பொது மக்களே அவதானம்..!: தகவல் தொழில்நுட்ப சங்கம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

Published By: J.G.Stephan

31 Dec, 2019 | 12:20 PM
image

ஸ்மார்ட் கையடக்கத் தெலைபேசி பாவிப்போருக்கு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் முக்கிய அறிவித்தலொன்றை வழங்கியுள்ளது. 

தங்களது கையடக்க தொலைபேசிகளுக்கு இந்தக் காலப்பகுதிகளில் கிடைக்கப்பெறும் குறுந்தகவல்கள் (SMS) தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவோருக்கு இந்தக் காலப்பகுதியில் விசேட தொலைபேசி இலக்கத்தின் ஊடாக குறுந்தகவல்கள் (SMS)  கிடைக்கப் பெறுகின்றன. அறியப்படாத இலக்கங்களிலிருந்து இவ்வாறான குறுந்தகவல்கள்(SMS)  கிடைக்கப் பெறுகின்றன. இவ்வாறாக வரும் குறுந்தகவல்களில்(SMS)  பெறுமதியான பரிசில்கள் வாடிக்கையாள்கள் வென்றிருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

அந்த பெறுமதியான பரிசை பெற்றுக்கொள்ள ஒரு தொகை பணத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறான குறுந்தகவல்கள்(SMS)  கிடைக்கப்பெறுவோர் தமது தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் என இச்சங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவர்கள் வழங்கும் வங்கி கணக்கு இலக்கங்களுக்கு பணம் வைப்பு செய்வதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறான குறுந்தகவல்கள் தொடர்பில் தமது சங்கத்திற்கு அறிவிக்குமாறும் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21