கொழுப்புக் கல்­லீ­ர­லுக்கு சிகிச்சை தேவையா?

31 Dec, 2019 | 11:56 AM
image

சமீப கால­மாக மக்கள் மத்­தியில் பரீச்­ச­ய­மான மருத்­துவ வார்த்­தை­களில் ‘கொழுப்புக் கல்­லீ­ரலும்’ (ஃபேட்டி லிவர் - Fatty liver) சேர்ந்­து­விட்­டது. முன்­பெல்லாம் 40 வயதைக் கடந்­த­வர்­க­ளுக்கு மட்­டுமே வரக்­கூ­டி­ய­தாக இருந்த இந்த நோய், இப்­போது குழந்­தை­க­ளுக்கும் வரு­கி­றது என்­ப­துதான் நம்மை உஷார்­ப­டுத்தியிருக்­கி­றது.



கொழுப்புக் கல்­லீரல் என்றால் என்ன?
பெயரே நோயைச் சொல்­கி­றது. அதா­வது, கொழுப்பு மிக்க கல்­லீரல்! இது எப்­படி ஏற்­ப­டு­கி­றது? எதற்கும் அச­ராத கல்­லீரல், இரண்டு விஷ­யங்­களில் ‘ஆட்டம்’ காண்­கி­றது. ஒன்று, மது. மற்­றொன்று, கொழுப்பு. மதுவில் இருக்கும் ஆல்­கஹோல் எப்­படிப் பல­சாலி கல்­லீ­ர­லையும் நோஞ்சான் ஆக்கி, நம்மை மரணக் குழிக்குள் தள்­ளு­கி­றதோ அது­போல கொழுப்புக் கல்­லீரல் பிரச்­சி­னைக்கு நாம் சாப்­பிடும் அதீத சர்க்­க­ரையும் கொழுப்பு மிகுந்த உண­வு­க­ளும்தாம் முக்­கியக் கார­ணங்கள்.


உடலில் உள்ள அதி­கப்­ப­டி­யான கொழுப்பைச் சேக­ரித்­து­வைப்­பதே கல்­லீ­ரல்தான். அவ­ச­ரத்­துக்கு உட­லுக்கு சக்­தியைத் தர இயற்கை தந்­தி­ருக்கும் ஏற்­பாடு இது. இப்­படி சேக­ரிக்­கப்­படும் கொழுப்பு ஒரு கட்­டத்தில் கல்­லீ­ர­லுக்கு எதி­ரி­யா­கி­வி­டு­கி­றது. அள­வுக்கு மிஞ்­சினால் அமிர்­தமும் நஞ்­சு­தானே.


எமது தவ­றான உணவுப் பழக்­கம்தான் கொழுப்புக் கல்­லீ­ர­லுக்கு முக்­கியக் காரணம். அதிலும் உடல் உழைப்பும் இல்­லாமல், உடற்­ப­யிற்­சியும் செய்­யாமல், மூன்று வேளையும் வயிறு முட்ட சாப்­பி­டு­கிறோம். இது போதா­தென்று இடை­யி­டையே நொறுக்­குத்­தீனி, வார இறுதி பார்ட்டி, மாதம் ஒரு பஃபே விருந்து.
அதிலும் செந்­நிற இறைச்­சிகள், துரித உண­வுகள், பதப்­ப­டுத்­தப்­பட்ட உண­வுகள், உட­னடி உண­வுகள்,  ஜெல்லி, கேக், சிப்ஸ், ஐஸ்­கிரீம், செயற்கை இனிப்­புகள், குளிர் பானங்கள் என எமது உண­வு­முறை முற்­றிலும் மாறி­விட்ட பிறகு, உடல் பருமன் பிரச்­சினை அதி­க­மாகி விட்­டது. தம் வாழ்­நாளில் மதுவை ஒரு­மு­றை­கூடத் தொடா­த­வ­ருக்கும் கொழுப்புக் கல்­லீரல் வரு­வது இப்­ப­டித்தான்.


கொழுப்புக் கல்­லீரல் பிரச்­சி­னைக்கு அடுத்த காரணம், நீரி­ழிவு நோய். இதில் இன்­சுலின் சரி­யாக சுரக்­காது என்­பதால், இரத்­தத்தில் இருக்­கிற சர்க்­கரை செல்­க­ளுக்குள் நுழைய முடி­யாது. அதுபோல் தேவைக்கு மேல் உள்ள கொழுப்பு அமி­லங்­களும் இரத்­தத்தில் தேங்கும்.
இவற்றைக் கல்­லீரல் தன் பக்கம் இழுத்­துக்­கொள்ளும். இதுவும் ஓர் அள­வுக்­குத்தான். அதற்குள் நீரி­ழிவு நோயைக் கட்­டுப்­ப­டுத்­தி­விட்டால், கொழுப்புக் கல்­லீ­ர­லுக்கு இட­மில்­லாமல் போகும். தவ­றினால், ‘முதல் கட்ட கொழுப்புக் கல்­லீரல்’ தலை­யெ­டுப்­பதைத் தடுக்க முடி­யாது.



