காலங்கள் வாழ்வியலில் பல அனுபவங்களை புகட்டி செல்கின்றன - நஸிர்

Published By: Daya

31 Dec, 2019 | 02:36 PM
image

காலங்கள் வாழ்வியலில் பல அனுபவங்களை புகட்டி செல்கின்றன என நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார். 

“காலங்கள் வாழ்வியலில் அவ்வப்போது பல்வேறு அனுபவ பாடங்களைப் புகட்டி விட்டு செல்கின்றன. அவ்வாறே ஒவ்வொரு முறையும் மலரும் புத்தாண்டும் எமக்கு ஏதோ ஒரு வகையில் புதிய அனுபவங்ளை தரத்தான் போகின்றது. அதனை ஏற்று அவற்றை வாழ்வில் வளமாக்க நாம் துணிவோடு செயற்படவேண்டும்”

இவ்வாறு தமது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்திருக்கின்றார் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும் ஸ்ரீல. முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான நஸிர் அஹமட் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

நாம் இலங்கையர்கள் என்ற முறையில் இந்த புதிய புத்தாண்டில் அனைத்து இனத்தவர்களும் ஒருமனப்பட்டு இனநல்லிணக்கம், புரிந்துணர்வு, ஐக்கியம், சமாதானம் ஆகியவை இந்த நாட்டில் நிலைநிறுத்தப்படவும் - வலுப்படச்செய்யவும் ஒரணியாக செயற்பட முன்வரவேண்டும்.

நாட்டில் தற்போது தோன்றியுள்ள புரிந்துணர்வின்மை களையப்பட்டு அனைத்து இனத்தவர்களும் சமஉரிமை உடையவர்கள் என்ற கோட்பாடு கட்டியெழுப்பப்பட உறுதி கொள்ள வேண்டும். குறிப்பாக சிறுபான்மை சமூகங்கள் ஒன்றுபட்டு தமது அபிலாஷைகளை பெற்றுக்கொள்ள இவ்வாண்டில் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்தச் சூழல் உருவாகி உயர்த்துவம்பெற பிறக்கும் புத்தாண்டு அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்த வேண்டும் என எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் - என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58