஊடாக இடம்­பெற்று வந்­த­தோடு, அவற்­றுக்­கான காணி உறுதிப் பத்­தி­ரங்­களும் பெற்றுக் கொடுக்­கப்­பட்டு வந்­துள்­ளது. இந்­திய அர­சாங்­கத்தின் 4ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்­கப்­பட்டு பய­னா­ளி­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. உலக வங்­கியின் உத­வி­யுடன் சுத்­த­மான குடிநீர் வழங்கும் திட்­டமும் அமுல்­ப­டுத்­தப்­பட்டு வந்­தது. சிறுவர் அபி­வி­ருத்தி நிலை­யங்கள் நவீன முறையில் அமைக்கப்­பட்­டுள்­ளன.

2017ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்தில் கொண்டு வரப்­பட்ட பிரே­ர­ணையின் அடிப்­ப­டையில் இந்­திய வம்­சா­வளி தமிழ் மக்கள் செறிந்து வாழும் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் இருந்த 5 பிர­தேச சபை­க­ளுக்கு மேல­தி­க­மாக இன்னும் 5 பிர­தேச சபைகள் அதி­க­ரிக்­கப்­பட்டு மொத்­த­மாக 10 பிர­தேச சபைகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. உள்­ளூ­ராட்சி சபைகள் 6இல் தமி­ழர்­களே தலை­வர்­க­ளாக பதவி வகித்து நிர்­வாகம் செய்து வரு­கின்­றார்கள்

பிர­தேச சபைகள் ஊடாக தோட்டப் பகு­தி­க­ளுக்கு அபி­வி­ருத்தி வேலைத் திட்­டங்­களை மேற்­கொள்ள முடி­யாது என்றிருந்த பிர­தேச சபை சட்­டத்தில் கடந்த ஆண்டில் திருத்தம் கொண்டு வரப்­பட்டு அது தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­தலும் வெளி­வந்­துள்­ளது. அதன்­படி இனிமேல் தோட்­டப்­ப­கு­தி­களில் அபிவிருத்திப் பணி­களை முன்­னெ­டுக்க எந்த வித­மான தடையும் சட்ட ரீதியில் கிடை­யாது. தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி­யினர் இதற்­கான முன்­மொ­ழி­வு­களை பாரா­ளு­மன்­றத்தில் கொண்டு வந்து வெற்றி பெற்­றுள்­ளார்கள்.

 பிர­தேச சபைகள் அதி­க­ரிக்­கப்­பட்­டது போல, மேல­தி­க­மாக ஐந்து பிர­தேச சபை­களை அமைப்­ப­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் பெறப்­பட்டு வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யா­கி­யுள்­ளது. இவற்­றுக்­கெல்லாம் முத்­தாய்ப்பு வைப்­பது போல, மலை­ய­கத்தில் அபி­வி­ருத்திப் பணி­களை தங்கு தடை­யின்றி மேற்­கொள்­வ­தற்கு மலை­ய­கத்­துக்­கென தனி­யான “அபி­வி­ருத்தி அதி­கார சபை” உரு­வாக்­கப்­பட்டு வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யா­கி­யுள்­ளது. அதன் தலை­வ­ராக சந்­திரா சாப்டர் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார். ஆறு பேர் கொண்ட பணிப்­பாளர் சபையும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

எதிர்­கா­லத்தில் மேற்­கொள்ள வேண்­டிய பணிகள்

நீண்ட காலத்­துக்குப் பிறகு தனி வீடுகள் தேவை என்ற சிந்­தனை கடந்த ஐந்து வரு­டங்­க­ளாக மக்கள் மனங்­களில் வேரூன்றத் தொடங்­கி­யுள்­ளது. கடந்த அர­சாங்­கத்தில் கட்­டப்­பட்ட பல வீடுகள் முழுமை பெறாமல் உள்­ளன. ஜனா­தி­பதித் தேர்­தலைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டுள்ள கார­ணத்தால் அவற்றை பூர­ணப்­ப­டுத்த முடி­யாமல் போயுள்­ளது. எனவே, அவற்றை பூர்த்தி செய்து கொடுக்க வேண்­டி­யது இப்­போ­தைய அமைச்­சரின் பொறுப்­பாகும். முன்னாள் அமைச்சர் திகாம்­பரம் ஆரம்­பித்த வேலைத் திட்­டத்தை இப்­போ­தைய அமைச்சர் ஆறு­முகன் தொண்­டமான் இடை­நி­றுத்தி விடக்கூடாது. அவற்­றோடு மேலும் பல பய­னுள்ள திட்­டங்­களை ஏற்­ப­டுத்த வேண்டும்.