கொழுப்புக் கல்­லீ­ரலின் பல நிலைகள்!
உண­வி­லி­ருந்து வரும் கொழுப்பு மொத்­தமும் கல்­லீ­ரலில் சேரும் ஆரம்ப நிலைக்கு ‘முதல் கட்ட கொழுப்புக் கல்­லீரல்’ என்று பெயர். பெண்கள் ஃபேசியல் செய்­யும்­போது சில கிரீம்­களை முகத்தில் பூசிக்­கொள்­வதைப் போல, கல்­லீ­ரலின் மேற்­புறம் மட்­டுமே கொழுப்பு படியும் நிலை. இது எந்­தவோர் அறி­கு­றி­யையும் வெளிக்­காட்­டாமல், எந்த வழி­யிலும் ஆரோக்­கி­யத்தைக் கொடுக்­காமல் அமை­தியாக இருக்கும். வேறு கார­ணத்­துக்­காக வயிற்றை ஸ்கேன் செய்­யும்­போது, கொழுப்புக் கல்­லீரல் இருப்­பது எதேச்­சை­யாகத் தெரியும்!


இந்த நேரத்தில் நாம் உஷா­ரா­கி­விட வேண்டும். முதல் கட்­டத்­துக்குக் காரணம் தெரிந்து அதைத் தடுக்க வேண்டும். இல்­லை­யென்றால், இது இரண்டாம் நிலைக்குத் தாவி­விடும். இப்­போது கல்­லீ­ரலில் அநேக பாதிப்­புகள் ஏற்­பட்­டி­ருக்கும். இது­வரை மேற்­பூச்­சாக இருந்த கொழுப்­புகள் கல்­லீ­ர­லுக்குள் ஊடு­ரு­வு­வதால் அங்கே அழற்­சியும் வீக்­கமும் உண்­டா­கின்­றன.


கல்­லீரல் செல்கள் இருக்கும் இடத்தில் ஆங்­காங்கே குவியல் குவி­ய­லாகக் கொழுப்பு செல்கள் இடம்பிடிக்­கின்­றன. வீட்டில் சமையல் அறை­யெங்கும் விருந்­தா­ளிகள் அமர்ந்­து­விட்டால், சமையல் எப்­படி நடக்கும்? அப்­ப­டித்தான், இப்­போது கல்­லீ­ரலின் செயல்­பாடு குறைந்து செரி­மானக் கோளா­றுகள் ஏற்­படுகின்றன. வயிறு வலிக்கும். வாந்தி வரும். சில­ருக்குக் காமாலை எட்டிப் பார்க்கும். அத்­தோடு சிர­மங்கள் நின்­று­கொள்ளும். இதற்கும் பயப்­படத் தேவை­யில்லை.

ஆபத்து எப்­போது ஆரம்­பிக்கும்?
கொழுப்புக் கல்­லீ­ரலின் மூன்றாம் கட்­டம்தான் ஆபத்­தா­னது. இதில், இது­வரை கல்­லீ­ரலில் அழற்சி ஏற்­பட்ட இடங்­களில் தழும்­புகள் தோன்றி, சுருங்கும். தேங்­காய்க்­குள்ளே இருக்­கிற பருப்பில் அதன் வெளிப்­பக்கம் இருக்­கிற நார்கள் இடம்­பி­டித்­து­விட்டால் எப்­படி இருக்கும்? கற்­பனை செய்­து­பா­ருங்கள். அப்­ப­டித்தான் கல்­லீரல் இப்­போது இருக்கும்.


இதற்கு ‘ஃபைப்­ரோசிஸ்’ என்று பெயர். இதுவே நாள­டைவில் ‘சிரோசிஸ்’ எனும் கல்­லீரல் சுருக்க நோய்க்குக் கொண்டு சென்று உயி­ருக்கு ஆபத்தை வர­வ­ழைக்கும். ஆனால், நவீனத் தொழில்­நுட்­பத்தில், இந்த நோய்க்குக் ‘கல்­லீரல் மாற்று அறுவை சிகிச்சை’ செய்து உயிரைக் காப்­பாற்­றவும் வசதி இருக்­கி­றது என்­பது ஆறுதல்.

என்ன பரி­சோ­த­னைகள் உள்­ளன?
கொழுப்பின் கார­ண­மாகக் கல்­லீ­ரலில் நேர்ந்­தி­ருக்கும் பாதிப்பைத் துல்­லி­ய­மாக அறி­வ­தற்கு என்சைம் பரி­சோ­த­னைகள் இருக்­கின்­றன. வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி. ஸ்கேன் அல்­லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்ப்­பதும் உதவும்.


