நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு - டக்ளஸ் 

Published By: Digital Desk 4

30 Dec, 2019 | 09:24 PM
image

மக்களது தேவைகள் அவர்களது பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கு தீர்வு காண்பது தான் மக்கள் பிரதினிதிகளின் கடமை. அதை நான் சரியாகவே முடிந்தளவு செய்து வந்திருந்திருக்கிறேன் என கடல்தொழில் மற்றும் நிரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இரணைமடு நன்னீர் மீன்பிடி இறங்குதுறை பகுதிக்கு நேரில் சென்று பார்வைவிட்ட அமைச்சர் நன்னீர் மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிதிகளை சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தபின் கருத்து தெரிவிக்கையிலையே அவர் இவ்வறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

நீங்கள் எதிர்கொண்டுவரும் சாதாரண பிரச்சினைகளைக் கூட தீர்க்கப்படாமைக்கு உங்களது வாக்குகளால் அதிகாரத்தை பெற்ற பிரதிநிதிகளின் குறைபாடுகளும் ஆழுமையின்மையுமே காரணம்.உங்களது அவசியமான பிரச்சினைகள் தீர்க்க வேண்டியதும் தீர்க்கப்பட வேண்டியதுமானவை.

குறிப்பாக மீன்குஞ்சுகள் குளத்தில் விடும்.காலம் குறித்த பிரச்சினைக்கு தைமாதம் அல்லது மாசி மாத முற்பகுதியில் தீர்வு காணப்படும்.

அதுபோல குளம் வான் பாயும்போது மீன் குஞ்சுகள் வெளியேறுவதை தடுப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.நான் பொய்த்தனமான அரசியல் செய்வது கிடையாது.மக்களை அலையவிடுவதும் எமது நோக்கமல்ல.

நீங்கள் ஒவ்வொருவரும் நிரந்தரமான பொருளாதாரத்துடன் வாழ்வாதாரத்தை உருவாக்கிக்கொள்ள வழிவகைகள் செய்து தர்ப்படும்.அந்தவகையில் உங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து மற்றவர்களிடம் கையேந்தாத வகையில் கௌரவமான முறையில் வாழ்வதற்கான சூழ்னிலையை உருவாக்கிக் கொடுக்கவேண்டும் என்பதே எமது நோக்காகும்.

அதை நாம் உருவாக்கித்தர உங்களது ஆதரவுப்பலம் எமக்கு வேண்டும் என்றார்.

இதனிடயே இப்பகுதியில் சுமார் 138 வள்ளங்கள் உள்ளதாகவும் அவற்றை பாதுகாப்பாக கட்டுவதற்கு கூட வசதிகள் அற்ற நிலைகள் காணப்படுவதாகவும் கடற்றொழிலாளர்கள் இளைப்பாறுவதற்கு பொதுவான கட்டடம் இன்மை கணப்படுவதாகவும், குளத்தின் நீர்மட்டம் உயரும் காலங்களிலும் வறட்சியான காலப்பகுதியிலும் மீன் பிடி குறைவாக இருப்பதால் தொழிலாளர்கள் மட்டுமல்லாது அவர்களை நம்பி வாழும் குடும்பங்களினதும் பொருளாதார நிலை பாதிக்கப்படுகின்றது. இதற்கான தீர்வுகளை பெற்றுத்தருமாறும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04