2020 இல் நாட்டின் சுகாதார செயற்திட்டங்களை மேம்படுத்த விசேட செயற்திட்டம் 

Published By: Vishnu

30 Dec, 2019 | 07:41 PM
image

(எம்.மனோசித்ரா)

2020 ஆம் ஆண்டு நாட்டின் சுகாதார செயற்திட்டங்களை மேம்படுத்துவதற்கு சுகாதார அமைச்சுடன் இணைந்து சுகாதார மேம்பாட்டு பணியகம் நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளது. 

அவற்றின் மூலம் இலங்கை பெருமளவாகக் காணப்படும் டெங்கு நோய், எலி காய்ச்சல் மற்றும் உணவு ஒவ்வாமை உள்ளிட்டவை தொடர்பிலும், விபத்துக்கள் தொடர்பிலும் விஷேட வேலைதிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, புதிய சட்டங்களும் செயற்படுத்தப்படவுள்ளன. 

சுகதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகர் அனில் ஜசிங்க மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் நாயகம் குமார விக்கிரமசிங்க உள்ளிட்ட பல சிரேஷ்ட வைத்தியர்கள் கலந்து கொண்டு இவை பற்றி கருத்து தெரிவித்தனர். 

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட வைத்தியர் குமார விக்கிரமசிங்க தெரிவிக்கையில், 

பொதி செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சீனி, உப்பு மற்றும் எண்ணை என்பவற்றின் அளவை குறிக்கும் வகையில் நிறங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே குளிர் பானங்களில் காணப்படுவதைப் போன்று சீனி, உப்பு மற்றும் எண்ணை குறைவாகக் காணப்பட்டால் மஞ்சள் நிறமும், அளவாகக் காணப்பட்டால் செம்மஞ்சள் நிறமும் அதிகமாகக் காணப்பட்டால் சிவப்பு நிறமும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். புதுவருட ஆரம்பம் முதல் இம்முறையை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

அத்தோடு உணவு ஒவ்வாமையை மட்டுப்படுத்துவதற்காக 2020 இல் அமைக்கப்படும் அனைத்து சிற்றுண்டிசாலைகள், ஹோட்டல்கள் மற்றும் வீதியோர கடைகள் என்பன மாகாண சுகாதார திணைக்களத்திடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

புதிதாக இவற்றை அமைப்பவர்கள் மாகாண சுகாதார திணைக்களத்திடம் முன்னரே அனுமதி பெற வேண்டும் என்றும், ஏற்கனவே உள்ளவை ஒரு வருடத்திற்குள் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒரு வருட காலத்துக்குள் அனுமதியைப் பெற்றுக் கொள்ளாவர்கள் மற்றும் அனுமதி பெறாது உணவகங்களை அமைப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2020 ஆம் ஆண்டு நாடளாவிய சுகாதார செயற்பாடு;களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் புதிய அரசாங்கத்துடன் இணைந்து விரிவுபடுத்தப்படவுள்ளன. ' சபிரி கமக் ' என்ற வேலைத்திட்டத்தினூடாக ஒவ்வொரு கிராமங்களில் நேரடியாக சுகாதார மேம்பாட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. 

உணவு மாத்திமின்றி விபத்து, டெங்கு நோய், எலிக்காய்ச்சல் மற்றும் உணவு ஒவ்வாமை உள்ளிட்ட விடயங்களிலும் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29