எனக்கு கிடைத்த விருதுகள், கௌரவங்களை தந்தைக்காக இழக்க தயார்-பென்ஸ்டோக்ஸ்

01 Jan, 2020 | 04:47 PM
image

எனது தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதை காண்பதற்காக இந்த வருடத்தில் எனக்கு கிடைத்த விருதுகள் பாராட்டுகள் வெற்றிகள் அனைத்தையும் இழக்க தயராகயிருக்கின்றேன் என இங்கிலாந்துஅணியின் சகலதுறை வீரர் பென்ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

2019 இல் நான் மிகப்பெரும் சாதனைகளை நிலைநாட்டியுள்ள போதிலும் வருடஇறுதியில் எனதுதந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் இந்த சாதனைகளினை அர்த்தப்படுத்த முடியாத நிலையில் உள்ளேன் என அவர்குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவிற்கான விஜயத்தின் போது மோசமான உடல்நல பாதிப்பிற்கு உள்ளான பென்ஸ்டோக்சின் தந்தை  ஜெட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே பென்ஸ்டோக்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனது தந்தை தென்னாபிரிக்காவில் உள்ள மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதை பார்ப்பதற்காக உலக கிண்ணப்போட்டிகளின் போதுகிடைத்த பெரும் புகழயையும் பிபிசியின் விருதையும் இழப்பதற்கும் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் அற்புதமான இந்த வருடத்தின் இறுதியில் இந்த வருடம் எப்படிப்பட்டது என்பதை வர்ணிக்க முடியாத நிலையில் நான் உள்ளேன் என குறிப்பிட்டுள்ள பென்ஸ்டோக்ஸ் இந்த வருடம் மிகவும் சிறப்பான விடயங்களும் மோசமானவிடயங்களும் இடம்பெற்றன,ஆனால் தந்தைமருத்துவமனையி;ல் அனுமதிக்கப்பட்டுள்ளமை இந்த வருடத்தை அதனை அடிப்படையாக வைத்தே கணிப்பிடவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தில் எனக்கு கிடைத்த கௌரவம் விருது புகழ் அனைத்தையும்  கொடுத்தால் எனது தந்தை மகிழ்ச்சியுடன் இருப்பதை,ஆரோக்கியமாகயிருப்பதை கிரிக்கெட் பார்ப்பதை உறுதிசெய்வேன் என யாராவது என்னிடம் தெரிவித்தால் நான் எனது தந்தையின் உடல்நலத்திற்காக எனக்கு கிடைத்த புகழ் கௌரவம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள் என தெரிவிப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தந்தையின்உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ஆனால் முழுமையாக குணமடையவில்லைஅதற்கு சிறிது காலம் எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41