மன அழுத்த பாதிப்பிற்கு நிவாரணம் தரும் ஆர்ட் தெரபி

Published By: Digital Desk 4

30 Dec, 2019 | 06:50 PM
image

இன்றைய திகதியில் பாடசாலை செல்லும் சிறார்கள் கூட மன அழுத்த பாதிப்புக்குள்ளாகிறார்கள். இவர்களை அதிலிருந்து முழுமையாக விடுவிக்க ஆர்ட் தெரபி என்ற புதிய சிகிச்சை உதவிகரமாக இருக்கிறது.

12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் அல்லது  அத்தகைய வயதுக்கும் மேற்பட்டவர்களும் பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுவதுண்டு. அதிலும் குறிப்பாக சிலர் தாங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தும், அதனை விவரிக்க இயலாத சூழலில் இருப்பதுண்டு. இந்நிலையில் இவர்கள் சிகிச்சை பெறுவதற்காக மனநல நிபுணரை சந்திக்கும் பொழுது, அவர்கள் மருத்துவ நிபுணர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை அளிப்பதில்லை, 

இந்நிலையில் இவர்களுக்கு ஓவியம் வரைவது அல்லது வண்ணங்கள் தீட்டுவது, கோட்டேவியம் வரைவது உள்ளிட்ட கலை சார்ந்த சில பயிற்சிகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்வதுண்டு. அதன் போது அவர்கள் வரையும் கோடுகள், வண்ணங்கள், சில குறியீடுகளை வைத்து, தேர்ந்த மனநல நிபுணர்கள் அவர்களின் பாதிப்பிற்கு காரணமான விடயங்களை நுட்பமாகவும், துல்லியமாகவும் கண்டறிகிறார்கள், 

அதற்குப்பின் அந்த கலையை பயன்படுத்தி, அவர்களுக்கு சிகிச்சை அளித்து மன அழுத்த பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கும் உதவுகிறார்கள். இதற்கு ஆர்ட் தெரபி என்று பெயரிட்டிருக்கிறார்கள். இதனால் 100 சதவீதம் அளவிற்கு மன நல மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கபடுவார்கள் என்று சொல்வதற்கில்லை என்றாலும், கலைகளில் ஆர்வம் உடையவர்கள் இத்தகைய தெரபி மூலம் மீட்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் மனநல நிபுணர்கள்.

உதாரணமாக பாதிக்கப்பட்டவரிடம் உங்களைப் பற்றி ஏதேனும் வரைக என்று குறிப்பிட்டால், அவர்கள் கோடுகளின் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் குறியீடுகளின் மூலமாகவோ தங்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை உணர்த்துவார்கள். இதனை மன நல நிபுணர்கள் துல்லியமாக உணர்ந்து கொண்டு அவர்களுக்கான, அவர்கள் விரும்பும் கலைப் பயிற்சியை வழங்கி மன அழுத்த பாதிப்பிலிருந்து மீட்பார்கள்.

டொக்டர் ராஜ்மோகன்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32
news-image

ட்ரைஜெமீனல் நியுரால்ஜியா எனும் முக நரம்புகளில்...

2024-04-05 09:27:49