அத்­துடன் ‘லிவர் பயாப்­சி’யும் கைகொ­டுக்­கி­றது. பயாப்சி எடுக்கப் பயப்­ப­டு­ப­வர்­க­ளுக்­கா­கவே ‘ஃபைப்­ரோஸ்கேன்’ எனும் நவீன சோதனை இப்­போது வந்­துள்­ளது. இதன் மூலம் நோயைக் கணித்து முதல் இரண்டு நிலை கொழுப்புக் கல்­லீ­ர­லுக்கு வாழ்க்­கை­முறை மாற்­றங்கள், விற்றமின் கலந்த ஆன்­டி­ஆக்­ஸி­டென்­டுகள், உண­வு­முறை மாற்­றங்கள் போன்ற வற்றைப் பின்­பற்றிக் கொழுப்புக் கல்­லீ­ரலை சமா­ளித்து விடலாம்.

என்ன செய்ய வேண்டும்?

  • மதுவை மறக்க வேண்டும்.
  • உடல் எடையைப் பேண வேண்டும்.
  • நீரி­ழிவைக் கட்­டுப்­ப­டுத்த வேண்டும்.
  • கொழுப்பு மிகுந்த உண­வு­க­ளான செந்­நிற இறைச்­சிகள், துரித உண­வுகள், பதப்­ப­டுத்­தப்­பட்ட உண­வுகள், உட­னடி உண­வுகள் போன்­ற­வற்றைக் குறைத்­துக்­கொள்ள வேண்டும்.
  • முக்­கி­ய­மாக, பாலா­டைக்­கட்டி மற்றும் வெண்­ணெய்யில் கவனம் தேவை.
  • நொறுக்குத் தீனி­களை ஓரங்­கட்ட வேண்டும். மைதா உண­வு­களும் வேண்டாம்.
  • இனிப்­பு­களைக் குறைத்­துக்­கொள்ள வேண்டும்.
  • உணவில் உப்பு அள­வோடு இருக்­கட்டும்.
  • வெள்ளை அரிசி உண­வு­களைக் குறைத்துக் கொண்டு, முழுத்­தா­னிய உண­வு­க­ளையும் சிறு­தா­னிய உணவு களையும் அதி­கப்­ப­டுத்த வேண்டும்.
  • கீரைகள், பழங்கள், காய்­க­றிகள் தேவைக்கு எடுத்­துக்­கொள்ள வேண்டும். ஃபிள­வி­னாய்டு நிறைந்த காய்­க­றிகள், பழங்கள் அதிக பலன் தரும். அதற்கு அவ­ரைக்­காய்க்கு முக்­கி­யத்­துவம் தர வேண்டும். தினமும் 3 கப் காய்­கறி தேவை.
  • சிவப்பு, ஆரஞ்சு, அடர் பச்சை மற்றும் மஞ்சள் நிறக் காய்­களும் பழங்­களும் சிறந்­தவை.
  • எண்ணெய்ப் பயன்­பாட்டைக் குறைத்­துக்­கொள்­வது நல்­லது.
  • தாவரப் புர­தங்­களைக் கூட்ட வேண்டும். உதா­ரணம்; பருப்பு மற்றும் பய­றுகள், முளை­விட்ட தானி­யங்கள்.
  • ஒமேகா 3 கொழுப்பு அமிலச் சத்­துள்ள மீன் உண­வு­களைச் சேர்த்­துக்­கொண்டால் நல்­லது.
  • தினமும் ஓர் உடற்­ப­யிற்சி அவ­சியம். நடைப்­ப­யிற்சி மிகவும் நல்­லது. சைக்கிள் ஓட்­டு­வதும் நீச்­சலும் அதே பலனைத் தரக்­கூ­டி­ய­வையே.
  • மன அழுத்தம் ஆகாது.
  • 6 - – 8 மணி நேரம் இரவுத் தூக்கம் தேவை.
  • இத்­த­னையும் சரி­யாக இருந்தால் கொழுப்புக் கல்­லீ­ர­லுக்கு நம் உடலில் இட­மில்லை; சிகிச்­சையும் தேவை­யில்லை.


உயிரை மீட்கும் முக்கிய உதவிக்குக் கூடுதல் விளக்கங்கள்!

  • எல்லா வயதினருக்கும் முதலுதவி செய்பவர் ஒருவராக இருந்தால் இதய அழுத்தம் 30 முறை கொடுத்துவிட்டு, இரண்டு முறை செயற்கை சுவாசம் தர
  • முதலுதவி செய்வதற்கு இருவர் இருந்தால், குழந்தைகளுக்கு இதய அழுத்தம் 15 முறை கொடுத்துவிட்டு, இரண்டு முறை செயற்கை சுவாசம் தர வேண்டும். முதலுதவி செய்பவர்களில் ஒருவர் செயற்கை சுவாசத்தையும், அடுத்தவர் இதய அழுத்தம் கொடுப்பதையும்
  • நிமிடத்துக்கு 100 லிருந்து 120 வரை அழுத்தம் கொடுப்பது என்னும் வேகத்தில் இதய அழுத்தம் தர வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04