மலை­ய­கத்­துக்­கான தனி­யான பல்­கலைக் கழகம் தேவை என்­பது நீண்ட கால­மாக வலி­யு­றுத்­தப்­பட்டு வந்த ஒரு விட­ய­மாகும். கடந்த அர­சாங்­கத்­திலும் அமைச்­சர்கள் மனோ கணேசன், திகாம்­பரம், இரா­தா­கி­ருஷ்ணன் ஆகியோர் இது தொடர்­பான அறிக்­கையை தயா­ரித்­தி­ருந்­தார்கள். இப்­போது அதற்­கான முயற்­சி­களை அமைச்சர் ஆறு­முகன் தொண்­டமான் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி.பி. தேவராஜ் தலை­மையில் மேற்­கொண்டு வரு­வது வர­வேற்கத்தக்க விடயம் ஆகும்.

   அதே­போன்று, பெருந்­தோட்டப் பகு­தி­களிலுள்ள வைத்­தி­ய­சா­லைகள், போக்­கு­வ­ரத்து வீதிகள் அனைத்தும் தேசிய ரீதியில் உள்­வாங்­கப்­பட வேண்டும். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம். தில­க­ராஜா சுகா­தார மேம்­பாட்டுக் குழுவின் தலை­வ­ராக இருந்து பல சிபா­ரி­சு­களை வழங்­கி­யுள்ளார். அவற்றை நடை­மு­றைக்கு கொண்டு வர வேண்டும்.

   மலை­ய­கத்தில் தேசியப் பாட­சா­லைகள் இல்­லாமல் உள்­ளன. ஒரு காலத்தில் சில அதி­பர்கள் மலை­ய­கத்­துக்கு தேசியப் பாட­சா­லைகள் தேவை­யில்லை என்று எழுதிக் கொடுத்து நிரா­க­ரித்த சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் கூறப்­பட்டு வந்­துள்­ளது. எனினும், எமது மாண­வர்­க­ளுக்கு தேசியப் பாட­சா­லை­களை காலம் கடந்­தா­வது பெற்றுக் கொடுக்க முன்­வர வேண்டும்.

இன்று மலை­யக இளை­ஞர்கள் சர்­வ­தேச ரீதியில் விளை­யாட்­டுப்­போட்­டி­களில் பங்குபற்றி பதக்­கங்­களை வென்று வரு­கின்­றார்கள். மேலும் பலர் சாதனை படைக்கத் தயா­ராக இருக்­கின்­றார்கள். விளை­யாட்டுப் பயிற்­சிக்­கான கல்­லூ­ரிகள் எது­வுமே இல்­லாத நிலையில் அவர்­களால் சாதனை படைக்க முடியும் என்றால் எதிர்­கா­லத்தில் SPORTS  COLLEGE அமைக்­கப்­பட்டால் அவர்கள் எந்­த­ள­வுக்கு உச்­சத்தைத் தொடு­வார்கள் என்­பதை எண்ணிப் பார்த்து அதற்­கான முயற்­சி­களை எடுக்க வேண்டும்.

அத்­தோடு, கடந்த ஆண்டு ஜன­வரி மாதத்தில் கூட்டு ஒப்­பந்தம் செய்து கொள்­ளப்­பட்டு பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­களின் நாளாந்த அடிப்­படை சம்­பளம் 700 ரூபா­வாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த ஒப்­பந்தம் இன்னும் ஒரு வரு­டத்­துக்கு அமுலில் இருக்கும். அதற்­கி­டையில் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்­கப்­படும் என்று ஆறு­முகன் தொண்­டமான் கூறி­யி­ருந்தார். ஜனா­தி­பதித் தேர்தல் நேரத்தில் இன்­றைய ஜனா­தி­பதி கோத்தபாய ராஜ­பக் ­ஷவும் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். எனவே, எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் பெற்றுக்கொடுக்கப்படும் என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கூறியுள்ளமை தொழிலாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதைக் கட்டாயம் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

மலையகத்துக்கென உருவாக்கப்பட்டுள்ள அதிகார சபைக்கு ஆளணியினரை நியமித்து அதன் ஊடாக வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சுருக்கமாக கூறப் போனால், மலையகத்துக்குத் தேவையான சில அடிப்படை அரசியல் உரிமைகள் கடந்த காலத்தில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில அமுல்படுத்தப்படாமலும் உள்ளன. எனவே, எதிர்காலத்தில் மக்களின் நலன் கருதி அவற்றை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டிய பாரிய பொறுப்பு அரசியல்வாதிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது.  

இன்னும் இரண்டு மாதத்தில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் வெற்றி பெற்று தமது அரசியல் செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று மாத்திரம் மலையக அரசியல்வாதிகள் நினைக்கக் கூடாது. தம்மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உரிமைகளை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். புதிய ஆண்டு மலையகத்துக்கு விடிவை ஏற்படுத்தும் ஆண்டாக அமைய பிரார்த்திப்போம்!

 பானா.தங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41