அவிசாவளை - கொஸ்கமவிலுள்ள சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான தற்போதைய நிலவரம் குறித்து ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சம்பவ இடத்துக்கு சென்றுள்ளார்.

அத்துடன் குறித்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள மக்களையும் பிரதமர் நேரில் சென்று சந்திக்கவுள்ளார். 

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க  அத்தனகல்ல விகாரைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்துள்ளார்.