உலக ஆர்ப்பாட்டக்காரர்களை ஒன்றிணைத்த சமூக ஊடகங்கள்-2019 இல் ஒரு புதிய போக்கு

Published By: Rajeeban

31 Dec, 2019 | 04:34 PM
image

நன்றி பிபிசி

உலகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன என எண்ணத்தோன்றும் நிலை 2019 இல் காணப்பட்டது.

 இந்த போராட்டங்கள் அனைத்து வேறுவேறு விதமானவை.

ஆனால் இந்த போராட்டங்களின் மத்தியில்  சில பொதுவானவிடயங்கள் காணப்பட்டன.

சமத்துவமின்மை,ஊழல்,உயர் குழாத்தினர் குறித்த சீற்றம் போன்றவை பொதுவாக இந்த ஆர்ப்பாட்டங்களிற்கு காரணமாக காணப்பட்டன.

ஆனால் இந்த போராட்டக்காரர்கள் ஒருவரிடமிருந்து மற்றவர்கள் கற்றுக்கொண்டுள்ளதையும் ஒருவருக்கு மற்றவர் ஆதரவாகயிருந்து கற்றுக்கொடுக்க முயன்றதையும் அவதானிக்க முடிந்தது.

இது நாடுகளின் எல்லைகளை கடந்து இடம்பெற்ற செயல், டிஜிட்டல் சாதனங்கள் இதனை சாத்தியமாக்கின.

டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட , ஒருவருடன் ஒருவர் தொடர்புபடுத்தப்பட்ட இளைஞர்கள் தந்திரோபாயங்களையும் சுலோகங்களையும் பகிர்ந்துகொண்டனர்.அவர்கள் கீதங்களை பகிர்ந்துகொண்டனர்,ஒருவருக்கொருவர் ஆதரவை வெளியிட்டனர்.

இது அதிகமாக ஹொங்கொங்கில் இடம்பெற்றது, ஹொங்கொங்கிலேயே ஆர்ப்பாட்டங்கள் பல மாதங்களாக இடம்பெறுகின்றன.

கண்ணீர் புகைகுண்டை ஹொங்கொங் ஆர்ப்பாட்டக்காரர்கள் செயல்இழக்க செய்வதை காண்பிக்கும்  வீடியோ சிலியில் பெருமளவில் பார்வையிடப்படுவதை ஹொங்கொங் பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் சமூகவியலாளர் பிரான்சிஸ்கோ ஒலிவொஸ் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்த வீடியோ 116,000 தடவை பகிரப்பட்டுள்ளது.

இதேபோன்று சூடானை சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் கண்ணீர் புகையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து வீடியோவொன்றில் லெபனான் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு கற்பிக்கின்றார்.

யீஸ்டையும் தண்ணீரையும் சேர்த்து ஒரு போத்தலில் வைத்திருங்கள் கண்ணீர் புகையால் நீங்கள் தாக்கப்பட்டால் அது ஒரு அதிசயம் போல உங்களின் வலியை குறைக்கும் என அவர் சமூக ஊடகத்தில் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேபோன்று காவல்துறையினரை தடுப்பதற்கு எவ்வாறு கற்களை பயன்படுத்தி வீதி தடைகளை அமைப்பது என சிலி ஹொங்கொங்கிற்கு கற்றுக்கொடுத்துள்ளது.

சிலியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் காவல்துறையினரை தொந்தரவு செய்வதற்காக லேசர்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

ஹொங்கொங் ஆர்ப்பாட்டக்காரர்கள் முகத்தை அடையாளம் காணும் புகைப்படக்கருவிகளை குழப்புவதற்கு லேசர்களை பயன்படுத்தினார்கள்.

வலுவான குறியீடுகளும் சமூக ஊடகங்கள் மூலம் பரவுகின்றன.

இதில் ஒன்று கசெரோலெஜோ. ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் மீதான கவனத்தை ஈர்ப்பதற்காக பானைகள் சமையல் உபகரணங்கள் போன்றவற்றை பயன்படுத்தி ஒலி எழுப்பி தங்கள் சீற்றத்தைவெளிப்படுத்துவார்கள்- இதுவே கசெரோலேஜோ எனப்படுகின்றது.

இது இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் பரவி வருகின்றது,கடந்த காலங்களில் அதிகளவு ஆர்ப்பாட்டங்களை சந்தித்திராத கொலம்பியாவில் இது தற்போது பரவுகின்றது.

சிலி பொலிவியா ஈக்குவடோர் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களே இதற்கான உந்துசக்தியை வழங்கியுள்ளன.இது 1970களில் வெனிசூலாவில் இடம்பெற்ற போராட்டங்களில் காணப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கீதங்களையும் தங்கள்மத்தியில் பகிர்ந்துகொள்கின்றனர்.

சிலியில் 1980களில் பிரபலமாக காணப்பட்ட பாடல் தற்போது கொலம்பிய இயக்கத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.

இதேவேளை லெபனானில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் ஈராக் சிலியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு ஆதரவாக பாடுகின்றனர்.

லெபனானில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தாங்கள் வன்முறையற்ற விதத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதை காண்பிப்பதற்காக வெளியிட்ட வீடியோ ஈராக்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கவர்ந்துள்ளது.

அவர்கள் லெபனானை பின்பற்றி பெண்கள் குழந்தைகளை ஆர்ப்பாட்டங்களிற்கு கொண்டுவந்தனர் , திருமணங்களை நடத்தினார்கள்,

ஆனால் இது ஈராக்கின் பாதுகாப்பு படையினரின் ஈவிரக்கமற்ற தாக்குதலிற்கு முன்னர் காணப்பட்ட நிலைமை .

சூடானை போல ஈராக் லெபனரில் பெண்களும் தங்களை போராட்டங்களில் இணைத்துக்கொண்டார்கள்

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04