தமிழில் தேசிய கீதம் பாடுவது தொடர்பில் அரசாங்கம் ஓர் நிலைப்பாட்டிற்கு வரவேண்டும் - டியூ குணசேகர 

Published By: Vishnu

30 Dec, 2019 | 07:01 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

தமிழில் தேசிய கீதம் பாடுவது தொடர்பாக அரசாங்கம் அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி பொதுவான இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என இலங்கை கம்யூனிஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் இடம்பெறும் சாதாரண பிரச்சினைகளையும் அரசியலாகும் நிலையே தற்போது இடம்பெறுகின்றது. ராஜித்த சேனாரத்ன மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரின் நடவடிக்கைகள் தொடர்பாக பொலிஸார், சட்டமா அதிபர் மற்றும் நீதிமன்றம் தங்களது கடமையை செய்வதற்கு விட்டுவிட்டு அரசியல்வாதிகள் அதுதொடர்பில் மெளனமாக இருக்கவேண்டும். ஆனால் இன்று அனைத்துவிடயங்கள் தொடர்பாகவும் ஊடக கழியாட்டமே இடம்பெறுகின்றது. அதனால்தான் சாதாரண விடயங்களும் அரசியலாக மாறுகின்றன.

அத்துடன் நாட்டில் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்களை அரசியலாக்கி நாட்டின் ஏனைய பிரச்சினைகளை மூடிமறைக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. இதற்கு பின்னர் உள்நாட்டு, வெளிநாட்டு அரச சார்ப்பற்ற நிறுவனங்களைச்சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். இவர்கள் புதிய புதிய பிரச்சினைகளை உருவாக்குவார்கள். அந்தவகையில் தற்போது நாட்டில் எழுந்திருக்கும் பிரச்சினைதான் தமிழில் தேசிய கீதம் பாடுவது தொடர்பான சர்ச்சையாகும்

இந்த விடயமானது சாதாரணவிடயமாக யாரும் கருதிவிடக்கூடாது. மிகவும் அமைதியான முறையில் பேசித்தீர்த்துக்கொள்ளவேண்டிய விடயமாகும். 

அமைச்சர்களோ அரசியல்வாதிகளோ இதுதொடர்பாக தேவையற்ற கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவிப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும். இந்த பிரச்சினையை பெரிதாக்கி மீண்டுமொரு கறுப்பு ஜூலையை ஏற்படுத்த வேண்டாம் என்றாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47